தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

அன்ரன் பாலசிங்கத்தை அவமதித்தார் கிழக்கு முதல்வர்

வடமாகாணசபை பெண் உறுப்பினர் திடீர் ராஜினாமா? 

மாகாணசபை தேர்தலில் பெறப்பட்ட போனஸ் ஆசனத்தினை சுழற்சி முறையினில் மாவட்டத்திற்கொருமுறையென பகிர்ந்து கொள்வதென்ற தீர்மானத்தின் அடிப்படையினில் முதலில் முல்லைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேரிகமலா நியமிக்கப்பட்டிருந்தார்.இவரது நியமனக்காலமான ஒருவருடம் முடிவடைந்ததையடுத்தே தற்போது அடுத்து வவுனியாவிலிருந்து நடராசா நியமிக்கப்படவுள்ளார்.


அதற்கேதுவாகவே மேரிகமலாவின் ராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.Mare
http://www.jvpnews.com/srilanka/97188.html

தமிழ் முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்துவதாய் பேசிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக்!

புதிய முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுதிட்டம் கிழக்கு மாகாண சபையின் அனைத்துக்கட்சி உறுப்பினர்களினாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சுமுகமான முறையில் சபை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இருந்தபோதும் உறுப்பினர் சிப்லிபாறுக் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குழப்பும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தியமை சபை உறுப்பினர்களின் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் கட்சி விட்டு கட்சி மாறி தற்போது மூன்றாவது கட்சிக்கு தாவியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.jvpnews.com/srilanka/97198.html

அன்ரன் பாலசிங்கத்தை அவமதித்தார் கிழக்கு முதல்வர்

தனி அலகு தொடர்பாக வன்னி மண்ணிற்கு எத்தனை முறை முஸ்லீம் தலைமை சென்று அங்கு புலிகளின் தலைவர் மற்றும் ஆலோசகர் அன்னர் பாலசிங்கத்தை ஏன் சந்தித்தார்! இவ் விடயம் புதிய முதல்வருக்கு தெரியாதா? என கிழக்கின் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
முஸ்லீம்களுக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழ் தலைமைகள், மற்றும் பல விடயங்களை கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள், இன்று சந்தர்ப்பவாத அரசியல் செய்து அப்பாவிப் பொது மக்களை விற்று பதவிகளை அனுபவிக்கும் இவர் கிழக்கு தமிழரை காப்பாரா? அல்லது அழிப்பாரா? ஆரம்ப கருத்துக்கள் ஆபத்தாக உள்ளதாக தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

மின்னஞ்சல் மூலமான செய்தி

http://www.jvpnews.com/srilanka/97201.html

Geen opmerkingen:

Een reactie posten