தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

அவுஸ்திரேலிய தேர்தலில் தமிழர் போட்டி

அடுத்த முக்கிய பதவி ராஜிதவிடம்

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியிருக்கும் கட்சியின் அதியுச்சபீட மற்றும் தேசிய நிறைவேற்றுக் குழு கூட்டத்தின்போது இந்நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிய வருகின்றது.
சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகக் கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ, ஆட்சி மாற்றத்தோடு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதன் காரணமாகவே இப்பதவி வெற்றிடமானது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதி மன்றில் தப்பினர் ரஜீவ, அமீர் அலி

இவர்கள் இருவரதும் பாராளுமன்ற உறுப்புரிமையை செல்லுபடியற்றதாக்கக் கோரி, பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜெயந்த தாக்கல் செய்திருந்த மனுக்களை அவர் மீளப் பெறுவதாக அறிவித்ததையடுத்தே உச்ச நீதிமன்றம் இவ் உத்தரவைப் பிறப்பித்தது.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான இவர்கள் இருவரும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எதிரணிக்கு தாவியதைத் தொடர்ந்தே சுசில் பிரேம்ஜெயந்த மேற்படி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்.(ரி)

அவுஸ்திரேலிய தேர்தலில் தமிழர் போட்டி

மேற்கு அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் Prospect தொகுதியில் தாம் போட்டியிடுவதாக திரு.செல்வன் அறிவித்துள்ளார்.
இந்த வேட்பாளர், 15 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்து, தற்போது Wentworthville பிரதேசத்தில் சிறிய அளவிலான வர்த்தக முயற்சியின் உரிமையாளராக செயற்படுகிறார்.
தாம் பசுமைக் கட்சியைத் தெரிவு செய்வதற்குரிய காரணங்களை விபரித்த திரு.செல்வன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை உள்ளடங்கலாக மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுத்தவர்களில் பசுமைக் கட்சியின் அரசியல்வாதிகள் முதன்மையானவர்கள் என்று குறிப்பிட்டார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘பசுமைக் கட்சியின் அரசியல்வாதிகள் மனித உரிமைகளுக்காகவும், தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காகவும் நீண்டகாலம் குரல் கொடுத்து வந்தவர்கள் என்பது வரலாற்றில் பதியப்பட்டுள்ளது,’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய நாடாளுமன்றத்தில் செனற்றர் லீ ரியான்னன், செனற்றர் கிறிஸ்ரின் மில்னே ஆகியோரும், மாநில நாடாளுமன்றத்தில் டேவிட் ஷூபிரிட்ஜ் அவர்களும் தமிழர்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் பற்றி பேசிய விதத்தையும் சுஜன் செல்வன் நினைவுகூர்ந்துள்ளார்.

சுற்றாடல் பாதுகாப்பு, இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு போன்றவற்றில் தாம் அக்கறை கொண்டுள்ளதாகவும், கலாசார பன்முகத்தன்மையில் மிகவும் அவசியமானது என்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் அறிக்கையின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். இந்த வேட்பாளர் மனித உரிமைகளில் அக்கறை காட்டுவதுடன், அடிக்கடி விலாவூட் தடுப்பு நிலையத்திற்கு சென்று வருபவர் எனவும் தெரிகிறது.Sujen
http://www.jvpnews.com/srilanka/97161.html

Geen opmerkingen:

Een reactie posten