மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் முதலில் முன்னெடுத்தது இ.தொ.கா தான்: ஆறுமுகன் தொண்டமான்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 04:56.38 AM GMT ]
கொட்டகலை ஸ்டொனிகிளிப் தோட்டத்திலும், ஹட்டன் செனன் பிரதேசத்திலும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மைதானத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் முடிவு பெற்று தற்போது அவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைகள் ஆரம்பிக்க போவதாகவும், பாராளுமன்றத்தை கலைத்து பாராளுமன்ற தேர்தல் நடத்தப்போவதாகவும் கூறியிருக்கின்றார்கள்.
எது எப்படி இருந்தாலும் இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு முடிவையும் எடுக்கும். அதேபோல தான் ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என முடிவு எடுத்தோம். ஆனால் இன்று சிலர் கூறுகின்றனா்.
நாங்கள் ஆதரவு வழங்கியதால் தான் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தார் என்று. ஆனால் மக்கள் சிந்தித்து இருந்தனா் அதனாலேயே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தார். ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என மலையகம் மட்டுமில்லாமல் வட கிழக்கிலும் இவ்வாறு மாற்றம் ஏற்பட வேண்டும் என அவா்கள் நினைத்தார்கள்.
அதனாலேயே இவ்வாறு மாற்றம் ஏற்பட்டதே தவிர சிலர் கூறுகின்றது போல் தனிப்பட்ட ரீதியில் வரவில்லை. அதேபோல் 100 நாள் வேலைத்திட்டத்தில் மலையகத்தை அபிவிருத்தி செய்ய போவதாக கூறி வருகின்றனர் மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான அடிதத்தளத்தை இட்டது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தான்.
இந்திய பிரதமர் வந்து மலையகத்தில் அடிக்கல் நாட்ட போகின்றார் என கேள்விப்பட்டேன். மார்ச் மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார். அதன்போது அவா் இங்கு அடிக்கல் வைப்பார். இதே 5 மாதத்திற்கு முதல் வந்திருந்தாலும் அடிக்கல் வைத்திருப்பார்.
அவ்வாறே நடக்கின்றதே தவிர யாரும் தனிப்பட்ட முறையில் சென்று கூட்டிக்கொண்டு வரவில்லை. 4000 வீடு திட்டத்தை கொண்டு வந்ததும் காங்கிரஸ், 3000 ஆசிரியர் நியமனங்களை கொண்டு வந்ததும் காங்கிரஸ், பரீட்சை வைத்ததும் காங்கிரஸ் தான்.
மலையகத்தில் காங்கிரஸ் அடித்தளமிட்டதுக்கு தான் மற்றவர்கள் உள்நுழைகின்றனா். மார்ச் மாதம் 30ஆம் திகதியோடு கூட்டு ஒப்பந்தம் முடிகின்றது. அடுத்து சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்தயிருக்கின்றோம். இந்த பேச்சுவார்த்தையை இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தான் மேற்கொள்ளவிருக்கின்றது.
மார்ச் 15ஆம் திகதிக்கு பிறகு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம் என முடிவு எடுத்திருக்கின்றோம். ஒரே சம்பளமாக பெற்றுக்கொடுக்க தீர்மானம் எடுத்துள்ளோம். எல்லோருக்கும் ஒரே சம்பளமாகவும் அதிகமாக உழைக்கின்றவர்களுக்கு மேலதிகமாக சம்பளத்தை உயர்த்தி கொடுப்பதுமாகவும் அந்த அடிப்படையில் தான் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் எடுத்துள்ளோம்.
மக்கள் கட்டுப்பாடாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம் என இதன்போது அவா் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdit4.html
பொது தேர்தலில் பிரதான கட்சிகளுடன் இணைந்து செயற்படுமாறு ஹெல உறுமயவிற்கு அழைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 05:09.33 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடந்த நாட்களில் இவ்வாறான வேண்டுக்கோள் ஒன்றினை முன்வைத்துள்ளதாகவும். இரு கட்சிகளின் கீழ் போட்டியிடுமாறு வேண்டுக்கோள்களில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமய பொது தேர்தலில் எடுக்க வேண்டிய மூன்று சந்தர்ப்பங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்கமைய கட்சியாக போட்டியிடுவது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுவது, அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான கூட்டணியின் கீழ் போட்டியிடுவது போன்ற சந்தர்ப்பங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் நாட்களை அறிவித்ததன் பின்னர் நாட்டில் இடம்பெறும் அரசியல் சூழ்நிலைகளை கவனத்திற்கு கொண்டுவந்து சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தீர்மானங்கள் எடுப்பதாக வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
உணவுடன் சிறை சென்ற திஸ்ஸவின் மகள்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 05:12.05 AM GMT ]
தன் தந்தைக்கான பகல் உணவுடன் சென்ற துல்மினி ஊடகத்திடம் தன் தந்தை நலமாக உள்ளதாகவும் வெகு விரைவில் பிணை கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
துல்மினி அத்தநாயக்க பிரித்தானியா நிவ் காசல் பல்கலைகழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடதக்கது.
தொடர்புடைய செய்தி: வெலிக்கடை சிறைக்கு சென்றார் மஹிந்த ராஜபக்ச
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdit7.html
இன்று வட மாகாண சபையில் முக்கிய தீ்ர்மானம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 05:31.09 AM GMT ]
எனினும் இன்றைய சூழ் நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை சபையின் அமர்வில் இலங்கை தொடர்பாக போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகள் மிக அசுரவேகத்தில் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் இந்த போர் குற்ற அறிக்கையை சமர்ப்பிக்காது பிற்போடலாம் என்ற தகவல்கள் வெளியாகிவரும் இத்தருணத்தில் வடமாகாண சபையில் சிவாஜிலிங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட இந்த தீர்மானம் அதிமுக்கியம் வாய்ந்ததாகும்.
எனவே இந்த முக்கிய தீர்மானம் சம்பந்தமாக வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரனால் விசேட அறிக்கை வெளியிடப்பட்டு அதற்கு ஆதாரமாக நீண்ட உரையை ஆங்கில மொழியில் வழங்கி முன்மொழியவுள்ளதாகவும், இதை தொடர்ந்து த.தே.கூ உறுப்பினர்கள் 30 பேரும் எழுந்து நின்று வழிமொழிய உள்ளதாக மிக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiuy.html
Geen opmerkingen:
Een reactie posten