[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 06:21.38 AM GMT ]
நாமலின் கைக்கடிகாரங்களின் பெறுமதி 59 லட்சத்திற்கும் அதிகமானதென தெரியவந்துள்ளது. இதற்கமைய அவர் பயன்படுத்திய 13 கைக்கடிகாரங்களின் பெறுமதி 7 கோடியே 60 லட்சம் ஆகும்.
50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு இவ்வளவு செல்வங்களை பெற்றுக்கொண்டுள்ளார் என்ற மிக பாரிய கேள்வி ஒன்று எழுப்பப்படுகின்றது.
என்னிடம் 2, 3 கடிகாரங்களே உள்ளன அதில் சில கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டவை. இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்துகின்றன.எனினும் மக்கள் இவற்றை நம்புவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.
ஒரே கடிகாரத்தை வித்தியாசமான முறையில் புகைப்படங்கள் எடுத்து என் மீது சேறு பூசுவதற்கு நினைக்கிறார்கள், என இணையத்தளங்களில் இடம் பெற்ற கலந்துரையாடலுக்கு இவ்வாறு நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiu2.html
பசிலுக்கு பதிலாக சுசிலை நியமிக்குமாறு கோரிக்கை!
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 06:34.25 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கூட்டாக இணைந்து கோரியுள்ளனர்.
பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேல் மாகாணசபை உறுப்பினரான அரசியலில் களமிறங்கிய சுசில் மேல் மாகாணசபையின் முதலமைச்சராகவும் பின்னர் பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ள 92 இலங்கையர்கள்! அதிர்ச்சித் தகவல் அம்பலம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 07:05.14 AM GMT ]
இது தொடர்பாக சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி,
இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரால், 10.7 மில்லியன் டொலர் வைப்பில் இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 112வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சி வங்கி அதனது வாடிக்கையாளர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக பிபிசிக்கும் ஏனைய சில ஊடகங்களுக்கும் கசிந்த ஆவணங்கள் காண்பிக்கின்றன.
எச்.எஸ்.பி.சி.க்காக ஜெனீவாவில் வேலைபார்த்த கணினி நிபுணர் ஒருவர் 2007ல் கசியவிட்ட தரவுகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற தகவல்களே தற்போது வெளியாகியுள்ளன.
2006-2007 காலகட்டத்தில் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த மொத்தம் 203 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆறாயிரம் பேரின் கணக்கு விவரங்களை பிபிசியின் பனோரமா நிகழ்ச்சி ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
பிரஞ்சு பத்திரிகையான �ல மோந்த்�துக்கு இந்த தரவுகள் முதலில் கொடுக்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர் புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு என்ற அமைப்பினாலும் பிபிசி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களாலும் இந்த தரவுகள் ஆராயப்பட்டிருந்தன.
தனிநபர்கள் ரகசியக் கணக்குகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கும் எச்.எஸ்.பி.சி.யின் சுவிஸ் கிளைநிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி, அரசாங்க வரித்துறைக்கு தெரியாமல் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும் வழிகள் பற்றி இந்த வங்கி ஆலோசனை வழங்கியதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெளியில் தெரியாமல் பணம் வைக்கக்கூடிய வசதி தரக்கூடிய கணக்குகளை பயன்படுத்திக்கொண்டு, சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பதை எச்.எஸ்.பி.சி ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால் அவ்வகையான வங்கிக் கணக்குகளுக்குரிய விதிமுறைகளை தாம் முற்றாக மாற்றிவிட்டதாகவும், அவற்றின் வழியாக யாரும் வரி ஏய்ப்பு செய்ய இனி வாய்ப்பு இல்லை என்றும் எச்.எஸ்.பி.சி கூறுகிறது.
வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைப்பது என்பதே சட்டவிரோதம் என்றில்லை. ஆனால் வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பதுக்குவதற்காக இவ்வகை கணக்குகளை பலர் பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது.
வரி விதிக்கப்படாத வகையில் நிதியை நிர்வகிப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட செயல்தான். ஆனால் வரி ஏய்ப்பிற்காக பணத்தை பதுக்குவது சட்டவிரோதமானது.
அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் எச்.எஸ்.பி.சிக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
ஆனால் இந்த வங்கியின் தலைமையகமான பிரிட்டனில் கிரிமினல் விசாரணைகள் எதனையும் அது எதிர்கொள்ளவில்லை. விசாரிக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக எச்.எஸ்.பி.சி. கூறுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiu4.html
Geen opmerkingen:
Een reactie posten