[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 07:56.10 AM GMT ]
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் சின்னத்தம்பி தெய்வேந்திரன் (வயது 34) என்பவர் உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் உறக்கத்தில் இருந்தவேளையிலேயே மின்னல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். மட்டக்களப்பின் சில பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக இடி, மின்னலுடன் மழை பெய்துவருகின்றது.
சீமெந்து தொழி்ற்சாலைக்கு இனம்தெரியாதோரால் தீ வைப்பு!
மட்டக்களப்பு சந்திவெளியிலுள்ள சீமெந்து கல் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுக்கு திங்கட்கிழமை தீ வைக்கப்பட்டதுடன், தொழிற்சாலையில் கடமையில் இருந்த காவலாளி மற்றும் உத்தியோகத்தர்கள் இருவர் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் தாக்குதலில் காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
பெற்றோல் குண்டு, கல் மற்றும் மிளகாய்த் தூள் போன்றவற்றை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது கணனி அலுவலகத்திலுள்ள கணனி மற்றும் ஆவணங்கள் சில சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபான சாலையை மூடுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்: இ.தொ.காவும் ஆர்ப்பாட்டத்தில் சங்கமம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 09:14.04 AM GMT ]
தினமும் ஆண்கள் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சண்டையிடுவதாகவும் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தற்போது மாணவர்களும் குடி பழகத்தில் ஈடுப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.
அத்தோடு மது என்பது மரணம், மலையக மக்களை குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை செய்வோம், இளைஞர்களை பாதுகாப்போம், நோய் உள்ளவர்களை காப்பாற்றுவோம், பிள்ளைகளின் கல்வியை காப்பாற்றுவோம், போன்ற பாததைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.
மலையகத்தில் குறிப்பாக அதிகமான மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்களை அரசியல்தலைவர்களே கொடுத்துள்ளார்கள். கொடுத்த அரசியல் தலைவர்களே இக்கடையை மூட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இ.தொ.கா மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் பிரதான வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார். அத்தோடு சம்பவ இடத்திற்கு வந்த அட்டன் பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன் இவ் மதுபானசாலையை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதை தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் நீதிமன்றத்தினால் உத்தரவு வழங்கினால் மூடுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறினார்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிக்கையில், இவ்விடயம் சம்மந்தமாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் கவனம் செலுத்துவதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அதன் பிறகு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டகாரர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் தெரிவித்தார்.
இவ்வாறு தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடதக்கது.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் கருத்து தெரிவிக்கையில், மதுபானசாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியது அரசியல்தலைவர்கள் தான் தற்போது அவர்களின் சந்தர்ப்பத்திற்காக அவர்களே இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து அவர்களே கலைந்து சென்றுள்ளனர். இவ்வாறு செய்வது அநாகரிகமான செயல் என கருத்து தெரிவித்தனர்.
இரண்டாம் இணைப்பு
மதுபானசாலையை மூடுமாறு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பற்றி ஹட்டன் பொலிஸார், ஹட்டன் நீதவான் ஜ.பீ.டீ.லியனகேவின் கவனத்திற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து குறித்த மதுபானசாலைக்கு கலால் திணைகள ஆணையாளரினால் அனுமதிப்பத்திரம் இருப்பதாகவும் மதுபானசாலையை கலால் திணைகளத்தின் ஆணைளாயரினால் மட்டும் தடை செய்ய முடியும் எனவும் இதை பற்றி அவரிடம் முறைபாடு செய்யுமாறு ஹட்டன் நீதவான் பொலிஸாருக்கு
தெரிவித்தார்.
தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiv3.html
யாழ். பல்கலைக்கழகத்தில் சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 08:01.16 AM GMT ]
“போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளே” என்ற தலைப்பில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இலங்கையின் சுதந்திர தின விழாவில் இருவரும் பங்கேற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தசுரரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அச்சுவரொட்டிகளில்,
“ஜனநாயக சோசலிஷக் குடியரசு எனப்படும் இலங்கையின் தேசிய சின்னங்கள் அனைத்திலும் சிங்கள மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் அடையாளங்களே உள்ளன.
சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் அரசியல் சாசனத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்த 43 வருடங்களாக இலங்கையின் அனைத்து தேசிய தினங்களையும் தமிழர்கள் புறக்கணித்தே வந்தனர்.
அரசாங்கம் என்பது மாறக் கூடியது. ஆனால் சிங்கள மேலாதிக்கவாதிகளின் அடக்கியாளும் ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழ் மக்களின் கொள்கைப் பற்றும் மாறாதவை என்பதை சம்பந்தனும் பின் கதவால் தமிழ் அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரனும் அறியாத ஒன்றல்ல.
இருந்தும் தாம் சார்ந்த மக்களினதும் கட்சியினதும் விருப்புக்கு மாறாக இத்தகைய காரியத்தை அவர்கள் எதற்காக நிகழ்த்தினர் என்பதே தமிழரை வேதனையடைய வைத்துள்ளது.
இவர்களின் செயல் மக்களின் கொள்கைகளையும், கட்சிக் கொள்கைகளையும் குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும்.
அண்மைக் காலமாக தமிழ் அரசியலை ஏகபோகமாக நடத்தி வரும் சம்பந்தரையும் அவருக்குப் பக்க வாத்தியமாக இருந்து தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படாமல் பின் கதவால் அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரனையும் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiv2.html
Geen opmerkingen:
Een reactie posten