[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 11:24.55 PM GMT ]
முதற்கட்டமாக 220 ஏக்கர் காணிகளை 20 பேர்ச் காணித் துண்டுகளாகப் பிரித்து மக்களுக்கு வழங்கப்படவிருப்பதாக புதிய அரசாங்கம் கூறியுள்ளது. இவ்வாறு செய்வதானது கடந்த அரசாங்கம் செய்த பிழையையே இந்த அரசாங்கமும் செய்வதாக அமையும் என அவர் தெரிவித்தார்.
பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பொதுமக்களின் காணிகள் உள்ளன.
இவற்றில் 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவிருப்பதாகவும், முதற்கட்டமாக 220 ஏக்கர் காணிகளை 20 பேர்ச் காணித்துண்டுகளாகப் பிரித்து 1022 குடும்பங்களுக்கு வழங்கப்படவிருப்பதாகவும் புதிய அரசாங்கம் கூறியுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள காணிகள் விவசாயக் காணிகள் என்பதால் அந்தந்தக் காணி உரிமையாளர்களிடமே வழங்கப்பட வேண்டும். அதனைவிடுத்து புதியவர்களுக்கு காணிகளை வழங்குவதை பிழையான விடயமாகவே நாம் பார்க்கின்றோம்.
இவ்வாறான முயற்சியொன்றையே கடந்த அரசாங்கமும் மேற்கொண்டது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தற்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய அரசாங்கமும் அதே பிழையான செயற்பாட்டையே செய்ய முயற்சிக்கிறது. இவ்வாறானதொரு தீர்மானமொன்றுக்கு வருவதற்கு முன்னர் வடபகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களை அழைத்து அரசாங்கம் கலந்துரையாடியிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் கடந்த அரசாங்கம் செய்த அதே பிழையை புதிய அரசாங்கமும் செய்யுமாயின் அது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே அமையும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகள் மக்களிடம் கையளிக்கப்படுவதாயின் அந்தந்தக் காணிகள் அந்தந்தக் காணிகளின் உரிமையாளர்களிடம் மாத்திரமே கையளிக்கப்பட வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfq0.html
இழுவைப்படகுகளை நிறுத்த வேண்டுமென மைத்திரி, மோடியை கோருவார்! - ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு 17 பேர் மட்டுமே பங்கேற்பு
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 11:34.38 PM GMT ]
இந்திய செய்தித்தாள் ஒன்று இதனை எதிர்வு கூறியுள்ளது.
நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் 16ம் திகதி இந்திய பிரதமரை புதுடில்லியில் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் உள்ளடங்கியிருந்தார்.
இதன்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் இலங்கையின் வடக்கு மீனவர்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாவதை விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு 17 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்திற்கு 17 பேரைக் கொண்ட குழுவொன்று மட்டுமே பங்கேற்க உள்ளது. ஜனாதிபதி செயலகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு விஜயத்தின் ஊடாகவே, வெளிநாட்டு விஜயங்களுக்கான செலவுகளை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான பிரதிநிதிகளுடன் வெளிநாட்டு விஜயத்தை செய்வதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்திய விஜயம் மேற்கொண்ட போது அமைச்சர்கள் உள்ளிட்ட 72 பேர் விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
நாளை ஜனாதிபதி இந்திய விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசேட விமானமொன்றில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவில்லை எனவும், ஏற்கனவே இந்தியா பயணிக்கவிருந்த விமானமொன்றில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரகசியப் பொலிஸார் கோத்தாவிடம் விசாரணை! சில கேள்விகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் - வாக்குமூலம் அளிக்கவில்லை என்கிறார் கோத்தபாய
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 11:09.40 PM GMT ]
பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோனால் நியமிக்கப்பட்ட இரகசியப் பொலிஸ் அதிகாரிகள் மூவர் கோத்தபாய ராஜபக்சவின் வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் இந்த விசாரணை இடம்பெற்றது. விசாரணையின் போது சில தகவல்கள் சம்பந்தப்பட்ட கோவைகளை ஆய்வுக்குட்படுத்திய பின்பே பதில் கூற முடியுமென கோத்தபாய ராஜபக்ச இரகசியப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவன்காட் பாதுகாப்பு சேவை மற்றும் ஆயுதங்கள் ஆகியவை பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்தமை, யுத்தத்திற்கு மட்டும் பாவிக்க வேண்டிய ஆயுதங்கள் பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைத்திருந்தமை, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப ஆயுத களஞ்சியம் போன்ற இடங்களை இயக்கியமை, பாதுகாப்புப் பிரிவினருக்கு அதற்கான அனுமதியை வழங்கியமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணைகளை மேற்கொள்வதற்கான காலஅவகாசமொன்றை கோத்தபாய ராஜபக்ச இரகசியப் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வேறொரு தினம் அதற்காக வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அம்பாந்தோட்டை கடல் பிரதேசத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் மேற்படி ஆயுதக் கப்பல் அடையாளம் காணப்பட்டது. அந்தக் கப்பலில் ஆயுதங்கள் நிறைந்து காணப்பட்டது.
இது தொடர்பாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்ற போது, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே இந்த ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டன எனத் தெரிவித்தனர்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரகசியமாக இயங்கிய ஆயுதக் களஞ்சியம் இதன் பின்னர் சில தினங்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த களஞ்சியமானது தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனமொன்றுக்கு உரித்துடையதென தெரிவிக்கப்பட்டது.
இவை தொடர்பிலும் சோதனை மேற்கொண்ட இரகசியப் பொலிஸார், களஞ்சியசாலைக்கும் ஆயுதங்களுக்கும் பொறுப்பாக இருந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உட்பட 50 பேரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
களஞ்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் விசேட நிபுணர்களின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளில் மூன்று இரகசிய பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
முன்னர் வந்த செய்தி -- கோத்தபாய மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டுமணி நேரமாக விசாரணை: வாக்குமூலம் பதிவு
புலனாய்வுப் பிரவினருக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை – கோத்தபாய ராஜபக்ச
புலனாய்வுப் பிரிவினருக்கு எவ்வித வாக்கு மூலங்களையும் அளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களான அவான்ட் க்ரேட் மற்றும் ரக்ன லங்கா ஆகிய நிறுவனங்களின் ஆயுதங்கள் தொடர்பில் கோத்தபாயவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.
கோத்தபாய ராஜபக்ச தங்கியுள்ள மிரிஹானவில் உள்ள வீட்டிற்கு சென்று புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொண்டனர்.
ஆவணங்களை பார்வையிட்டதன் பின்னரே இது குறித்து வாக்கு மூலம் அளிக்க முடியும் என கோதபாய ராஜபக்ச தெரிவித்தார் என அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
நேற்று முற்பகல் 11.00 மணியளவில் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
எனினும், இவ்வாறான வாக்குமூலங்கள் எதுவும் பதியப்படவில்லை என கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வாக்குமூலமொன்றை பதிவு செய்ய வேண்டுமென சில தினங்களுக்கு முன்னதாக புலனாய்வுப் பிரவினர் அறிவித்தனர்.
எதிர்வரும் வாரத்தில் வார நாள் ஒன்றில் வாக்கு மூலம் அளிப்பதாக தெரிவித்தேன்.
நேற்று இவ்வாறான எந்தவொரு வாக்குமூலமும் பதியப்படவில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfqz.html
Geen opmerkingen:
Een reactie posten