[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 07:33.08 AM GMT ]
கிழக்கு மாகாண சபையில் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெறுவதா? இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று நபர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இணக்க அரசியலை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும், த.தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு மாகாண அமைச்சர் பதவியையும், தவிசாளர் பதவியையும் வழங்க இணக்கம்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஆராயவே கூட்டமைப்பு குழுவொன்றை நியமித்துள்ளது.
தண்டனைகள் தாமதமானால் குற்றவாளிகள் வலுவடைவர்
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 07:52.10 AM GMT ]
அதில் மிகவும் முக்கியமானது ஜனாதிபதித் தேர்தலில் தனக்குத் தோல்வி ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த மகிந்த ராஜபக்ச நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்தார் என்ற செய்தியாகும்.
இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டிருந்தால்; மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க உட்படப் பல அரசியல் தலைவர்கள் சிறை சென்றிருப்பர். இன்னும் சிலர் காணாமல் போயிருப்பர். நல்ல காலம் இராணுவ ஆட்சிக்கு படைத்தரப்பு சம்மதிக்கவில்லை என்று கேள்வி. எதுவாயினும் நாட்டில் இராணுவ ஆட்சியைக் கொண்டு வர முயற்சி செய்வதென்பது பாரதூரமான குற்றமாகும்.
இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுதல் என்ற பேரில் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். புதிய புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பிரிவினைவாதத்திற்கு துணைபோக மாட்டோம் என்று சத்தியம் செய்கின்ற நடைமுறை கூட அரசியல் அமைப்பில் புகுத்தப்பட்டது.
நிலைமை இதுவாக இருக்க, நாட்டில் இராணுவப் புரட்சியை ஏற்படுத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி ஏற்படுகின்றது.
அதுமட்டுமன்றி மகிந்த ராஜபக்சவின் சகோதரர்கள் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுகள் குறித்தும் இன்னமும் சட்ட நடவடிக்கை எடுக் கப்பட்டதாகத் தெரியவில்லை.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில், மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பொதுவில் குற்றவாளிக்கு உரிய தண்டனை என்பது உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
இல்லையேல் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அரசியல் புலத்தின் களநிலைமையை தமக்குச் சாதகமாக்கி விடுவர். அத்தகையதொரு நிலைமை நடக்குமாக இருந்தால் குற்றவாளிகள் பொய்ப்பிரசாரம் செய்து நியாயமான ஆட்சியை முறியடிக்கவும் செய்வர். அதற்கான சந்தர்ப்பமும் சாத்தியமும் இலங்கையில் தெரிகிறது.
குறிப்பாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட்டு பிரதமர் பதவியை பெறுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த முயற்சி வெற்றி தருமாக இருந்தால், இராணுவப் புரட்சியை ஏற்படுத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டு புஷ்வாணமாகி விடும்.
ஆகையால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் மீது உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். தமிழர் தரப்பில், போர்க்களத்தில் உயிர்நீத்த தன் உடன்பிறப்பை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றினால் அது குற்றம். மாவீரர் தினத்தில் நடுகல்லுக்கு மாலை அணிவித்தால் அது மகாகுற்றம். மாவீரர் நாளில் கோயில் மணி அடித்தால் அது தெய்வகுற்றம் என்று தமிழர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் படைத்தரப்பினர், இராணுவப் புரட்சி செய்ய முயன்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த மீது சட்ட நடவடிக்கை எடுக்க, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தயங்குவது ஏன்?
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து தமிழ் இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆட்சித் தலைவர் எது செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கொள்கையிலா மகிந்த மீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது? என்ற கேள்வி எழுவதில் மிகுந்த நியாயம் உள்ளது.
ஆகையால் குற்றவாளி தமிழரா? சிங்களவரா? என்று நோக்காமல் இழைக்கப்பட்ட குற்றம் யாது என்று அறிந்து சட்ட நடவடிக்கை எடுப்பதே நாட்டில் ஜனநாயகம் உயிர் வாழ்வதற்கு உதவும்.
அறிக்கையை பிற்போடும் நோக்கில் ஜெனிவா செல்லவுள்ள அரசதரப்பு
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 08:13.45 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை தாமதப்படுத்தும் செயற்பாட்டில் பான் கீ மூனிடம் சாதகமான பதில் கிடைக்காத நிலையில் அரசாங்கம் ஜெனிவா நோக்கி படையெடுக்கும் நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று மார்ச் மாதம் ஜெனிவா வுக்கு சென்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனை சந்தித்து இலங்கை குறித்த அறிக்கையை பிற்போடுமாறு கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
மறுபுறம் ஜெனிவா அறிக்கையை தாமதமின்றி மார்ச் மாதமே வெளியிடவேண்:டும் என்பதனை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜெனிவாவுக்கு சென்று இராஜதந்திர காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றது.
தற்போதைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலர் ஜெனிவா சென்று இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் சில வாரங்களில் மேலும் சிலர் ஜெனிவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 28வது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதியிலிருந்து 27ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
மார்ச் மாதம் 25ம் திகதி இலங்கை விசாரணை குறித்த அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனால் இந்த அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே இந்த அறிக்கையை தாமத்படுத்துவதற்கு அரசாங்கத் தரப்பிலும் அறிக்கையை தாமதமின்றி வெளியிடுவதற்கு கூட்டமைப்பின் தரப்பிலும் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படடு வருகின்றன. இரண்டு தரபபினரும் இந்த விடயத்தில் ஏட்டிக்குப் போட்டியான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த வௌ்ளி்க்கிழமை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை குறித்த அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோரியிருந்தார். எனினும் அதற்கு பதிலளித்திருந்த பான் கீ மூன் அது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் கைகளிலேயே தங்கியுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஜெனிவாவுக்கு விஜயம் செய்து அறிக்கையை பிற்போடும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசாங்கம் இலங்கையில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பாரிய அரசியலமைப்பு மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் அத்துடன் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்து ஜெனிவா அறிக்கையை பிற்போடும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் கலாநிதி ஜயந்த ஜெனிவா அண்மையில் சென்று பல்வேறு தரப்புக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
விசேடமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனையும் ஜயந்த தனபால சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதும் இந்த விடயங்கள் தொட்ர்பாக ஆராயப்பட்டுள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தன.
இந்தப் பிரேரணையின் ஊடாக இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசாரணை நடத்தும் என அறிவிக்கப்படடது.
அதாவது நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 27வது கூட்டத் தொடரில் இலங்கை விசாரணை குறித்த வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இது இவ்வாறு இருக்க ஐககிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை தாமதப்படுத்தப்படாது உரிய நேரத்தில் வெளியிடப்படவேண்டும் என்று கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை தாமதப்படுத்தப்பட் வெளியிடப்படுவதை தாங்கள் எதிர்ப்பதாகவும் அறிக்கை முன்னர் தீர்மானிக்கப்பட்ட நிலையிலேயே வெளியாகவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது இவ்வாறு இருக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யுத்த குற்ற விசாரணை அறிக்கையை சமர்பிப்பதில் எந்தவித மாற்றங்களும் இல்லை எனவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.
அந்த செயற்பாட்டு அட்டவணை நிகழ்சசி நிரலில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே அறிக்கை வெளியிடப்படுவதற்கு இன்னும் ஒரு மாத காலமே எஞ்சியுள்ள நிலையில் அந்த நிகழ்சசி நிரலில் இதுவரை மாற்றம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSaKdex0.html
Geen opmerkingen:
Een reactie posten