தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 februari 2015

மகிந்த குறித்து இன்னமும் முடிவுக்கு வரவில்லை!– பொதுபல சேனா

உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள்: சஜித்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 09:42.46 AM GMT ]
பெலியத்த மற்றும் வீரகெட்டிய பிரதேசங்களில் உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள் செயற்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தற்போது நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீடுகளை பொறுப்பேற்க வேண்டுமாறும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiv5.html

மகிந்த குறித்து இன்னமும் முடிவுக்கு வரவில்லை!– பொதுபல சேனா
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 11:00.03 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியல் மேடைக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. எனினும் இதுவரை முடிவுக்கு வரவில்லை என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்திய பின்னரே கருத்து தெரிவிக்கவுள்ளதாக பொதுபலசேனாவின் பிரதான செயலாளர் வணக்கத்துக்குரிய பிக்கு கலகொட அத்த ஞானசார தேரர் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiwy.html

Geen opmerkingen:

Een reactie posten