தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

ஐந்து வருடங்கள் ஏமாந்தது போதும்: கிளிநொச்சியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

டுபாய் பறந்தார் யோசித்த ராஜபக்ச
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 03:52.28 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச இலங்கையை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
யோசித்த ராஜபக்ச நேற்று இரவு டுபாய் நோக்கி சென்ற விமானத்தில் இலங்கையை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யோசித்த விசேட போக்குவரத்து சேவைகள் இன்றி சதாரண போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 06:35.42 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2ம் திகதி கைது செய்யப்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்து வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
போலி ஆவணங்களைத் தயாரித்து ஜனாதிபதி தேர்தல் மக்களை பிழையாக வழிநடத்தியாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஒரு மில்லியன் ரூபா இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் கொழும்பு கோட்டே நீதவான் திஸ்ஸ அத்தநாயக்கவை விடுதலை செய்துள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரித்தல், இனவாதத்தை தூண்டுதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் உரிய சாட்சியங்களை சமர்ப்பிக்கவில்லை என நீதவான் திலின கமகே தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhry.html

சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்!- கருணா
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 09:29.13 AM GMT ]
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட கடுமையாக பாடுபட்டவர்களில் நானும் ஒருவன்.
ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ வன்முறைகளைத் தூண்ட அனுமதிக்க முடியாது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மிகவும் நாகரீகமான முறையில் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தேன்.
எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை.
எந்தவொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடியாட்கள் மட்டக்களப்பில் மக்களின் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அன்றைய அரசாங்கத்துடன் நாடடி;ல் சமாதானத்தை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்பட்டதனை அனைவரும் அறிவார்கள்.
நாம் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டதனால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசியல் செய்ய முடிகின்றது.
கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி கூட வழங்கப்படவில்லை.
தேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியுமாயின் ஏன் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியாது.
புதிய பாதுகாப்பு அமைச்சர் ஆர்வத்துடன் கடமையாற்றி வருகின்றார், அவரது செயற்பாடுகளை நான் பாராட்டுகின்றேன் என கருணா நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhs3.html


ஐந்து வருடங்கள் ஏமாந்தது போதும்: கிளிநொச்சியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 09:28.04 AM GMT ]
காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரக்கோரி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவு மக்கள் இன்று கிளிநொச்சியில் திரண்டு கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்தியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள நாதன்குடியிருப்பு, உழவனூர் மற்றும் புதிய புன்னைநீராவி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள்,  இந்தக் கிராமங்களில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
மத்திய வகுப்பு திட்ட காணிகளில் வசித்துவரும் இவர்களுக்கு இதுவரை காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்காததால் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வீட்டுத்திட்டம் மின்சாரம் மற்றும் வீதி வசதிகள் என்பனவும் அபிவிருத்தி திட்டங்களும் கிடைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த மக்கள் தமது காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரக்கோரி இன்று பெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் முன்னெடுத்திருந்தனர்.
இப்போராட்டத்தினையடுத்து அங்கிருந்து கிளிநொச்சி கச்சேரிக்கு பேரணியாகச் சென்று அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கொடுத்துள்ளதுடன், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம் சென்று அங்கும் மகஜர்களை கையளித்துள்ளனர்.
இந்த மகஜரை பெற்றுக் கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு மக்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கண்டாவளையின் உழவனூர், நாதன்திட்டம், புதிய புன்னை நீராவி உட்பட்ட ஏனைய கண்டாவளை பிரதேச மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக அறிந்துள்ளேன்.
இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் வடமாகாண முதலமைச்சர், கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன், பா.உறுப்பினர் மாவை.சேனாதிராசா, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கு அறியத்தருவதுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhs2.html

Geen opmerkingen:

Een reactie posten