[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 07:31.06 AM GMT ]
நாட்டில் அரசியல் பிரச்சினைகள் இருந்த போதிலும் நாட்டிற்குள் எந்த பயங்கரவாத அச்சமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இருக்கும் வரையில் பெறப்பட்ட சுதந்திரத்தை அழிக்க இடமளிக்க போவதில்லை.
பொய்களை கூறி மக்களை ஏமாற்றவும் போவதில்லை. தற்போது பயங்கரவாத அச்சம் இல்லை. பல்வேறு அரசியல் பிரச்சினைகள் இருக்கலாம். வடக்கி்ல் உள்ள அரசியல்வாதிகள் அவர்களின் மக்களுக்கு சேவைகளை செய்யலாம்.
நாட்டிற்கு வெளியில் வாழும் மக்கள் அவர்களின் அரசியல் தேவைகளுக்கு அமைய செயற்பட சந்தர்ப்பம் உள்ளது. எனினும் குறுகிய நோக்கத்தில் அதனை பார்த்து இல்லாத பயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
முட்டாள், சுயநல அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அச்சத்துடன் வாழும் மனநிலையை மக்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. அப்படியான நிலைமைக்கு செல்ல வேண்டாம் என மக்களிடம் கௌரவமான முறையில் கோரிக்கை விடுக்கின்றேன்.
இலங்கை போர் நடைபெற்ற விதம் குறித்து எந்த தரப்புக்காவது சந்தேகம் இருக்குமாயின் அது சம்பந்தமாக உரிய விசாரணைகளை நடத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும். முன்னைய அரசாங்கம் எந்த தரப்பினருக்கும் அப்படியான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை.
இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து உள்நாட்டு விசாரணையை நடத்த தற்போது பொருத்தமான காலம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் அப்படியான விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgo0.html
நவ்ரு தீவில் கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி! ஆஸி.யிலிருந்து இலங்கை சென்றவர் விமானநிலையத்தில் கைது!
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 07:45.59 AM GMT ]
நேற்று 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், அவருடைய நிலை தொடர்பாக இதுவரைக்கும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் அகதிகள் அதிரடி கூட்டணியின் அமைப்பாளர் இயன் ரிண்டோல் தெரிவித்தார்.
தங்களக்கு என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாத காரணத்தினால் பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் உடனடியாக இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயன் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா இருந்து இலங்கை சென்றவர் விமானநிலையத்தில் கைது!!
இலங்கையில் இருந்து 2012 /8/12 ம் திகதி படகு மூலம் அவுஸ்திரேலியா வந்து 3 வருடங்கள் கழித்து சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு சென்றவர் விமானநிலையத்தில் குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க இவர் இலங்கையில் மீனவர் தொழில் புரிந்து வந்துள்ளார். புதிய அரசாங்கம் வெளிநாடு சென்றவர்களை நாட்டுக்கு வரும்படி கூரிய வார்த்தையைக் கேட்டு பயமில்லாமல் தானாகவே சுய விருப்பத்தின் பேரில் சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் வைத்து கைது செய்து குற்றப் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்துவதாகவும் நாளைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப் பாடுவார் என இலங்கை சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgo1.html
Geen opmerkingen:
Een reactie posten