தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 februari 2015

இந்திய மீனவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அரச அதிபர் மீது மாறியது: மன்னாரில் பதற்றம்



வெளிக்கள ஊழியர்கள் மோட்டார் சைக்கிள்களை மீள ஒப்படைப்பதை தாமதப்படுத்தவும்! பிரதியமைச்சர் அமீர் அலி
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 08:44.23 AM GMT ]
31.12.2014ம் திகதிக்குப் பின்னர் கட்டணப் பணம் செலுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்ட அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்கள் தமது மோட்டார் சைக்கிள்களை மீள ஒப்படைப்பதை தாமதப்படுத்துமாறு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
31.12.2014ம் திகதிக்குப் பின்னர் கட்டணப் பணம் செலுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்ட அனைத்து வெளிக்கணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச உத்தியோகத்தர்களும் தமது மோட்டார் சைக்கிள்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தினை செயற்படுத்தல் திட்டத்தின் கீழ் வெளிக்களப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மோட்டார் சைக்களுக்காக ஒரே தடவையில் வழங்கப்படும் கட்டணத்தினை 31.12.2014ம் திகதிக்குப் பின்னர் அறவிட வேண்டாமெனவும், அவ்வாறான உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறும் தேசிய வரவு செலவு திட்ட பொது திறைசேரி பணிப்பாளர் நாயகத்தினால் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் மேற்படி 31.12.2014ம் திகதிக்குப் பின்னர் கட்டணப் பணம் செலுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்ட அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்கள் தமது மோட்டார் சைக்கிள்களுக்கு தமது பணங்களை செலவழித்து சிறிய வேலைகள் செய்து கண்ணாடிகளை மாற்றி அவர்கள் அந்த மோட்டார் சைக்கிள்களை தமது கடமைகளுக்கு பாவித்து வரும் நிலையில் அவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஒப்படைக்கச் சொல்வதென்பது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் அந்த உத்தியோகத்தர்களை சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.
இது விடயமாக இவ்வாறு மோட்டார் சைக்கிள்களை பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்கள் பலரும் என்னிடம் இது விடயமாக தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நான் அரசாங்கத்தின் கவனத்திற்கும், உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன்.
இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் திறைசேரி உரிய நடவடிக்கை எடுத்து ஒரு முடிவினை அறிவிக்கும் வரை மோட்டார் சைக்கிள்களை பெற்ற குறித்த அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்கள் தமது மோட்டார் சைக்கிள்களை ஒப்படைப்பதை தாமதப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என பிரதியமைச்சர் அமீர் அலி மேலும் தெரிவித்துள்ளார்.
31.12.2014ம் திகதிக்குப் பின்னர் கட்டணப் பணம் செலுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்ட அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்கள் தமது மோட்டார் சைக்கிள்களை மீள ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க மற்றும் ஜே.வி.பி சூழ்ச்சி செய்கின்றது: அனுருத்த பல்லேகம
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 09:03.11 AM GMT ]
இலங்கை, சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஏற்படுத்தியிருக்கும் இராஜதந்திர உறவுகளில் மோதலை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் விருப்பு குழு குற்றம் சுமத்தியுள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுருத்த பல்லேகம இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்த விசுவாசிகள், கோத்தாவையும் பொதுத்தேர்தலில் களமிறக்க முயற்சி!
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 09:17.32 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை, எதிர்வரும் பொதுத்தேர்தலூடாக மீண்டும் அரசியலுக்கு  கொண்டு வர முனைப்புக் காட்டும் ‘மஹிந்த விசுவாசிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌சவையும் களமிறக்க முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கத் துடிக்கும் மஹிந்த விசுவாசிகளான, முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்சச, வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர, தினேஷ் குணவர்தன, திஸ்ஸ விதாரண மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோரே இவ்வாறு கோத்தபாய ராஜபக்‌சவுக்கு வலை வீசியுள்ளனர்.
மஹிந்தவை முன்னிறுத்தும் இத் தேர்தலில் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்‌சவும் களமிறங்கும் பட்சத்தில் தமது கூட்டணிக்கு அது வலுச் சேர்க்கும் என மேற்படி மஹிந்த விசுவாசிகள் நம்புவதே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்‌சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நுகேகொடையில், எதிர்வரும் 18ம் திகதி இவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டத்திற்கும் கோத்தபாய ராஜபக்‌சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கும் மௌபிம உதேசா கலைஞர்கள்
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 09:19.54 AM GMT ]
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, பிரதமர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட வேண்டும் என்று மௌபிம உதேசா கலைஞர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் உறுப்பினர் கலைஞர் லால் குலரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதிக்கு சில குறைபாடுகள் உள்ளது தான். அதனை சரிப்படுத்திக்கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெலே சுதாவின் போதைப்பொருள் களஞ்சியசாலை பொலிஸாரினால் முற்றுகை
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 09:34.01 AM GMT ]
சர்வதேச போதைப்பொருள் வியாபாரியான சமந்த குமார எனப்படும் வெலே சுதாவுக்கு சொந்தமான களஞ்சியசாலை சோதனையிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு அனுப்புவதற்காக போதைப்பொருள் களஞ்சியபடுத்தி வைக்கப்பட்டிருந்த அறை ஒன்றினை பொலிஸார் இன்று காலை சோதனையிட்டுள்ளனர்.
இலக்கம் 875, பியகம வீதி, சிங்காரமுல்ல, களனி என்ற விலாசத்தில் அமைந்துள்ள களஞ்சிய அறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் திறக்கப்பட்டுள்ளது.


இந்திய மீனவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அரச அதிபர் மீது மாறியது: மன்னாரில் பதற்றம்
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 09:40.49 AM GMT ]
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து மன்னாரில் மீனவர் சங்கத்தினால் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட மீனவ சம்மேளன தலைவர் அல்பிரட் ஜஸ்ரின் சொய்சா தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம், மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களையும் சேர்ந்த மீனவர்கள் இன்று திங்கட்கிழமை தொழிலுக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் ஜனாதிபதிக்கான மனு ஒன்றை மாவட்ட அரச அதிபரிடம் சமர்ப்பிக்க, பேரணியில் ஈடுபட்டவர்கள் சென்றனர். எனினும் ஒருவரை மட்டுமே மாவட்டச் செயலகத்துக்குள் அனுமதிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மீனவ சங்கப்பிரதிநிதிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அல்லது எல்லாப் பிரதிநிதிகள் முன்னிலையிலும் வெளியே வந்து மனுவைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கோரினர்.
இதனை ஏற்க அரச செயலகம் மறுத்ததால் ஆத்திரமடைந்தவர்கள், அந்த வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், மாவட்ட செயலக வாகனங்களையும் வெளியில் செல்ல விடாது தடுத்தனர்.
அத்துடன் இ.போ.சா. பிரதான பஸ் நிலையம் மற்றும் தனியார் பஸ் நிலையங்களையும் மீனவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் சுமார் 45 நிமிடங்கள் வரை அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து பெரும் எண்ணிக்கையில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். நிலைமை மோசமானதை அறிந்த மேலதிக அரசாங்க அதிபர் மன்னார் மாவட்ட மீனவ சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்ரினிடம் இருந்து மனுவை பெற்று கொண்டதுடன் விரைவில் அதற்கு தீர்வு பெற்று தருவதாக கூறினார்.
குறித்த மனு ஜனாதிபதி, பிரதமர், வட மாகாண முதல்வர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSaSUnoyA.html

Geen opmerkingen:

Een reactie posten