[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 11:25.11 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் போட்டியிடக் கூட திடம் கொண்டவர் எதிர்க்கட்சியில் இல்லை என்பதால், “நாடு வெற்றிபெற மகிந்தவுடன்“ என்ற கருப்பொருளில் மக்கள் கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் பொதுக் கூட்டம் ஒன்று நடத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு சுமார் 58 லட்சம் வாக்குகள் கிடைத்தன.
மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து ஆட்சி அதிகாரத்தை பெறாது போனால், இன்னும் 20 வருடங்களுக்காவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் அரச இயந்திரம் மற்றும் சர்வதேச உதவியை பெற்றுக்கொண்டு போட்டியிடும்.
அந்த போட்டியை எதிர்கொள்ள வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் அவசியம்.
உணர்வுபூர்வமான தலைவர் என்பதால், பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு விடுக்கும் கோரிக்கையை மகிந்த ராஜபக்ச ஏற்பார் எனவும் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfu6.html
ஐநா. விசாரணை அறிக்கை! இலங்கை அரசின் முயற்சிகளுக்கு எதிராக யாழ். பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 10:13.21 AM GMT ]
ஐநா. விசாரணை அறிக்கையினை வெளியிடும் காலத்தை தாழ்த்தவும், உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ம் திகதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்த யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழர் தாயகத்தில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பே என்பதை தமிழ் சமூகம் கோரியதன் அடிப்படையில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகம் சர்வதேச விசாரணையினை கோரியிருந்தது. இதற்கமைய குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகவும் உள்ளது.
இந்நிலையில் குறித்த அறிக்கையினை குறித்த காலத்தில் வெளியிடாமல் உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் ஐ.நா ஆணையக விசாரணை அறிக்கை வெளியாகும் காலத்தை தாழ்த்தவும் புதிய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இதனை எதிர்த்து நாம் எதிர்வரும் 24ம் தியதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இ.இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காலத்திற்கு காலம் இன அழிப்பின் பரிமாணங்களை உணர்ந்தவர்கள் நாங்கள். எனவே எமக்கு நியாயம் வேண்டும். அதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையினைக் கோரியிருக்கின்றோம்.
அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ள அறிக்கையினை, காலம் தாழ்த்தி வெளியிடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் எதிர்வரும் 24ம் திகதி குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கின்றோம். அதற்கு சகல அரசியல் தரப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfu1.html
Geen opmerkingen:
Een reactie posten