[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 06:32.02 AM GMT ]
முதலில் சமயவழிபாடை முடித்துக்கொண்டு ருஹுனு கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூஜையில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKceu3.html
அமைதி பேணிவரும் சந்திரிக்கா!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 06:44.55 AM GMT ]
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தற்போது அமைதி பேணி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சுக்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் நியமனம் தொடர்பில் சில கருத்து முரண்பாட்டு நிலைமையே இவ்வாறு அமைதி பேணுவதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க நிகழ்வுகளில் சந்திரிக்கா பங்கேற்பதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. தொலைபேசி ஊடாகக் கூட சந்திரிக்காவை தொடர்பு கொள்ள முடியவில்லை என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKceu4.html
இந்திய அரசின் மலையக வீட்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடிக்கு அழைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 06:56.49 AM GMT ]
நேற்று மாலை இந்திய தூதுவர் வை.கே. சின்ஹா உடன் இந்திய தூதகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடகங்களுக்கு மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம், கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோருடன் நானும் கலந்துக்கொண்டேன்.
கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்த இந்திய அரசின் உதவியுடனான மலையக வீடமைப்பு திட்டம், எதிர்வரும் காலங்களில் செவ்வனே நடைபெற, நாம் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று கூட்டாக இந்திய அரசுடன் இணைந்து செயற்பட உள்ளோம் என்ற உறுதி மொழியை நாம் இந்திய தூதுவருக்கு வழங்கினோம்.
இதன் அடையாளமாக, இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் நிறைவேற்றப்படவுள்ள இந்த வீடமைப்பு திட்டத்தின் ஒரு தொகுதிக்கான அடிக்கல்லை பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக மலையகத்துக்கு விஜயம் செய்து நாட்டிட வேண்டும் என்ற அழைப்பை நாம் கூட்டாக விடுத்துள்ளோம்.
இதை இலங்கை வரும் பிரதமரின் நிகழ்ச்சிநிரலில் இணைத்துக்கொள்ள ஆக்கபூர்வமான முழு முயற்சி செய்வதாக இந்திய தூதுவர் வை.கே. சின்ஹா எமக்கு உறுதியளித்துள்ளார்.
இன்றைய புதிய அரசில் மலையகத்துக்கு அமைச்சரவையிலும், ராஜாங்க அமைச்சர் பட்டியலிலும் கிடைத்துள்ள பதவிகள், மலையக தோட்ட தொழிலாளர்களின் வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வை பெற்று தரும் அடிப்படையில் அமைந்துள்ளன.
பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சின் மூலமாக விடுவிக்கப்படும் காணிகளில், உட்கட்டமைப்பு அமைச்சின் மூலமாக வீடுகள் கட்டப்படும்.
கடந்த காலங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலமாக இழுபறி நிலையில் கொண்டு செல்லப்பட்ட இந்த திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்பட கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணனும் முழு ஒத்துழைப்பை நல்குவார். எனவே இனி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட எந்தவித தங்கு தடையும் கிடையாது.
அரசியல் பேதங்களை மறந்து இந்த நல்ல காரியத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்துடன், இந்திய அரசின் வீடமைப்பு திட்ட வீடுகளை பெறவுள்ள பயனாளிகளை தெரிவு செய்வதில், இந்திய தூதரகம் முன்னெடுக்கும் விதிமுறைகளை நாம் ஏற்றுக்கொண்டுளோம். இதன்மூலம் எந்த வித கட்சி, சங்க பேதங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
நமது அரசாங்கத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையான லயன் வீடுகளை ஒழித்து தனி வீடுகளை கட்டித்தரும் நிலைபாட்டுக்கு, இந்திய வீடமைப்பு திட்டம் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதன்மூலம் மலையக பாட்டாளி வர்க்கம் ஒரு கிராமிய சூழல் நிரந்த சுதந்திர வாழ்க்கையை மலைநாட்டில் வாழும் எதிர்காலத்தை நாம் கூட்டாக உருவாக்குவோம்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKceu5.html
கிளி. கரைச்சி பிரதேச சபையின் 2015ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 07:12.59 AM GMT ]
கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பிரதேச சபை கடந்த வருடம் நிறைவேற்ற வேண்டிய வரவு செலவு திட்டத்தினை இன்று நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் 6 தடவைகள் குறித்த வரவு செலவு திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டு, திருத்தம் மேற்கொள்ள வேண்டி நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மீண்டும் சபையில் வாசிக்கப்பட்டது.
வரவு செலவு திட்டத்தினை தவிசாளர் நா.வை குகராஜா வாசித்தார். வரவு செலவு திட்டம் தொடர்பாக ஆளும், எதிர் அணி உறுப்பினர்கள் விவாதித்ததுடன், நீண்டகாலமாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றபடாமையால் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாதுள்ளைமையை சுட்டிக்காட்டினர்.
குறித்த வரவு செலவு திட்டத்தில் பல்வேறு குறைவுகள் காணப்படும் நிலையிலும், மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நிறைவு செய்வதற்கு ஆளும், எதிர் உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தினை ஆதரித்தனர்.
எதிர்வரும் அமர்வில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை மீள் திருத்தம் செய்து சபையில் முன்வைக்க வேண்டும் என சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், தவிசாளரும் அதனை ஏற்றுக்கொண்டார்.
வாத பிரதிவாதங்களை அடுத்து வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKceu6.html
கிளிநொச்சியில் காணாமல் போனோரின் உறவுகளால் நாளை கவனஈர்ப்பு போராட்டம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 07:15.14 AM GMT ]
கிளிநொச்சி மாவட்ட காணாமல்போன உறவுகளின் அமைப்பு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஒழுங்குபடுத்தியுள்ளது.
நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் இந்த அரசிடம் நீண்ட காலமாக எந்த தீர்வுகளும் இன்றி காணப்படும் காணாமல் போனார் மற்றும் சிறையில்வாடும் அரசியல் கைதிகளின் பிரச்சினையை கவனத்திற்கு கொண்டு வந்து, விரையில் நல்லதொரு தீர்வையெட்டும் நோக்கத்துடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நாளை காலை 9 மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் காணாமல் போன மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை ஒன்றுதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதே வேளை எதிர்வரும் 9ம் நாள் யாழ்ப்பாண நகர் பகுதியில் இதே போன்றதொரு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKceu7.html
Geen opmerkingen:
Een reactie posten