தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சியினரை இலக்கு வைத்து வன்முறை: நிமல் சிறிபால

மங்கள சமரவீர பான் கீ மூனை சந்திக்க உள்ளார்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 06:57.32 AM GMT ]
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரää ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்திக்க உள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள்ää மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகம் பெரும்பாலும் இந்த சந்திப்பு நடைபெறும் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளைää பிரித்தானிய விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியையும் மங்கள சமரவீர சந்திக்க உள்ளார்.
வாசிங்டனில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2005ம் ஆண்டின் பின்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவரை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திக்கும் முதல் தடவை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhr0.html

கொழும்பு துறைமுக நகரத்திட்டம்: பாராளுமன்றில் பெப்-18 விசேட உரை
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 07:29.25 AM GMT ]
கொழும்பு துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் தற்போதய அரசாங்கத்தின் நிலை தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட உரையொன்று நிகழ்த்தப்படவுள்ளது.
இவ்வுரை எதிர்வரும் 18 ஆம் திகதி நிகழ்த்தப்படும் என வீடு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா 23 (2) என்ற சட்டவிதியின் கீழ் கொழும்பு துறைமுகத்திட்டம் தொடர்பில் தற்போதய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதலளித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhr3.html


தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்: மொரிசியஸ் நாட்டின் புதிய பிரதமர் வாக்குறுதி
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 07:02.33 AM GMT ]
ஈழத்தமிழர்களின் கரி நாளான 4.02.2015 அன்று மொரிசியஸ் நாட்டு பிரதமருடனும் மற்றும் வெளிவிவகார அமைச்சருடனும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் செயலாளர் திருச்சோதி அவர்கள் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பின் ஊடாக சிறிலாங்காவில் ஆட்சி மாற்றம் நடந்திருந்தாலும் தமிழ் மக்கள் நலன் கருதி எவ்வகையிலும் எவ் நகர்வுகளும் இடம்பெறவில்லை எனவும் , தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்வதுக்கு சர்வதேசம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசரத்தையும், அதற்கு மொரிசியஸ் ஆதரவான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேச்சுகள் நடாத்தப்பட்டது.
மொரிசியஸ் பிரதமர் தனது கடந்தகால பணியில், 1985 ஆண்டே ஐநா மனிதவுரிமை பொதுச்சபையில் தனது உரையில் ஈழத்தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட குரல்கொடுத்ததாக பதிவு செய்ததோடு, தொடர்ந்தும் தாம் தமிழ் மக்களின் நலனுக்காக உழைப்போம் என்று உறுதிவழங்கியிருந்தார்.
அத்தோடு அனைத்துலக சுயாதீன விசாரணையே தமிழ் மக்களுக்கு உண்மையான நீதியை பெற்றுத்தரும் என்பதையும் விளங்கி கொண்டார்.
மொரிசியஸ் வெளிவிவகார அமைச்சர் தனது கருத்தை கூறுகையில், மனிதவுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனும் அடிப்படையில் தாம் மிகவும் தமிழ் மக்கள் மீது கவனம் செலுத்துவதாகவும் தமிழ் மக்கள் மிக விரைவில் அனைத்து உரிமைகளுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதையும் நம்பிக்கையோடு தெரிவித்தார் . இச் சந்திப்பில் மொரிசியஸ் நாட்டு தமிழ் பிரதிநிதியும் இணைந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhr1.html

வட மாகாண சபையின் இனப்படுகொலை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 07:36.07 AM GMT ]
வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை தீர்மானத்தை இந்திய அரசு வழிமொழிய வேண்டுமென தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத் தமிழர்மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்தி இலங்கை வடக்கு மாகாண சபையில் நேற்று ஒருமனதாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பதினொரு பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்மானத்தில் இனப்படுகொலைக்கான ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஐநா பாதுகாப்புக் கவுன்சில் இனப்படுகொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடவேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது.
வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இனப்படுகொலை எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விவரித்துள்ள அந்தத் தீர்மானம் 1990ஆம் ஆண்டிலிருந்து மலையகத் தமிழ்ப் பெண்கள் கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதையும், 2009க்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் தமிழ்ப் பெண்கள் கட்டாய கருத்தடைக்கும், கருச்சிதைவுக்கும் உட்படுத்தப்பட்டதையும் பட்டியலிட்டிருக்கிறது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவத் தாக்குதலின்போது வன்னிப் பகுதியில் மட்டும் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதையும் அந்தத் தீர்மானம் ஆதாரத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறது.
இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட 6,500 ஏக்கர் நிலத்தைத் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கவோ, இராணுவத்தைத் திரும்பப்பெறவோ மைத்திரிபால அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளைத் தொடங்காததை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
2009இல் இனப்படுகொலை நடந்தபோது ராஜபக்ச அரசில் இராணுவ அமைச்சராக இருந்தவர்தான் மைத்திரிபால. அவர் இப்போது அதிபராகியிருக்கிறார்.
இனப்படுகொலையை நிறைவேற்றிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இப்போது அதிபருக்கு இராணுவ ஆலோசகராக இருக்கிறார்.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்தினால் தமிழ் மக்களுக்கு நீதி எப்படி கிடைக்கும் என வடக்கு மாகாண சபைத் தீர்மானம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஒத்திப்போடுவதற்கு அமெரிக்காவின் உதவியை இலங்கை அரசு நாடியிருக்கிறது. அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காகவே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால இம்மாதம் இந்தியாவுக்கு வருகிறார்.
இலங்கை அரசின் தமிழர் விரோத போக்குக்கு இந்திய அரசு துணைபோகக்கூடாது என வலியுறுத்துகிறோம். வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை இந்திய அரசு வழிமொழிந்து ஆதரிக்க வேண்டும்.
அதற்காக இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhr4.html

தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சியினரை இலக்கு வைத்து வன்முறை: நிமல் சிறிபால
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 08:02.39 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை இலக்கு வைத்து வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சி நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை இலக்கு வைத்து பாராளுமன்றத்திலும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கு பல்வேறு வன்முறை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
சுதந்திர கட்சி உறுப்பினர்களின் வீடுகளை சேதப்படுத்தல், அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல், அரசியல் காரணங்களுக்காக சில ஊழியர்களின் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அனுமதியளிக்காமை,  சுதந்திர கட்சியின் பிராந்திய அலுவலகங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பொலிஸார் இந்த வன்முறைகள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து பாரபட்சம் பாராது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் இவ் வன்முறைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,  இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்துவதற்கு சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhr5.html

Geen opmerkingen:

Een reactie posten