தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 februari 2015

வட மாகாணசபைத் தீர்மானம்! தேசிய ஒற்றுமைக்கு விழுந்த பலத்த அடி!– ஹெல உறுமய

மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 10:20.56 AM GMT ]
ஹாலி-எலவுக்கும் தெமோதரக்கும் இடையில் இன்று காலை 11.30 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டதினாலேயே மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 
சேதமடைந்துள்ள தண்டவாளங்களைத் திருத்துவதற்காக ஏற்கெனவே குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgx2.html

வட மாகாணசபைத் தீர்மானம்! தேசிய ஒற்றுமைக்கு விழுந்த பலத்த அடி!– ஹெல உறுமய
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 10:07.26 AM GMT ]
வட மாகாணசபைத் தீர்மானம் தேசிய ஒற்றுமைக்கு விழுந்த பலத்த அடியாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரச்சார செயலாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது தேசிய நல்லிணக்கத்திற்கு தடையாகவே கருதப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு விவகாரங்களில் தளர்வு ஏற்படுவது கடும்போக்குவாதம் தலைதூக்க வழியாக அமைந்துவிடக் கூடாது.
கடும்போக்குவாதமோ அல்லது பிரிவினைவாதமோ தலைதூக்க சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது.ஷ
இராணுவத்தினர் பிழை செய்திருந்தால் அது குறித்து விசாரணை நடாத்த உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணைகளின் மூலம் எந்தவொரு இலங்கையரையும் சர்வதேச நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்த இடமளிக்கப்பட முடியாது என வர்ணசிங்க இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgx1.html


Geen opmerkingen:

Een reactie posten