தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது இது உகந்த தருணம் அல்ல!



கைதிகள் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 09:33.20 AM GMT ]
வெலிக்கடையில் 2012ம் ஆண்டு இடம்பெற்ற கைதிகள் படுகொலைக்கு எதிராக வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கைதிகள் படுகொலைக்கு எதிரான மக்கள் ஒன்றியம் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததுடன், கைதிகளை கொலை செய்தோரை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம்
அதிரடிப்படையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு சென்று ஏற்படுத்திக்கொண்ட மோதலை அடுத்து நடு இரவில் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறையில் கொல்லப்பட்ட கைதிகளின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இ்நத ஆர்ப்பாட்டம் சிறைச்சாலைக்கு எதிரில் நடைபெற்றது.
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர்இ இந்த கொலைகளுடன் தொடர்புடைய கொலையாளிகள் பெயர் விபரங்கள் உட்பட நேரில் கண்ட சாட்சியங்களுடன் தகவல்களை வழங்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெலிகடையில் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அதிரடிப்படையினரின் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது. 
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno4D.html


யாழில் விபத்து: இளைஞர் பரிதாபமாக பலி- ஹற்றனில் கார் விபத்து
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 09:54.00 AM GMT ]
யாழ்ப்பாணத்தில்  இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். பண்டத்தரிப்பு சந்தியில் துவிச்சக்கர வண்டியுடன் தனியார் பஸ் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாதகல், வில்வளை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ரி.பகீரதன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தின் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹற்றனில் கார் விபத்து
ஹற்றன் நல்லதண்ணி பிரதான வீதியில் வனராஜா பகுதியில் சிவனொளிபாத மலையிலிருந்து பதுளைக்கு சென்ற கார் ஒன்று வனராஜா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கார் சாரதியின் தூக்க கலக்கத்தினால் இவ்விபத்து நோ்ந்துள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காரில் சென்றவா்கள் சிவனொளிபாதமலைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் போது இவ்விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
எனினும் பயணித்த காரில் பயணித்த 4 பேருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது இது உகந்த தருணம் அல்ல!
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 10:04.23 AM GMT ]
தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து தங்கிவரும் நிலையில் இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு உகந்த தருணம் இன்னும் ஏற்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில், "இலங்கைத் தமிழ் அகதிகள் விருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்புவது குறித்து, இருதரப்பு பேச்சு வார்த்தைகளைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், இன நல்லிணக்கம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும், தற்போது அங்கு நிலவிவரும் பயம் மற்றும் மிரட்டல் நிறைந்த சூழல், தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து தங்கிவரும் நிலை, உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இன்னும் மறுகுடியமர்த்தப்படாதிருப்பது,
புதிய இலங்கை அரசால் திட்டவட்டமான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படாதது போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும் போது, இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து விவாதிப்பதற்கான கூட்டத்தை நடத்துவதற்கு உகந்த தருணம் இன்னும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.
அதனால், இத்தகைய கூட்டம் தள்ளிவைக்கப்பட வேண்டும் என இந்த அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள் அமைதியான, நியாயமான முறையில் உரிய மரியாதையுடன் மறுகுடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதிகொண்டுள்ளது.
அகதிகள் தாயகம் திரும்புவதற்கான உகந்த சூழலை உருவாக்கத் தேவையான, போதிய பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுபான்மைத் தமிழர்களின் சுயாட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் முழுமையாக மீட்கப்பட்டு உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, இங்கு வாழும் அகதிகள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே இந்த அரசின் கருத்தாகும் என்று கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno4G.html

Geen opmerkingen:

Een reactie posten