தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

கட்டுநாயக்காவில் கைதான ஜேர்மன் தமிழர்களை தெரிகிறதா…??

வலி.வடக்கு பிரதேசசபை நீதிமன்றக்காவலில்….

நீதிமன்ற உத்தரவை மீறி மக்களுக்கு கழிவு ஒயில் கலந்த நீர் தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு சிறைத்தண்டனைக்கு உள்ளாக வேண்டி வரும் என்றும் நீதிபதியால் கடுமையாக அவர் எச்சரிக்கப்பட்டார்.
கழிவு ஓயில் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு மாற்றீடாக குடிநீர் வழங்குவதாக தெரிவத்து அதே கழிவு ஓயில் கலந்த குடிநீரை மக்களிற்கு சுகிர்தன் விநியோகித்து வந்திருந்தார்.இதையடுத்து சுகாதார துறையால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே நீதிமன்று அவரை இன்று எச்சரித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/97433.html

கட்டுநாயக்காவில் கைதான ஜேர்மன் தமிழர்களை தெரிகிறதா…??

இவர்கள் இருவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் இருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டுவரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு ஈழத்தமிழர்கள் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூருக்குச் சென்று அதனூடாக ஜேர்மன் செல்லவிருந்த தமிழர் ஒருவரும், அவருடன் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு இளைஞர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக போலி ஆவணங்களை தயாரிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Kadunajka
http://www.jvpnews.com/srilanka/97449.html


Geen opmerkingen:

Een reactie posten