தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 februari 2015

வடக்கில் படையினர் சுவீகரித்துள்ள காணிகளின் விபரங்களை திரட்டும் மீள்குடியேற்ற அமைச்சு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அதிகாரங்கள் குறைப்பு! ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 01:01.33 AM GMT ]
 பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அதிகாரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரெனக் குறைத்துள்ளார்.
இதுதொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13ம் நாள் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் அவரிடம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள முக்கியத்துவமற்ற நான்கு துறைகளை மேற்பார்வை செய்யும், கண்காணிக்கும் பொறுப்புகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரி, ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு சேவைகள் பாடசாலை, தேசிய கடெற் படையணி ஆகிய துறைகளை மேற்பார்வையிடும் பொறுப்புகள் மட்டுமே, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த பெப்ரவரி 10ம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணத்துக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாத முதல் வாரத்தில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன வடக்கு, கிழக்கில் உள்ள படைத்தளங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, படையினருடன் கலந்துரையாடிய நிலையில், அவரது அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டும்: முதலமைச்சர்கள் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 01:58.41 AM GMT ]
மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென ஆறு முதலமைச்சர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்ட மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது.
மேல், தென், வடமேல், வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் முதலமைச்சர்கள் இவ்வாறு கோரியுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்படுவதன் மூலம் பொதுத் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் முதலமைச்சர்கள் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை.

நிதிக் குற்றங்களை தடுக்க பூஜித ஜெயசுந்தர
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 02:01.21 AM GMT ]
நிதி ஒழுங்கின்மை, தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றாடல், சட்டவிரோத நிதித்தேடல், அதிகார துஸ்பிரயோகம் உட்பட்ட விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே இவற்றை தடுக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிதிக் குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவு செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவு, பொலிஸ் மா அதிபரின் தலைமையில் செயற்படவுள்ளது.
இதன் மூலம் பாரிய ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரிவுக்கு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பூஜித ஜெயசுந்தர தலைமை தாங்கவுள்ளார்.

ஐ.தே.கவினால் ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமயவிற்கு அழைப்பு!
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 03:34.39 AM GMT ]
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவிற்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு ஒன்றினை விடுத்துள்ளது.
ஹொரண பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த வெளியுறவு துறை பிரதி அமைச்சர் அஜித் பெரேரா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் செயற்பட்டது போன்று எதிர்வரும் காலங்களிலும் குறித்த இரு கட்சிகளும் செயற்படும் என தான் எதிர்பார்ப்பதாக அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்

நாட்டின் தலைமைத்துவத்தை எப்படியாவது கைப்பற்றுவதே பசிலின் நோக்கம்: சரத் குமார
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 04:31.31 AM GMT ]
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு தேவைபட்டது அடுத்த ஜனாதிபதி பதவியே என கூட்டணி உறுப்பினர் சரத் குமார குனரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று நீர்க்கொழும்பில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தாங்கள் வேண்டும் என்றே ஏற்படுத்திக்கொண்ட தோல்வி.
பசில் ராஜபக்ச தேசியக் கூட்டணி என்ற ரீதியில் பதவிகளை பெற்றுக்கொண்டு பொருளாதார விவகாரங்கள் என்று கூறி சகல அமைச்சர்களையும் பயமுறுத்தி அமைச்சரவையை அமைத்துக்கொண்டு சகல திட்டங்களையும் தன் கைக்குள் வைத்துக்கொண்டு கடமை புரிந்தார்.
குறித்த திட்டங்கள் அனைத்தும் பசில் ஊடாகவே செயற்படுத்தப்பட வேண்டும். எனவே மற்றைய அமைச்சர்கள் பயத்துடனே காணப்பட்டார்கள்.
இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட பசில் கூறியது போன்றே செயற்பட்டதனை எங்களால் காணக்கூடியதாக இருந்தது.
பசிலின் நோக்கமாக இருந்தது எப்படியாவது நாட்டின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்வதே என சரத் குமார குனரத்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSaKdev4.html

வடக்கில் படையினர் சுவீகரித்துள்ள காணிகளின் விபரங்களை திரட்டும் மீள்குடியேற்ற அமைச்சு
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 05:20.09 AM GMT ]
வடக்கில் யுத்தத்தின் போது படையினரால் சுவீகரிக்கப்பட்டு தற்போது அவர்களின் பாவனையில் உள்ள பொது மக்களின் காணிகளின் விபரங்களை திரட்டுவதற்கு மீள் குடியேற்ற அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக அரச அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் அடிப்படையில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் விபரம் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான விவரங்களில் மக்களின் வாழ்விடங்களில் படையினர் நிலை கொண்டுள்ளமையினால் இருப்பிடம் இன்றி அல்லல்படும் மக்கள் தொகையும் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தமது இருப்பிடங்களை விட்டு வட மாகாண மக்கள் தொடர்ந்து முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSaKdev7.html

Geen opmerkingen:

Een reactie posten