இராணுவத் தளபதி நியமன விவகாரத்தில் ரணிலுடன் முரண்பட மைத்திரி விரும்பவில்லை !
[ Feb 21, 2015 08:36:12 AM | வாசித்தோர் : 10370 ]
இராணுவத் தளபதி நியமனம் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பட்டுக் கொள்வதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபாலவின் தெரிவாக இந்த நியமனம் அமையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத் தளபதியாக கிருஸாந்த டி சில்வாவை நியமிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத் தளபதி நியமனத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலையீடு செய்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவை இராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டுமென சரத் பொன்சேகா கோரியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவரே இந்த மகேஸ் சேனாநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது. மேஜர் ஜெனரல் மகேஸை நியமிப்பதன் மூலம் சரத் பொன்சேகா மறைமுகமாக இராணுவத்தைக் கட்டுப்படுத்தக் கூடுமென்ற கருத்து நிலவியது. தற்போதைய இராணுவத் தளபதி 2014ம் ஆண்டில் ரஸ்யாவிற்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, கிருஸாந்தவை ரஸ்யாவிற்கு அனுப்பி வைத்திருந்தார். எனினும், மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தில் கிருஸாந்த பங்கேற்கவில்லை என்பத குறிப்பிடத்தக்கது. மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்பொத்தவும் இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அவரை விடவும் அதிகளவு சேவை மூப்பு உடைய அதிகாரிகள் இராணுவத்தில் கடமையாற்றி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரத் பொன்சேகாவின் அழுத்தங்களுக்கு அடி பணியாது, ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பாடுகளை வளர்க்காது மைத்திரிபால சிறிசேன புதிய இராணுவத் தளபதியை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/2354.html
மஹிந்தானந்த, சஜின் வாஸ் உள்ளிட்டவர்கள் எவ்வாறு குறுகிய காலத்தில் சொத்து குவித்தார்கள் ?
[ Feb 21, 2015 08:41:47 AM | வாசித்தோர் : 5400 ]
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள்
எவ்வாறு குறுகிய காலத்தில் சொத்து குவித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட
உள்ளது.மஹிந்தானந்த அலுத்கமகே, சஜின்வாஸ் குணவர்தன, துறைமுக அதிகாரசபையின் முன்னாள் தலைவர்
பிரியாத் பிந்து விக்ரம மற்றும் அவர்களது ஆறு உறவினர்கள் சொத்து விபரங்கள் தொடர்பில்
விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த நபர்களின் சொத்து விபரங்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார். வணிக வங்கிகள் உள்ளிட்ட 81 நிதி நிறுவனங்களிடம் விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், காணிப் பதிவாளர் திணைக்களம் மற்றும் நிதி நிறுவனங்களில் குறித்த நபர்களின் பெயரிலான சொத்துக்கள் வங்கிக் கணக்குகள் தொடர்பில் வசாரணை நடத்தப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளார் என அவரது மனைவியே குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/2355.html
சரணடையும் விடுதலைப் புலிகளை சுட்டுக்கொல்ல ,கோட்டபாயவால் அனுப்பப்பட்ட நபரே தற்போதைய புதிய இராணுவத் தளபதியாக நியமனம் பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளைக்கொடி விவகாரம் அனைவராலும் அறியப்பட்ட விடையம். புலிகளின் அரசியல் பொறுப்பாளர் ப.நடேசன் , பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று முள்ளிவாய்க்காலில் ராணுவத்திடம் சரணடைந்தார்கள். குறித்த இடத்திற்கு செல்லும் முன்னர் , மற்றும் அவ்விடம் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தவேளை ப.நடேசன் அவர்கள் சட்டலைட் தொலைபேசியூடாக வெளிநாட்டு நிருபரான மரியா கொல்வினோடு தொடர்பில் இருந்தார். தான் இன்னும் 30 நிமிடங்களில் உங்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தவில்லை என்றால் எமது உயிருக்கு ஆபத்து என்பது தான் அதன் பொருள் என்று அவர், தனது மகன் மற்றும் மரியா கொல்வின் ஆகியோருக்கு தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இடத்தில் அப்போது ராணுவப் பிரிவு ஒன்றுக்கு பொறுப்பாளராக , இருந்தவர் தான் இந்த மேஜர் ஜெனரல் கிருசாந்த டி சில்வா. இதனை ஐ.நா வின் அதிகாரியான விஜய் நம்பியார் நன்றாக அறிவார். கிருசாந்த டி சில்வா பொறுப்பாக இருந்த ராணுவ முகாமுக்கே வெள்ளைக்கொடியோடு இவர்கள் சென்று சரணடைந்தார்கள். கோட்டபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் , கிருசாந்த டி சில்வாவே புலிகளின் பிரமுகர்களை மற்றும் நடேசனின் மனைவி ஆகியோரைக் கொன்றார் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய சாட்சியாக இருந்த மெரியா கொல்வில் அம்மையார் இறந்துவிட்டார்.
மேஜர் ஜெனரல் கிருசாந்த டி சில்வா இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். அவர் லெப்டினன் தரத்திற்கும் பதவிஉயர்த்தப்பட்டுள்ளார். தற்போதுள்ள இராணுவ அதிகாரிகளில் அனுபவம் கூடியவரான இவரையே கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்ல அனுப்பியிருந்தார். இதனடிப்படையிலேயே அவர் பின்னர் வெளிநாட்டு தூதுரகமொன்றிற்கு நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி எவ்வாறு போர்குற்ற விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க முடியும் ?
http://www.athirvu.com/newsdetail/2352.htmlகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த நபர்களின் சொத்து விபரங்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார். வணிக வங்கிகள் உள்ளிட்ட 81 நிதி நிறுவனங்களிடம் விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், காணிப் பதிவாளர் திணைக்களம் மற்றும் நிதி நிறுவனங்களில் குறித்த நபர்களின் பெயரிலான சொத்துக்கள் வங்கிக் கணக்குகள் தொடர்பில் வசாரணை நடத்தப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளார் என அவரது மனைவியே குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/2355.html
புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனைக் கொன்ற நபரே தற்போதைய தளபதி !
[ Feb 21, 2015 08:22:45 AM | வாசித்தோர் : 26135 ]
சரணடையும் விடுதலைப் புலிகளை சுட்டுக்கொல்ல ,கோட்டபாயவால் அனுப்பப்பட்ட நபரே தற்போதைய புதிய இராணுவத் தளபதியாக நியமனம் பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளைக்கொடி விவகாரம் அனைவராலும் அறியப்பட்ட விடையம். புலிகளின் அரசியல் பொறுப்பாளர் ப.நடேசன் , பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று முள்ளிவாய்க்காலில் ராணுவத்திடம் சரணடைந்தார்கள். குறித்த இடத்திற்கு செல்லும் முன்னர் , மற்றும் அவ்விடம் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தவேளை ப.நடேசன் அவர்கள் சட்டலைட் தொலைபேசியூடாக வெளிநாட்டு நிருபரான மரியா கொல்வினோடு தொடர்பில் இருந்தார். தான் இன்னும் 30 நிமிடங்களில் உங்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தவில்லை என்றால் எமது உயிருக்கு ஆபத்து என்பது தான் அதன் பொருள் என்று அவர், தனது மகன் மற்றும் மரியா கொல்வின் ஆகியோருக்கு தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இடத்தில் அப்போது ராணுவப் பிரிவு ஒன்றுக்கு பொறுப்பாளராக , இருந்தவர் தான் இந்த மேஜர் ஜெனரல் கிருசாந்த டி சில்வா. இதனை ஐ.நா வின் அதிகாரியான விஜய் நம்பியார் நன்றாக அறிவார். கிருசாந்த டி சில்வா பொறுப்பாக இருந்த ராணுவ முகாமுக்கே வெள்ளைக்கொடியோடு இவர்கள் சென்று சரணடைந்தார்கள். கோட்டபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் , கிருசாந்த டி சில்வாவே புலிகளின் பிரமுகர்களை மற்றும் நடேசனின் மனைவி ஆகியோரைக் கொன்றார் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய சாட்சியாக இருந்த மெரியா கொல்வில் அம்மையார் இறந்துவிட்டார்.
மேஜர் ஜெனரல் கிருசாந்த டி சில்வா இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். அவர் லெப்டினன் தரத்திற்கும் பதவிஉயர்த்தப்பட்டுள்ளார். தற்போதுள்ள இராணுவ அதிகாரிகளில் அனுபவம் கூடியவரான இவரையே கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்ல அனுப்பியிருந்தார். இதனடிப்படையிலேயே அவர் பின்னர் வெளிநாட்டு தூதுரகமொன்றிற்கு நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி எவ்வாறு போர்குற்ற விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க முடியும் ?
Geen opmerkingen:
Een reactie posten