[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 12:28.15 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்கு பாரியளவில் பங்களிப்பு செய்துள்ளார்.
அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் சிறு சிறு முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. எனினும், தனிப்பட்ட ரீதியான குரோதம் எதுவும் இல்லை.
சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிகா ஆகியோரை இணைத்துக் கொண்டமைக்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன், நான் மட்டுமல்ல எனது மகனும் போட்டியிடுவார்.
ஊழல் மோசடிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பு மனு கிடைக்காது.
எனக்கு அவ்வாறான எந்தப் பிரச்சினையும் கிடையாது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்காமை நியாயமானதே.
சந்திரிகாவை கட்சியில் இணைத்துக் கொள்வதன் மூலம் கட்சியின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும் என எஸ்.பி. திஸாநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது கண்டியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் வைத்து சந்திரிகாவை நிர்வாணமாக வீதியில் அடித்து துரத்த வேண்டுமென எஸ்.பி. திஸாநாயக்க ஆவேசமாக கூறியிருந்தார்.
இந்தக் கூற்றினை பொது வேட்பாளர் தரப்பு தேர்தல் பிரச்சார விளம்பரமாகவும் பயன்படுத்திக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSaKdeu5.html
அரசாங்கத்தின் அழைப்பை நிராகரித்த பிரதம நீதியரசர்
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 03:52.52 AM GMT ]
உடுகம நீதிமன்றக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்குமாறு அரசாங்கம் பிரதம நீதியரசருக்கு அழைப்பு விடுத்தது.
அதனை நிராகரித்த அவர், நீதிமன்றங்களைத் திறந்து வைப்பது நீதிபதிகளின் பொறுப்பு அல்ல, அது அரசாங்கத்தின் கடமை என்று தன்னிடம் கூறியதாக விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
உடுகம நீதிமன்றக் கட்டடத் தொகுதி திறப்பு விழாவிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
தனது நிலையை தெளிவுபடுத்தியதற்காக பிரதம நீதியரசருக்கு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நன்றி தெரிவித்தார்.
மேலும், நீதிபதிகளை அரசியல்வாதிகள் நிகழ்வுகளுக்கு அழைக்கக் கூடாது என்றும், ஊழல் அரசியல்வாதிகளுடன் நீதிபதிகள் அமர்ந்திருந்தால் நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSaKdev2.html
பிரணாப் முகர்ஜி, சுஷ்மா ஆகியோரையும் இன்று சந்திக்கவுள்ளார் மைத்திரி!
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 04:10.42 AM GMT ]
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட்ட குழுவினர் நேற்று இந்தியா சென்றடைந்தனர்.
இதற்கமைய டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று மாலை 5 மணிக்கு சென்றடைந்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, சிறிசேன மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இந்நாட்டு பிரதிநிகளை, மத்திய சாலைப் போக்குவரத்து, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசு சார்பில் வரவேற்றார்.
இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி சிறிசேன, இன்று காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லவுள்ளார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
மேலும் இன்று காலை 11.05 மணிக்கு ஹோட்டல் ஐடிசி மெளரியாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கவுள்ளதாகவும், அதையடுத்து, நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல்லுறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்தை பிற்பகலில் நடைபெறவுள்ளது.
அப்போது இரு நாடுகள் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மீண்டும் செல்லும் ஜனாதிபதி சிறிசேன, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இரவு 7.30 மணிக்கு சந்திக்கவுள்ளார். அதன் பிறகு, பிரணாப் முகர்ஜி இரவு 8 மணிக்கு அளிக்கும் அரசு விருந்தில் அவர் பங்கேற்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSaKdev3.html
ஹெலிகொப்டர் எங்கே? லம்போகினி எங்கே? குற்றம் சுமத்தியவர்கள் தற்பொழுது எங்கே? நாமல் கேள்வி
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 04:44.02 AM GMT ]
நேற்று ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். தேர்தல் மேடைகளில் என்னிடம் ஹெலிகொப்டர், லம்போகினி கார்கள் உள்ளதாக கூறினார்கள்.
அவர்கள் கூறியது போன்று நான் ஹெலிகொப்டர் வைத்திருந்திருந்தால் அவற்றினை வைப்பதற்கு ஒரு இடம் இருக்க வேண்டும்.
அப்படியான குற்றங்களை சுமத்தியவர்கள் தற்பொழுது கற்களால் அடிக்கப்பட்ட நாய்கள் போல் ஆதாரங்களின்றி நிற்கிறார்கள்.
லம்போகினி வைத்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு லம்போகினி தயாரிக்கும் நிறுவனங்களில் விசாரணை செய்தால் அவர்கள் பதிலளிப்பார்கள் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSaKdev6.html
மைத்திரியை வரவேற்ற மோடி மற்றும் பிரணாப் முகர்ஜி - காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார் மைத்திரி
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 06:26.29 AM GMT ]
இரு நாடுகளுக்கும் இடையில் இன்று சில உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் மைத்திரி சந்திக்கிறார்.
இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவாத்தையும் இடம்பெறவுள்ளது.
காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார் மைத்திரி
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.
மனைவி மற்றும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளோடு காலை ராஜ்காட் சென்ற சிறிசேன, காந்தி சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சென்ற சிறிசேனவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதன்போது ஜனாதிபதி சிறிசேனவுக்கு இராணுவ அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyCSaKdew0.html
Geen opmerkingen:
Een reactie posten