தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 februari 2015

பாரிய ஊழல் புரிந்தோரை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படுகிறது!- ஜனாதிபதி

மோசடியில் ஈடுபட்ட மஹிந்த கஹதகம பொலிஸாரினால் கைது
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 12:55.03 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சுயத்தொழில் சம்மேளன தலைவராக செயற்பட்ட மஹிந்த கஹதகம இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுயத்தொழில் திட்டங்களுக்காக பெற்ற பணத்தை பிழையான வழியில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுயத்தொழில் சம்மேளன தலைவர் கஹதகம, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பிரசித்தமாக பேசப்பட்டவர். அத்துடன் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ச, கொலன்ன தொகுதியில் இருந்து பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்!
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 01:24.47 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் இரத்தினபுரி கொலன்ன தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சக்கரம் சின்னத்தின் கீழ் அவர் போட்டியிடவுள்ளதாக இலங்கையின் ஆங்கில இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியின் சின்னமான சக்கர சின்னத்தின் கீழேயே மஹிந்த ராஜபக்ச போட்டியிடவுள்ளார்.
இதேவேளை மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை தொகுதியில் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட கொலன்ன தொகுதியில் மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது அவருடைய குடும்பத்தினருக்கும் கொலன்ன தொகுதிக்கும், அவருக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.
எனினும் 1970களில் மஹிந்த ராஜபக்ச, இளம் சட்டத்தரணியாக கொலன்னா நீதிமன்றத்திலேயே பயிற்சி பெற்றார் என்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை மக்கள் ஐக்கிய முன்னணி 1956ம் ஆண்டு எஸ் டபில்யூ ஆர் டி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdip3.html

பாரிய ஊழல் புரிந்தோரை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படுகிறது!- ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 01:30.14 PM GMT ]
நாட்டில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளார் 
ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த வார இறுதியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழு, அரசியல் தராதரம் பார்க்காமல் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்யும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் பல அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலேயே ஜனாதிபதி, தாம் ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdip4.html


Geen opmerkingen:

Een reactie posten