தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

மாகாண சபை மீது வெறுப்பு! பாராளுமன்றத்தின் மீது ஈர்ப்பு!– தயாசிறி ஜயசேகர



இலஞ்ச, ஊழல்கள் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராக தில்ருக்ஷி நியமனம்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 08:19.28 AM GMT ]
இலஞ்ச, ஊழல்கள் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அலவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று பெற்றுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhr6.html

வெளிநாட்டில் பணிபுரிந்தோருக்கும் ஓய்வூதியம்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 08:24.07 AM GMT ]
வெளிநாட்டில் இரு வருடங்களுக்கு மேல் பணி புரிந்த இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் இத்திட்டம் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரபு நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவ்வூடகம் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர் அமைச்சரவை பத்திரம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மேற்படி அதிகாரி குறித்த ஊடகத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.

மகிந்த வரும் போது ஊர் காரன் போகும் போது மகா திருடன்: அனுர குமார
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 08:38.04 AM GMT ]
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியேற்ற சந்தர்ப்பத்தில் கிரவாபத்து ஊர்க்காரன் ஆனாலும், தோல்வியடைந்து செல்லும் போது மகா திருடன் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்ற சந்தர்பத்தில் ஏழைகளின் சொந்தகாரன், அவர் மரித்தவுடன் மக்கள் பாற்சோறு சமைத்து உண்டார்கள்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பதவியேற்ற போது சமாதானத்தின் தேவதை, பதவியை விட்டு செல்லும் போது கொடுங்கோல் ராணி என்றார்கள்.
அதேபோல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற சந்தர்ப்பத்தில் கிரவாபத்து ஊர்காரன், பதவியை விட்டு வெளியேறும் போது மகா திருடன்.
இப்படியே சென்றால் இந்த பதவிக்கு எவ்வாறான பலம் உண்டு என்று அனுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் மீனவர்களுக்கு விடுதலை!
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 08:43.05 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்திற்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல மீனவர்களையும் விடுதலை செய்யவுள்ளதாக கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் 18 படகுகள் மற்றும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 86 படகுகளும் மீண்டும் ஒப்படைக்கப்படவுள்ளது.
அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தற்பொழுது சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhsz.html


அதாவுதவை 8 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 08:43.27 AM GMT ]
முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்னவை 8 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை வரக்காபொல மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
வரக்காபொல, கொஹம்பதெனியவில் நிர்மாணிக்கப்படவிருந்த குடிநீர் திட்டமொன்றுக்கு பத்து இலட்சத்து 80 ஆயிரம் ரூபா நஷ்டம் விளைவித்தனர் என முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் உள்ளிட்ட 18 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் அமைச்சருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு, 8 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


மாகாண சபை மீது வெறுப்பு! பாராளுமன்றத்தின் மீது ஈர்ப்பு!– தயாசிறி ஜயசேகர
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 09:06.18 AM GMT ]
நான் மாகாண சபை அமைச்சர்கள் நடந்து கொள்ளும் முறையில் வெறுப்படைந்துள்ளளேன். அதனால் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வட மேல் மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சத்கோரள சுதந்திர ஊடக கருத்துக்களத்தில் இடம் பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட அமைச்சர்க்ள மற்றம் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக மனவருத்தமடைந்துள்ளேன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..
ஆகவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நிச்சயமாக வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhs1.html

Geen opmerkingen:

Een reactie posten