[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 12:40.33 PM GMT ]
மொரட்டுவ அங்குலானயிலிருந்து வந்த இவர்கள் ஹற்றன் நகரில் ஒரு மதுபான நிலையத்தின் அறையில் மேற்படி யுவதி உட்பட ஐந்து ஆண்களும் இவ்வாறு மதுபானம் அருந்தி புகைப்பிடித்து தவறான ரீதியில் இருந்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக ஹற்றன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின் கைது செய்துள்ளனர்.
மேற்படி பெண்ணை குறித்த மதுபான நிலையத்திற்கு மறைவாக கொண்டு சென்றதாகவும் இவர்களை கைது செய்யும் வேளையில் இவர்கள் அதிகமான போதை நிலைமையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலை ஒரு புனித தலம் எனவும், அங்கு செல்லும் யாத்திரீகர்கள் போதை நிலைமையில் செல்லக் கூடாது எனவும், மதுபானம் மற்றும் ஏனைய போதை பொருட்களை கொண்டு செல்லுதல் சட்டவிரோதம் எனவும், யாத்திரீகர்கள் அமைதியாக, பக்தியான நிலையில் சிவனொளிபாதமலைக்கு செல்ல வேண்டும் என பொலிஸார் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்த ஐந்து இளைஞர்களையும் ஒரு யுவதியையும் வைத்திய பரிசோதனையின் பின் ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவர்களை விசாரணை செய்த போது தங்களைக் கைது செய்ய வேண்டாம் எனவும், இச்சம்பவத்தை மறைக்குமாறும் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdht6.html
அநாதரவான நிலையில் 10 வயது சிறுவன் பொலிஸாரால் மீட்பு
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 12:58.59 PM GMT ]
இந்த சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் மீட்கப்பட்ட சிறுவனின் தாய் வேறொரு திருமணம் முடித்து தலைமறைவகியுள்ள நிலையில், தந்தையின் பராமரிப்பில் குறித்த சிறுவன் வளர்ந்து வந்ததாகவும், சிறுவனின் தந்தை கொழும்பில் பணிபுரிவதாகவும் 4 அல்லது 5 மாதங்களுக்கு பிறகே தன்னை பார்க்க வருவதாகவும் சிறுவன் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்திலிருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுவன் முத்துக்குமார் கண்ணதாசன் என தெரியவந்துள்ளதோடு, தனது கல்வியை மேற்கொள்வதற்கு கற்றல் உபரணங்களை பெற்றுக்கொள்வதற்கு யாரும் இல்லாத் காரணத்தினால் தனது கல்வியை தொடர முடியாதுபோனது என குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
மேலும் பொலிஸாரல் மீட்கப்பட்ட சிறுவன் நாளை ஹட்டன் நீதவான் நீதிமண்றத்தில் ஆஜார்ப்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் குறித்து பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdht7.html
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட்ட ஐவர் பலி
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 02:04.12 PM GMT ]
அம்பாந்தோட்டை பல்லேமலல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் வண்டியொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் குழந்தை ஒன்று உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரே திசையில் பயணித்த வாகனங்கள் இரண்டே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை விபத்தில் பெண்கள் உட்பட்ட ஐவர் பலி
அம்பாந்தோட்டை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் ஐந்துபேர் கொல்லப்பட்டனர்.
இதில் இருவர் பெண்களாவர்.
பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேரில் ஐந்து பேரே உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்தனர்.
காயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhuz.html
யோசித வெளிநாடு பயணம் செய்ய அனுமதித்திருக்கக் கூடாது!– ஜே.வி.பி.
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 02:18.39 PM GMT ]
லெப்டினன் யோசிதவிற்கு எதிராக கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான ஓர் நிலையில் யோசித டுபாய்க்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தனிப்பட்ட பயணத்திற்கு கடற்படைத் தளபதி அனுமதி வழங்கியுள்ளதாக, யோசிதவின் சகோதரர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.
விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தனிப்பட்ட பயணமொன்றுக்கு அனுமதி வழங்கியமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமன்றி திருமணம் செய்வதற்குக் கூட முன் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வர் என்ற காரணத்தினாலா என நலிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்புச் செயலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடிதம் ஒன்றின் மூலம் இந்த கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhu0.html
வீதியில் பந்தாடிய கார்!– சாரதி மயிரிழையில் உயிர்தப்பினார்!
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 02:26.15 PM GMT ]
இன்று பிற்பகல் மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் கார் தலை கீழாக நிற்பதை படத்தில் காணலாம்.
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்ற காரே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணைகளுக்கு உறுப்பு நாடுகள் மதிப்பளிக்கவேண்டும்- தமிழீழ அரசாங்கம்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 02:46.07 PM GMT ]
நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதில் உறுப்பு நாடுகள், இலங்கை மீதான சர்வதேச விசாரணை நடைமுறைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் போரின் போது கொல்லப்பட்டவர்களின் சார்பில் அவர்களுக்கு நீதியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் வருந்திக்கொண்டிருக்கும் குடும்பத்தினர் சார்பிலும் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஒருபோதும் போர்க்குற்றம், மனிதத்துவத்துக்கு எதிரான இனப்படுகொலை என்பவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வியடையுமானால், சர்வாதிகாரி அல்லது அரசாங்கம் ஒன்றுக்கு தமது மக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட வாய்ப்பை வழங்கிவிடும் என்று ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ருவாண்டாவில் ஐக்கிய நாடுகள் சபை கண்ட தோல்வியையும் இலங்கையில் படுகொலைகளை தடுக்க ஐக்கிய நாடுகளுக்கு முடியாமல் போனமையை பாடமாகக்கொண்டு செயற்படவேண்டும்.
தற்போதைய இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில், அது முன்னைய அரசாங்கத்தை விட வித்தியாசப்பட்டதல்ல. இன்றைய அரசாங்கம் இன்னமும் இராணுவ சூன்யத்தை மறுக்கிறது.
இராணுவத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்க அது ஏற்பாடுகளை செய்து வருகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியல்களை தர மறுக்கிறது. உள்ளுரில் இடம்பெயர்ந்த 50ஆயிரம் பேரின் மீள்குடியேற்றத்தை மறுக்கிறது. காணாமல் போனோர் தொடர்பில் இன்னும் சரியான எண்ணிக்கையை வழங்கவில்லை.
இந்தநிலையில் இலங்கையில் படுகொலைகளை யார்? ஏன்? எப்போது? மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை சர்வதேசம் எங்கும் உள்ள பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் இருந்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
எனவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமது பொறுப்பு மற்றும் கடமை என்ற அடிப்படையில் தமிழர்கள் தொடர்பில் சர்வதேசத்திடம் நடவடிக்கைகளை எதிர்ப்பார்ப்பதாக ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhu2.html
Geen opmerkingen:
Een reactie posten