தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்ப வேண்டாம்! மைத்திரி மோடியிடம் கோருவாராம்

ஐந்து பெண்களை ஏமாற்றிவிட்டு ஆறாவது திருமணத்துக்கு தயாரான ஆசாமி வடமராட்சியில் கைது!
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 11:27.39 PM GMT ]
ஐந்து  திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை நேற்று புதன்கிழமை  வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது,
56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய யுவதியொருவரை திடீரென திருமணம் செய்யவுள்ளதாக அந்தப் பிரதேச சிவில் குழுவினர் எமக்குத் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, குறித்த நபரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்து விசாரணை நடத்தினோம்.
தான் சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்ததாக அந்த நபர் கூறிய போதிலும், அவரிடம் கடவுச்சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இருக்கவில்லை.
இந்நிலையில், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டோம்.
இதன்போது, அச்சந்தேகநபர் ஏற்கனவே திருகோணமலையில் இரு பெண்களையும், வரணி பகுதியில் இரு பெண்களையும், யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பெண்ணையும் திருமணம் செய்து ஏமாற்றியமை தெரியவந்தது.
தனது மகளைத் திருமணம் செய்வதாகக் கூறி சந்தேகநபர் 15 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாக இன்று செவ்வாய்க்கிழமை திருமணம் செய்யவிருந்த யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, திருமணத்துக்கு தயாரான யுவதி நெஞ்சுவலி காரணமாக தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொலைபேசி அழைப்பின் மூலம் திருமண சம்மதம் ஏற்படுத்தப்பட்டு, திருமணம் நடத்தவிருந்ததாக பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhv0.html

விடுமுறை அனுமதியை பெற்று டுபாய் சென்ற சகோதரர் திரும்பி வருவார்!- நாமல் ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 12:15.46 AM GMT ]
தனது சகோதரரான யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்றும் யோஷித ராஜபக்சவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையில் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித ராஜபக்ச, டுபாய்க்கு பயணமாகியுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் பயன்படுத்தும் வழியூடாக நேற்று முன்தினம் செவ்வாயக்கிழமை இரவு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே 653 என்ற விமானத்திலேயே அவர் டுபாய் பயணமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த யோஷித ராஜபக்சவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, தனது சகோதரர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்றும் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சில் சாதாரண பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய விடுமுறை அனுமதியினைப் பெற்றுக்கொண்டே தனது சகோதரர் தனிப்பட்ட காரணத்துக்காக டுபாய் சென்றார் என்றும் நாமல் எம்.பி மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhv2.html

வீரவன்ச முடிந்தால் மஹிந்தவுக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து காட்டட்டும்!- அசாத் சாலி சவால்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 12:33.44 AM GMT ]
விமல் வீரவன்சவுக்கு முடியுமாக இருந்தால் 5 ஆயிரம் பேரை கூட்டி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து காட்டட்டும். நான் அரசியலில் இருந்து விலகுவேன் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி பகிரங்க சவாலை விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக்குவது எப்படிப் போனாலும், வீரவன்ச குழுவினர்  ஐவரும் சேர்ந்து பிரதேச சபை ஒன்றையாவது வெற்றிகொள்ள முடியாது.
நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
விமல் வீரவன்சவுடன் சேந்துள்ள ஐவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்திருந்தால் தமக்கு இடம் கிடைக்காது போகும் என்பதை நன்கு விளங்கி வைத்துள்ளனர்.
இதனாலேயே வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிடச் செய்யப் போகிறார்கள்.
இதுவரையில் ஜனாதிபதியாக இருந்து விட்டுச் சென்ற எவரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது.
அத்துடன், பதவிகளைக் கேட்டு பெற்றுக் கொள்ளவும் வரவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

3000 ரூபா இடைக்கால கொடுப்பனவுடன் அரச ஊழியர்களுக்கு 8000 ரூபா சம்பள அதிகரிப்பு
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 12:55.25 AM GMT ]
2015 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் படி அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வின் 5000 ரூபாவை பெப்ரவரி மாதம் முதல் வழங்குமாறு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. 
தற்போது வழங்கப்பட்டு வரும் 3000 ரூபாவுக்கு மேலதிகமாகவே இந்த 5000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு சகல அமைச்சுகளின் செயலாளர்கள். மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள். கூட்டுத்தாபனங்கள். சபைகள் உள்ளிட்ட அரச சார்பு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் சுற்று நிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் 1000 ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்குமாறும் இந்த சுற்றுநிருபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 3000 இடைக்கால கொடுப்பனவுடன் பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்படும் 5000 ரூபாவையும் சேர்த்து அரச ஊழியர்களுக்கு 8000 ரூபா பெப்ரவரி மாதம் முதல் கிடைக்கும். எஞ்சிய 2000 ரூபா எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக சுற்று நிருபத்தின் மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் சகல அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பாக கிடைக்கும்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhv4.html

தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்ப வேண்டாம்! மைத்திரி மோடியிடம் கோருவாராம்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 11:51.00 PM GMT ]
தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
கொழும்பிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அகதிகளை திரும்ப அழைப்பதற்கு  இலங்கை அரசாங்கம் தயங்குவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த 26 ஆயிரம் பேர் இன்னமும் மீளக்குடியேற்றப்படாமல் இருப்பதும், மீள்குடியமர்வுக்கு காணி சுவீகரிப்பு ஒரு பிரச்சினையாக இருப்பதும் முதல் காரணமாக சொல்லப்படுகிறது.
இரண்டாவதாக, மூன்று பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்துவிட்ட இலங்கைத் தமிழர்களை அங்கிருந்து திருப்பி இழைப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று இலங்கை அரசாங்கம் உணர்கிறது.
அவர்கள் உள்நாட்டில் உறவுகளை ஏற்படுத்தியுள்ளனர், தொழில் செய்கின்றனர். பலர் கல்வியைப் பெற்று வருகின்றனர்.
இதனால், அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரத்தை மனிதாபிமான விவகாரமாக பார்ப்பதாகவும், கட்டாயமாக திருப்பி அனுப்புதலின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் உயர்மட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
வரும் 15ம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ஜனாதிபதிக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையிலான பேச்சுக்களில், அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம், உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் விவகாரம் மற்றும், நீண்டகாலமாக இழுபடும் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கும் விவகாரம் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மீன்பிடி விவகாரம் குறித்து இந்தச் சந்திப்பில் ஆழமாக ஆராயப்பட வாய்ப்பில்லை என்றும், இலங்கை ஜனாதிபதியுடன் புதுடெல்லி செல்லும் குழுவில், கடற்றொழில் அமைச்சர் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் செயலர் சித்ராங்கனி வாகீஸ்வர ஆகியோரே புதுடெல்லி செல்லவுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhv1.html

Geen opmerkingen:

Een reactie posten