தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 februari 2015

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த பிரதமர் வேட்பாளர்! தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை!- மஹிந்த

நானும் வலகம்பா ராஜா போன்று சிறிது காலம் மறைந்திருந்தேன்!– மேர்வின் சில்வா
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 10:54.34 AM GMT ]
தான் சில காலம் வலகம்பா ராஜா போன்று மறைந்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சில காலம் வலகம்பா ராஜா மறைந்திருந்தார். அதன் பின்னர் தேவையான நேரம் வெளியே வந்தார். அது போன்று கால்களை பின்னோக்கி செயற்பட வேண்டிய காலமும் உள்ளது.
நான் கூறியது போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒன்றிணைந்து செயற்படும் வெளிப்படை தன்மையான இந்த அரசாங்கத்திற்கும் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கும் நான் ஆதரவு வழங்குவேன் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை மிரட்டிய வழக்கு ஒத்திவைப்பு
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 11:35.37 AM GMT ]
பிரதம நீதியரசராக கடமை புரிந்த மொஹான் பீரிஸை மிரட்டிய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மொஹான் பீரிஸை மிரட்டியதாக கூறப்படும் நாளன்று அவருடன் தொலைபேசியில் உரையாடிய நபரின் இலக்கம் தொடர்பாக தொலைபேசி நிறுவனங்களில் பாரிய சோதனை செய்ததன் பின்னர் அறிக்கையை வழங்குமாறு குற்றபுலனாய்வு பிரிவுக்கு நிதிமன்றத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஒருவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை வெற்றி பெறவில்லை: ப்ரியாணி விஜயசேகர
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 12:06.29 PM GMT ]
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளமை வெறும் மிரட்டலாகும் என்று எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் செனவிரட்ன இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. எனவே ரணிலின் எச்சரிக்கையை பொருட்படுத்தத் தேவையில்லை என்று செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதுவரை காலமும் இலங்கையின் நாடாளுமன்றத்தில், கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் எதுவும் வெற்றி பெற்றதில்லை என்று நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான ப்ரியாணி விஜயசேகர தெரிவித்துள்ளார்.
வழமையாக அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது வெற்றி பெற்றால் குறித்த அமைச்சர் பதவிவிலக வேண்டும். அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டவுடனேயே அவர் பதவி விலக வேண்டும்.
இந்த சட்டத்தின் கீழ் கட்டாயம் என்றில்லாத போதும் சம்பிரதாய முறை என்று ப்ரியாணி விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான பிரேரணையை பொறுத்தவரையில் அவருக்கு அரசாங்கக்கட்சிக்குள் போதுமான ஆதரவு இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdip0.html

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த பிரதமர் வேட்பாளர்! தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை!- மஹிந்த
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 12:35.16 PM GMT ]
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போட்டியிடச் செய்யவுள்ளதாக கூட்டமைப்பின் நான்கு கட்சிகள் தெரிவித்துள்ளன.
கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் நுகேகொடையில் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த 5.8 மில்லியன் வாக்குகளை பெற்றமையை கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாசுதேச குறிப்பிட்டுள்ளார்.
இது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கையாகும் என்றும் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தம்மை பிரதமமந்திரி வேட்பாளராக களமிறக்கும் கலந்துரையாடல் தொடர்பில் இன்னமும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் தி;;ஸ்ஸ அத்தநாயக்கவை இன்று கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் பார்வையிட்ட பின்னர் ஊடகத்தினரிடம் மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdip1.html



Geen opmerkingen:

Een reactie posten