தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 februari 2015

தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி மார்ச்சில் இலங்கை வருகை!

முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக்கும் செயல்திட்டம் இன்று முதல் ஆரம்பம்: ஹெல உறுமய
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 06:14.08 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் செயல்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தூய்மையான ஹெலஉறுமய" தெரிவித்துள்ளது.
தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்வதற்கான பிரதான நிபந்தனையாக கூட்டமைப்பின் தலைவர்களிடம் இதனை முன்வைப்பதாக உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் உதய கம்பன்பில நடத்தவுள்ளார்.
மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, தூய்மையான ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்த செயல்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு பதிலாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பலப்படுத்தி வாக்குகள் பிரிவதைத் தடுக்க வேண்டும் என்பதில் இந்தக் கட்சிகள் கவனமாக இருப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
பொது தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை எதிர்பார்த்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை எனில் மாற்று நடவடிக்கையொன்றுக்கு செல்லவேண்டி நேரிடும் என உதய கம்பன்பில தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன்,கட்சி தலைவரின் ஆதரவுடன் எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பு , நுகேகொட பிரதேசத்தில் பேரணியொன்றும் நடத்தப்படவுள்ளது. மகிந்தவுடன் இணைந்து நாட்டை வெற்றியடையச் செய்வோம் என்ற தொனிப்பொருளில் இப்பேரணி நடத்தப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjw4.html

69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடலாம்?
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 06:19.21 AM GMT ]
69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்கக் கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.
2010ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பதவி வகித்தால் அவர் பூரண ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள தகுதியுடையவராகின்றார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான 69 உறுப்பினர்கள் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த வாரமளவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஏப்ரல் முதல் வாரத்தில் பொதுத் தேர்தலை நடத்த நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 23ம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjw5.html

மீண்டும் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்திற்குள்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 06:28.46 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் நாடு முழுவதுமான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
தங்காலை, மெதமுலனவில் நேற்று கட்சி முக்கியஸ்தர்களைச் சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, தாம் எக்காரணத்தை கொண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுப் போவதில்லை எனவும் அவர் தமக்கு நெருங்கிய கட்சி முக்கியஸ்தர்களிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjw6.html

நிஷாந்த பயன்படுத்திய அரசாங்கத்தின் ஜீப் வண்டி மீட்பு
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 06:46.09 AM GMT ]
காலி, ஹெவலொக் பாதையில் வாகனம் பழுது பாரக்கும் நிலையமொன்றிலிருந்து அரசாங்கத்திற்கு சொந்தமான ப்ராடோ வகை வாகனம் ஒன்று நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது முன்னாள் அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம பயன்படுத்தியதென தெரியவந்துள்ளது.
குறித்த ஜீப் வண்டி மீட்கப்பட்ட, வாகனம் பழுது பார்க்கும் நிலையமானது அரசாங்க வாகனங்களை பழுது பார்க்கும் இடம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி மார்ச்சில் இலங்கை வருகை!
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 06:49.31 AM GMT ]
தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ராமபோசா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவர் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜெப் டயஜ் தெரிவித்துள்ளார்.
இவர் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார், என இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜெப் டயஜ் தெரிவித்துள்ளார்.
அவரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையின் நல்லிணக்கம் குறித்து தென்னாபிரிக்க அரசாங்கம் வழங்கவுள்ள பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார் என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் வருகை இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமாக அமையும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தென்னாபிரிக்க சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் எதிர்வரும் 24ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் சுற்றுலாத்தளங்களை இலங்கையில் விளம்பரப்படுத்துவதே பிரதி அமைச்சரின் விஜயத்தின் முக்கிய நோக்கம் எனவும் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜெப் டயஜ் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjxz.html


Geen opmerkingen:

Een reactie posten