[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 07:27.41 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு அவதூறு ஏற்படும் வகையில் இரண்டு இலத்திரனியல் ஊடகங்களில் செய்தி வெளியிட்டதாக சுதர்மன் ரத்தலிகொட மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சுதர்மன் இன்று நீதிமன்றில் முன்னிலப்படுத்தப்பட்டார். சுதர்மனை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன சிறு வயது குழந்தை ஒன்றை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தாக இலத்திரனியல் ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறவில்லை என பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
போலியான அவதூறு செய்திகளை வெளியிட்டதாக சுதர்மன் மற்றும் இரண்டு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏனைய இருவரின் விளக்க மறியல் காலமும் நீடிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiu6.html
கிழக்கு மாகாண சபையில் இன்று பெரும் அமளி துமளி! வரவு செலவுத்திட்டம ஏகமனதாக நிறைவேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 07:35.37 AM GMT ]
இந்த அமர்வின்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களினதும் அத்துடன் முதலமைச்சின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கு சபையில் உரையாற்ற சுமார் 5 நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி தனது உரையில்,
உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் 3 மில்லியனை 4 மில்லியனாக வழங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை புதிய முதலமைச்சரிடம் முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சியின் குழுத் தலைவர் தயா கமகே,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும், கட்சியையும் பற்றி பேசும்போது, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், தவம், லாஹீர், மன்சூர், அன்வர் ஆகியோர்களுடன் முதலமைச்சரும் இணைந்து அவரின் உரைக்கு கண்டனம் வெளியிட்டனர்.
இதன்போது சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதனையடுத்து சபையின் நடவடிக்கைகள் யாவும் தவிசாளரினால் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்போது இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
இதன் பிரகாரம் இவ்வரவு செலவுத் திட்டத்திற்கு ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பனவும் ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய முதலைமைச்சர் நஜீப் அப்துல் மஜீதினால் சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் இரண்டு தடவைகள் சபை ஒத்திவைக்கப்பட்டதால் அவ்வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiu7.html
புதிய வீடு கட்டித் தரக் கோரி மட்டக்களப்பில் பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 07:45.16 AM GMT ]
தங்களுக்குரிய கிராம சேவகர் பிரிவில் புதிய வீடுகளை கட்டித்தரும் படியும், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரச மானியப் பொருட்களையும், அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கால் நடை மற்றும் மானியப் பொருட்களையும் அரசாங்கத்துக்கு சொந்தமான அரச உடமைகளையும் மோசடி செய்து கொண்டிருக்கும் கிராம சேவகரை இடமாற்றம் செய்யுமாறும் கோரி இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச மக்கள் 1988 சொந்த குடியிருப்புகளை விட்டு வெளியேறிய பின்பு 1990 ஆண்டு மீண்டும் மீள்குடியேறினோம், பின்பு விடுதலை புலிகளின் ஆதிக்கத்தினாலும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கையினாலும் 1991 ஆண்டு மீண்டும் எங்களது உடமைகள் அனைத்தையும் விட்டு வெளியேறினோம், மீண்டும் 1992 ஆண்டு மீண்டும் எங்களது இருப்பிடத்தை வந்தடைந்தோம், பின்னர் 1994 ஆண்டு விடுதலை புலிகளின் கேந்திர நிலையமாக இருந்த இந்த கிராமம் பயன்படுத்தப்பட்டதால் எங்களை வலுக்கட்டாயமாக அவ்விடத்தை விட்டு வெளியேற்றினார்கள், பின்பு மீண்டும் முன்னால் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் மீண்டும் குடியேற்றப்பட்டோம் என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் தங்களுக்குரிய வாழ்வாதார வசதிகளோ வீட்டு வசதிகளோ அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என்றும் தங்களுடைய கிராமசேவகர் மேற்படி விடயங்களை புறக்கணித்து வருவதாக தெரிவித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் கிரான் பிரதேச செயலாளர் ஆகியோர்களுக்கு முகவரியிடப்பட்டு கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரத்திடம் கையளித்தனர்.
மகஜரைப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் குறித்த கிராம சேவகருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருப்பின் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், குறித்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdivy.html
குமார் குணரத்னத்தை நாடுகடத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 07:47.04 AM GMT ]
குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த பொலிஸார் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அவ்வாறு செய்வது சட்டவிரோத செயல் என உத்தரவிடும்படியும் முன்னிலை சோஷலிச கட்சி நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், குமார் குணரத்னத்தை எதிர்வரும் 13ம் திகதிவரை நாடு கடத்த வேண்டாமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குமார் குணரத்னத்தை 13ம் திகதிவரை நாடு கடத்தக் கூடாதெனவும் 13ம் திகதி நீதிமன்றில் கருத்து முன்வைக்குமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதால் குமார் குணரத்னத்தை கைது செய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdivz.html
இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பே: இழுபறியில் இருந்த பிரேரணை நிறைவேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 07:53.16 AM GMT ]
கடந்த வருடம் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனை இன்று வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 24 ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று காலை கைதடியிலுள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த அமர்வில் முதலில் இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சபையில் இன்று காலை சமர்ப்பித்தார்.
இதன்போது உரையாற்றிய அவர்,
இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது திட்டமிடப்பட்ட தமிழ் இனப்படுகொலை என்பதற்கு சந்தேகமில்லை. நீண்டகாலமாக வடக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் சரியான தீர்வு காணப்படவில்லை.
இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது திட்டமிடப்பட்ட தமிழ் இனப்படுகொலை என்பதற்கு சந்தேகமில்லை. நீண்டகாலமாக வடக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் சரியான தீர்வு காணப்படவில்லை.
எனவே உடனடியாக சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வுகாண நடவடிக்கை வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்தப் பிரேரணைக்கு சபையிலுள்ள ஈ.பி.டி.பி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணை விரைவில் சிங்கள, தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் தமிழ், சிங்கள மொழிகளில் வெளியிடப்படும் என்றும், இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க - தமிழ் மக்களது எதிர்கால நடவடிக்கைகளுக்கான - சர்வதேச அரசியல் முன்னெடுப்புக்கான முக்கிய பிரேரணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது, பிரேரணையில் ''ஈ.பி.டி.பி.'' என்ற கட்சிப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட எதிரணி உறுப்பினர் தவநாதன், வரலாற்று முக்கியத்துவம்மிக்க இந்த தீர்மானத்தில் அந்த சொற்பதம் நீக்கப்படவேண்டும் என்று கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அந்த சொற்பதத்தை மட்டும் நீக்க உடன்பட்டார். இதனையடுத்து அனைத்து உறுப்பினர்களும் தமது ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்தி, தீர்மானத்தை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdiv0.html
Geen opmerkingen:
Een reactie posten