வட மாகாண சபை தீர்மானத்தை மறைத்த தெற்கு ஊடகங்கள்
இந்தத் தீர்மானம் குறித்தோ, அல்லது தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் விடயங்கள் குறித்தோ தெற்கில் உள்ள பல சிங்கள, ஆங்கில ஊடகங்கள் செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. குறிப்பாக மும்மொழிகளில் ஊடகங்களை நடத்தும் ஊடக நிறுவனங்களில் சில ஊடகங்கள் தமிழில் மாத்திரம் இனப்படுகொலைத் தீர்மானம் குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது.
மும்மொழி ஊடகங்களைக் கொண்ட ஊடக நிறுவனங்களின் சிங்கள ஊடகங்களில் வெளியிடப்படும் தெற்கு அரசியல் குறித்த செய்திகள் தமது தமிழ் ஊடகங்களிலும் வெளியிடப்படுவதுண்டு. எனினும் வடக்கு மாகாண சபையின் இனப்படுகொலை குறித்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்துள்ளன. இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சிங்கள மக்களை நோக்கியும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தார்.
இந் நிலையில் குறித்த செய்திகளை சிங்கள மக்களுக்குச் சென்றடையாத வகையில் சில ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்திருப்பது ஊடக அறமற்றது என்று ஊடகத்துறை சார் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/97221.html
ஐ.நா அறிக்கைக்கு மங்கள அடித்தார் ஆப்பு
இன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்திப்பதற்காக, நேற்று வொசிங்டன் வந்து சேர்ந்த அவர், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். இதன் போது அவர், உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதை சில மாதங்களுக்குப் பிற்போடுமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தைக் கையாளும் பொறிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கவுள்ளதாகவும், அதுவரை இந்த அறிக்கையை வெளியிடாமல் தவிர்க்கும் படி கோருவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
“முந்தைய அரசாங்கம் போல, எத்தகைய மீறல்களும் நடக்கவில்லை என்று மறுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. அத்தகைய மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். சிறிலங்காவில் மனித உரிமைகளை மீறியவர்களை பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதியின் முன் நிறுத்துவதை உறுதிப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன், எமது உள்நாட்டுப் பொறிமுறை நடவடிக்கைக்காக அதனை எமது பார்வைக்கு அனுப்ப முடியும் என்று நம்புகிறோம். எமது பொறிமுறை உருவாக்கப்படும் வரை, ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தடுத்து வைத்திருக்கக் கூடும் என்று நம்புகிறோம்.
பெரும்பாலும், ஓகஸ்ட் மாதம் வரை அறிக்கை தாமதிக்கப்படலாம்.
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் உள்நாட்டுப் பொறிமுறை இரண்டு மாதங்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கும். ஐ.நா மனித உரிமை ஆணையாளரையும் சிறிலங்கா வருமாறு அழைத்துள்ளோம்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/97224.html
விசாரணை அறிக்கை தாமதமா? மறுத்த ஐ.நா பேச்சாளர்
போர்குற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம், உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க கால அவகாசம் தரும் வகையில், இந்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுமாறு கோரியுள்ளது.
அமெரிக்காவும் இதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது தாமதமாக வாய்ப்புள்ளதா என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில்லிடம், ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தது.
எனினும், அந்தக் கேள்விக்கு அவர் எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதன்போதும் அவர், ஐ.நா விசாரணை அறிக்கையை பிற்போடுமாறு கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/97227.html
Geen opmerkingen:
Een reactie posten