[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 05:50.53 AM GMT ]
குற்றப்புலனாய்வு பிரிவின் அழைப்பிற்கு அமைய இன்று காலை 09.00 மணிக்கு சென்றுள்ளார்.
போதை பொருள் வியாபாரியான சமந்த குமார எனப்படும் வெலே சுதா கடந்த நாட்களில் ரகசிய பொலிஸாருக்கு வழங்கிய அறிக்கையில் தனக்கு துமிந்த சில்வா ஆதரவு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே குற்ற புலனாய்வு பிரிவு துமிந்தசில்வாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiuz.html
வரலாற்று சிறப்புமிக்க கல்லடி மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 05:51.42 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்கதும் முன்னூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்ததுமான இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் வியாழக்கிழமை ஆரம்பமானது.
மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை நடைபெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தினர்.
கும்பாபிசேக கிரியைகள் யாவும் வவுனியா குருமண்காடு ஸ்ரீவிநாயகர் ஆலய பிரதம குரு ஆகம கிரியா பாவலர், சிவாச்சாரிய திலகம், ஆகம கிரியாமணி சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் கலந்துகொண்ட சிவாச்சாரியர்களினால் நடாத்தப்பட்டது. திங்கட்கிழமை காலை 6.50தொடக்கம் 7.25மணி வரையுள்ள சுபவேளையிவல் மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.
நேற்று காலை விசேட கிரியைகள்,யாகம்,கும்ப பூஜை என்பன நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல தூபி கும்பாபிசேகம் செய்யப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து இராஜகோபுரம் மற்றும் பரிபால மூர்த்திகளின் ஆலயங்களும் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.
இந்த கும்பாபிசேக நிகழ்வின்போது பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiu0.html
ஈழவாதிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடசாலையொன்றில் நினைவரங்கம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 06:05.17 AM GMT ]
யாழ்ப்பாணம் கரவெட்டி பாடசாலையில் இவ்வாறு நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசனை குறித்த சிங்களப் பத்திரிகை ஓர் ஈழவாதியாக அடையாளப்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சிவநேசனுக்கு மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்த நினைவரங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கரவெட்டி பாடசாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நினைவரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அறிவிக்கவில்லை என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நினைவு கூர்ந்து நினைவரங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய சட்டத் தேவைகள் எதுவும் கிடையாது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiu1.html
Geen opmerkingen:
Een reactie posten