தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 februari 2015

ஐ.நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம்: 4வது நாள்

சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி ஆதரவு வழங்குவார்? எதிர்க்கட்சித் தலைவர்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 05:15.21 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்குவார் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதி வலிமை அடைவதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்றுக்கொள்ளும் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வரவு-செலவுத் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கியது போல ஜனாதிபதியும் எமக்கு ஆதரவு வழங்குவார் என எதிர்க்கட்சி தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjo2.html

மலையக மக்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கியுள்ளது: ஸ்ரீதரன்- தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: கணபதி கனகராஜ்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 05:27.24 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களின் மத்தியில் ஒற்றுமை மேலோங்கி வருகின்றது. இதனை மேலும் வலுப்படுத்துவதற்கு தோட்டக்கோவில் நிருவாகங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
புசல்லாவை ரொச்சைல்ட் ஜி.எல் தோட்டப்பிரிவில் இராமர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் புசல்லாவை அமைப்பாளர் சண்முகராஜ் ,இறம்பொடை அமைப்பாளர் அந்தனிராஜ் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாக்களித்ததன் பயனாக இன்று நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளது.
நல்லவர்கள் யார், கள்வர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் தற்போது அறிந்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் மத்தியில் கடந்த காலங்களைவிட ஒற்றுமை நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த ஒற்றுமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அனைவரும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும். தோட்டங்களில் ஆலயங்கள் கட்டப்படுவது இன்றியமையாததாகும். ஆலய வழிபாடுகள் மூலம் ஆன்மீகத்தினையும் நல்லொழுக்கத்தினையும் ஏற்படுத்த முடியும்.
அந்த வகையில் இராம் படை எனும் இறம்பொடை என்றும் சொல்லப்படுகின்ற இந்தப்பிரதேசத்தில் இராமர் ஆலயமொன்று அமைக்கப்படுவது வரவேற்கத்தக்க விடயமாகும். அத்துடன் இந்தப்பிரதேசத்தில் ஆஞ்சநேயர் ஆலயமொன்றும் உள்ளமை சிறப்பம்சமாகும்.
எனவே இந்த ஆலய நிர்மாணப்பணிக்கு தொழிலாளர் தேசிய சங்கம் நிச்சயமாக நன்கொடைகளை நல்கும். தலைவரும் அமைச்சருமான திகாம்பரத்தின் தலைமையில் மலையகத்தில் இனிவரும் காலங்களில் நல்ல பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
தேயிலைக்கு விதிக்கும் ஏற்றுமதி வரியை நீக்கி தோட்ட தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: கணபதி கனகராஜ்
ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் ஏற்றுமதி வரியை நீக்கி அந்த வருமானத்தை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகரிக்கப்படும் சம்பளத்தோடு சேர்த்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கச்செய்யும் முதலாளிமார் சம்மேளனத்துடன் தோட்டத்துறை சார் தொழிற்சங்கங்கள் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் மார்ச் முப்பத்தோராம் திகதியுடன் முடிவடைவதால், புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னோடியாக மக்களுக்கு சலுகைகளை வழங்க சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமாக பேசப்படவேயில்லை. வழமையாகவே தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் பற்றி பேசுகின்ற அரச துறையினர் அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டிய தருணங்களில் அவர்களை மறந்துவிடுவது வழமையான நிகழ்வாகும்.
இலங்கை தொழிலார் காங்கிரஸ் மலையகத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலமும், போராட்டங்களின் மூலமுமே தீர்த்து வைத்து வந்துள்ளது. அதே போல எதிர்வரும் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் சமர்பித்த இடைக்கால வரவு செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அறிவித்துள்ளது. டிசல் ,மண்ணென்ணெய் பெற்றோல மற்றும் எரிவாயு ஆகியவற்றின் வரிகளை அகற்றி மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பள அதிகரிப்பை சிபார்சு செய்துள்ளது. இத்துடன் ஒய்வூதியம் பெருபவர்களும் நன்மையடைந்துள்ளனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் தொடர்பில் எவ்வித முன்மொழிவும் இடம்பெற்றிருக்கவில்லை.
அரசாங்கம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் பெற்றுக்கொள்ளும் பெருமளவு வரிவருமானத்தை தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணமாக வழங்க முடியும். கூட்டு ஒப்ந்தத்தின் மூலம் அதிகரிக்கப்படவுள்ள சம்பள அதிகரிப்புடன் இந்த வரி நிவாரணத்தையும் சேர்த்து வழங்கி தோட்டத் தொழிலாளரின் சம்பளத்திற்கு அரசாங்கம் பங்களிக்க வேண்டும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjo3.html

சுங்கத் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 05:31.07 AM GMT ]
இலங்கை சுங்க திணைக்களத்தின் வருமானம் நூற்றுக்கு 6 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 
கடந்த 21 நாட்களினுள் சுங்க நிறுவனத்தின் வருமானம் 6 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதை குறித்து நான் பாராளுமன்றத்திற்கு மகிழ்ச்சியாக அறிவிக்கின்றேன் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.


ஐ.நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம்: 4வது நாள்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 05:45.30 AM GMT ]
ஐ.நாவை நோக்கி பிரித்தானியாவிலிருந்து பெப்ரவரித் திங்கள் நான்காம் நாள் ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் 4வது நாளாகத் தொடர்கிறது.
சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலக நீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் (தமிழீழத்திலும்) தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இவ்விடுதலைச்சுடர் போராட்டமானது நேற்று Wembley Park இல் ஆரம்பமானது.
தமிழ் இளையோரமைப்பு உறுப்பினர் கே சதாபாலன் அவர்கள் விடுதலைச்சுடரினையும் சுடர்போராட்டத்திற்கான பிரித்தானிய ஒருங்கிணைப்பாளர் உதயனன் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியையும் ஏந்தியவாறு செல்ல, வடமேற்கு லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் கோபிநாத் நித்தியானந்தம் அதே பகுதி செயற்பாட்டாளர் நவரட்ணசிங்கம் கந்தையா (சின்னராசு) ஆகியோர் நேற்றுக் காலை நேரப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Lady Margret Road ஊடாக முன்னெடுக்கப்பட்ட காலை நேரப் போராட்டம் மதியம் 12 மணி 30 நிமிடமளவில் Swiss Cottage இல் இடைநிறுத்தப்பட்டது.
இதன்போது liberal Democrat கட்சியைச் சேர்ந்த Brent பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் Ms Sarah Teather , Labour கட்சியைச் சேர்ந்த Hampstead, Kilburn பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் Ms Glenda Jackson ஆகியோரிடமும் மனுக்கள் சேர்ப்பிக்கப்பட்டன.
இப்போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிய சிறுவெளியீடுகளும் மக்களிடம் கொடுக்கப்பட்டன.
பிற்பகல் 2.30 அளவில் வடகிழக்கு லண்டன் பகுதி Enfieldல் மீண்டும் ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டத்தின் போது, விடுதலைச்சுடரினை கே. கௌத்தமன் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியினை கே.விபுல் அவர்களும் ஏந்தியவாறு செல்ல, வடகிழக்கு லண்டன் மாவீரர் பணிகள் செயலகப் பொறுப்பாளர் பிரேம், அரசியல் பரப்புரை செயற்பாட்டாளர் சசி, முரளி, பேரின்பராசா, வடகிழக்கு லண்டன் ஒருங்கிணைப்பாளர் பகீர், சுடர்போராட்டத்திற்கான பிரித்தானிய ஒருங்கிணைப்பாளர் உதயனன் ஆகியோர் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
Edmondon உட்பட பல இடங்கள் ஊடாகச் சென்று Walthamstrow என்னும் இடத்தில் மாலை 6 மணி 30 நிமிடமளவில் அளவில் நான்காம் நாள் விடுதலைச்சுடர் போராட்டம் நிறைவு பெற்றது.
இப்போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுடன் அவ்வப்பகுதி மக்களும் இணைந்து கொண்டனர்.
Enfield வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு Nick De Bois, Edmondon நாடாளுமன்ற உறுப்பினர் Andy Love, Walthamstrow நாடாளுமன்ற உறுப்பினர் Ms Stella Creasy ஆகியோரிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjo5.html


Geen opmerkingen:

Een reactie posten