[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 04:08.26 PM GMT ]
வவுனியாவில் நகரசபைக்கு முன்னாள் உள்ள மைதானத்தில் பிரஜைகள் குழுவும் பல்கலைக்கழக ஒன்றியங்கள் அமைப்பும் இணைந்து நடாத்திய கண்டனக் கூட்டத்தில் பாஸ்கரா மேலும் உரையாற்றுகையில்,
இது எமது ஆட்சிக்காலம், நாமும் ஆளும் கட்சியில் பங்காளிகள், எமது தலைவர் மனோகணேசன் தேசிய நிறைவேற்று சபையில் உள்ளார். அவர் அச் சபையில் முதலமர்வில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் விபரங்களை கேட்டதற்கிணங்க ஒரு தொகை சிறையில் உள்ளவர்களின் விபரம் கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலதிக விபரம் வெகுவிரைவில் ஜனாதிபதி மைத்திரி அவர்களால் வழங்கப்பட்ட உறுதிதொழிக்கமைய வெளியாகும் இதில் எமக்கு நம்பிக்கை உண்டு.
மேலதிகமாக பூசா முகாமில் படை முகாம்களில் மற்றும் இரகசிய முகாம்களில் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் சமர்ப்பிக்கப்படும்படி தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இரகசிய முகாம்களை கண்டறிந்து அதை தயாரிக்கும்படி பாதுகாப்பு செயலாளரிடம் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற தலைவரின் செய்தியையும் எமது கட்சியைப் பொறுத்தவரையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டவர்களும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடியாமல் தடுத்து வைக்கப்பட்டவர்களும் விசாரணை முடிந்து தண்டனை அனுபவிப்பவர்களும் உடன் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தால் நீதியான முறையில் விடுதலை செய்யப்படவேண்டும்.
இதில் எமது கட்சிக்கு மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லாமல் நாம் தெளிவாக உள்ளோம் என்ற தலைவரின் செய்தியையும் இங்கு தெரிவித்துக் கொள்வதாகக் கூறியதுடன் இதனோடு காணாமல் போய் இரகசியமான முகாம்களில் இருப்பவர்கள் விபரம் உடனடியாக வெளிக்கொண்டுவர வேண்டும்.
உறவுகளைத் தேடி தினந்தினம் செத்து பிழைக்கும் உறவுகளுக்கு விமோசனம் கிடைக்க வேண்டும். நாம் சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்த தினத்தில் தமிழ் மக்களுக்கு இந்த சுதந்திரம் கிடைக்கவில்லை இவ் ஆட்சிக்காலம் சாதகமான காலம் இந்த காலத்தைநாம் சரியாக பயன்படுத்தி எமது தேவைகளை வெல்ல வேண்டும்.
மேலும் இப்படியான போராட்டங்கள் மேலும் மேலும் நடத்தப்பட வேண்டும் இப் போராட்டங்கள் வடக்கு கிழக்கு மட்டுமன்றி கொழும்பு தொடக்கம் அம்பாந்தோட்டை வரைக்கும் நடாத்தப்பட வேண்டும்.
இப்போது ஒரு பயமும் கிடையாது இது அரக்க மகிந்த ஆட்சி அல்ல, ஜனநாயக மைத்திரி ஆட்சி. இப் போராட்டங்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்பட வேண்டும்.
உதாரணமாக இப் போராட்டம் வன்னி பஸ் தரிப்பிடத்தில் நடாத்தப்பட்டிருந்தால் இன்னும் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி பாரிய செய்தியாக வெளிவந்திருக்கும் இப்படியான பாரிய போராட்டங்கள்தான் உலகநாடுகளுக்கான செய்தியாகவும் உலகநாடுகள் இவ்விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான உந்துதலாகவும் அமையும்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்கள் அரசுடன் சேர்ந்து நிம்மதியாக வெளியில் இருக்கும் பொழுது அவர்களின் கட்டளையை நிறைவேற்றியவர்களும் ஒத்தாசை செய்தவர்களும் ஒன்றுமறியாத அப்பாவிகளும் சிறையிலும் தடுப்பு முகாமிலும் இருப்பது எவ்விதத்தில் நியாயமாகப்படும், இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் நாம் தெளிவாக உள்ளோம் நாம் அரசின் பங்காளிக் கட்சி என்றாலும் கூட எமதுமக்களின் அழுகைக்குரல் தீர்க்கப்பட வேண்டும்.
இப்படியான போராட்டங்களில் அரசிற்கு வெளியில் இருந்து அழுத்தத்தையும் உள்ளே தேசிய நிறைவேற்று சபையில் உள்ள எமது தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களால் உள்ளேயும் அழுத்தங்களை பிரயோகித்து காணாமல் போனோர் சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக ஏங்கும் உறவுகளின் விடியலுக்கான உடனடிப் பாதைதிறக்க வழி செய்யும் என்றார் பாஸ்க்கரா.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkw4.html
ராஜபக்சவின் தியானசாலை காணொளியை தாமதித்து ஒளிபரப்புமாறு உத்தரவு
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 04:20.41 PM GMT ]
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, சுவர்ணவாஹினி செய்தியாளர்களுடன் இணைந்து பெப்ரவரி 3ஆம் திகதியன்று குறித்த சொகுசு தியான நிலையத்தை கண்டுபிடித்தனர்.
எனினும் பெப்ரவரி 6ஆம் திகதியே அதனை ஒளிபரப்ப அனுமதி கிடைத்தது.
நிறுவனத்தின் தலைமையிடம் இருந்தே தாமதத்துக்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடவத்தை, இம்புல்கொட என்ற இடத்தில் அமைந்திருந்த இந்த தியான நிலையம், 8 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 1000 மில்லியன் ரூபாய்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய குளியலறை பொருத்திகள் இதில் காணப்பட்டன. அத்துடன் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த இடம், மன்னன் வலகம்பா வசித்த இடம் என்று கருதப்படுகிறது.
இதேவேளை இந்த தியான நிலையத்தை சுற்றி சுமார் 60 படையினர் கடந்த ஜனவரி 8ஆம் திகதி வரை பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkw6.html
போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 04:15.20 PM GMT ]
அடுத்த மாதத்தில் விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
விசாரணை குழுவின் தலைவர் சன்ட்ரா பெய்ராஸை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேசினார். இதன்போது குழுவின் அறிக்கை திட்டமிட்டப்படி பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எனினும் இந்தக்கோரிக்கைக்கு சண்ட்ரா என்ன பதிலை வழங்கினார் என்ற தகவல் வெளியாகவில்லை.
ஏற்கனவே குறித்த அறிக்கை சமர்ப்பிப்பை தாமதிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. அத்துடன் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணையை கோரிய அமெரிக்காவும் ஆதரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதேவேளை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு தாமதிக்கப்படுமானால், அறிக்கை தொடர்பில் எந்த நம்பிக்கையையும் கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkw5.html
Geen opmerkingen:
Een reactie posten