மட்டக்களப்பு நகரில் காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலைமுதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரத்தின் முன்பாக 500க்கும் அதிகமான பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் ஒரு பகுதியினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குச்சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளித்தனர்.
காணாமல் போனோர் கடைசியாக அணிந்திருந்த ஆடைகளும் உண்ணாவிரதத்தின் போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இரண்டாம் இணைப்பு
வன் செயல்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, காணாமல் போன தங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு இன்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட காந்தி சதுக்கம் முன்னாள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 11.00 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பொன் செல்வராசா ஸ்தலத்திற்கு விரைந்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன், 100 நாள் திட்டத்தின் கீழ் இவற்றிற்கு தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதிமொழி அளித்தார்.
இதன்போது ஊண்ணாவிரதம் மேற்கொண்டவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரமும் பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten