[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 11:32.31 PM GMT ]
இதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவுக்கு அடுத்த மாதத்தில் செல்வதாக அந்த அமைச்சின் அதிகாரி ஒருவரை கோடிட்டு ஏஎப்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
எனினும் இந்தப் பொறிமுறைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பூரண ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் என்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மேலதிக தகவல்களை அவர் வழங்கவில்லை.
ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr6A.html
படையினர் வசமுள்ள தனியார் காணிகள்: உரிமையாளரிடம் ஒப்படைக்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ் விஜயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 12:10.10 AM GMT ]
இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை எவ்வாறு மக்களிடம் மீளக் கையளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக வட பகுதிக்கு செல்கிறேன்.
தற்போது இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களில் அவர்களால் பயன்படுத்தாமல் வைத்திருக்கின்ற நிலங்கள் எவை என நாங்கள் முதலில் ஆராய வேண்டும்.
அதன் பின்னர் இவற்றை இனங்கண்டு இவ்வாறான நிலங்களை, உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்தியதும் அவர்களிடம் கையளிக்கலாம்.
இது பாதுகாப்பை வழங்குவது என்ற இராணுவத்தின் அடிப்படை நடவடிக்கையை எவ்வகையிலும் பாதிக்காது என அமைச்சர் தெரிவித்தார்.
இராணுவம் வடக்கில் பாதுகாப்பளிப்பதற்காகவே அங்குள்ளது. இராணுவம் தன்னை முகாம்களுக்குள் முடக்கிக்கொண்டு சிவில் நிர்வாகத்தை சிவில் நிர்வாகத்திடமும் பொலிஸாரிடமும் விட்டுவிட வேண்டும்.
நிர்வாக விடயங்களில் தலையிட வேண்டாம் என உயர் அதிகாரிகள் உரிய தரப்பினருக்கு உத்தரவை வழங்க வேண்டும்.
மக்களின் நாளாந்த வாழ்வில் அவர்கள் தலையிடாதவரை அவர்கள் இராணுவத்தை பிரச்சினையாக கருத மாட்டார்கள் எனவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnr6C.html
Geen opmerkingen:
Een reactie posten