தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 februari 2015

யாழ். மீனவர்களின் பல கோடி ரூபா பெறுமதியான வலைகள் இந்திய மீனவர்களால் அழிப்பு



கிணற்றிலிருந்து 4 வயது சிறுவனின் சடலம் மீட்பு: லிந்துலையில் சம்பவம்
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 01:22.52 PM GMT ]
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்ட குடியிருப்பொன்றில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 4 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஜெயகாந்த் சுதாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் விளையாட்டி கொண்டிருந்த சிறுவன் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
கிணற்றில் மிதந்து கொண்டிருப்பதை கண்ட பிரதேசவாசி ஒருவர் உடனடியாக சிறுவனை தூக்கிக்கொண்டு லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
எனினும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சிறுவன் பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் உள்ள லிட்டில் ஸ்டார் என்ற பாலர் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார்.
குறித்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் தந்தையின் அரவணைப்பிலேயே சிறுவன் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் அமோக நெல் விளைச்சல்: ஐங்கரநேசன்
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 12:58.29 PM GMT ]
கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை அமோக விளைச்சலைப் பெற்றுள்ள நிலையில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நேற்று அறுவடை விழா நடைபெற்றுள்ளது.
மத்திய கல்வி அமைச்சால் விவசாய வளாகப் பாடசாலை என அங்கீகாரம் பெற்ற உருத்திரபுரம் மகா வித்தியாலயம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 3 ஏக்கர் பரப்பளவில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பாடசாலையின் சகல தரப்பினரும் கூட்டிணைந்து மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கும் வருமானம் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஊடாகப் பாடசாலையின் அபிவிருத்திக்குச் செலவிடப்படுகிறது.
உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தின் முன்மாதிரியான இவ்விவசாய நடவடிக்கைகளைப் பாராட்டும் விதமாகவும் மேலும் ஊக்குவிக்கும் முகமாகவும் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நெல் அறுவடை விழாவில் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பாடசாலை அதிபர் திருமதி.மீனலோஜினி சிவதாஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.கணேசலிங்கம், விவசாய ஆசிரிய ஆலோசகர் சி.இளங்குமார், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.ஜெனார்த்தனன் ஆகியோருடன் ஆசிரியர்களும், மாணவர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றிருந்தார்கள்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkv7.html


யாழ். மீனவர்களின் பல கோடி ரூபா பெறுமதியான வலைகள் இந்திய மீனவர்களால் அழிப்பு
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 12:48.22 PM GMT ]
யாழ்.பருத்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகள், குடாநாட்டு மீனவர்களின் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் புரிந்துள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்துறை மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் 8 ற்கும் மேற்பட்ட இடங்களில் நேற்றைய தினம் இரவு இந்திய இழுவைப்படகுகள் கரையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரையில் நுழைந்துள்ளது.
இந்நிலையில் அங்கு போடப்பட்டிருந்த குடாநாட்டு மீனவர்களின் பெறுமதியான வலைகள் முற்றாக அறுத்து அழிக்கப்பட்டுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான வலைகள் காணாமல்போயிருக்கின்றன.
 இதேவேளை இவ்வாறு இந்திய இழுவைப்படகுகள், இதுவரைகாலமும் கரையோரத்திற்கு அண்மித்ததாக வந்திருக்கவில்லை என குற்றம்சாட்டும் மீனவர்கள் தாங்கள் தடுக்க முற்பட்டபோது அவர்கள் இழுவை படகுகளால் தங்கள் சிறிய வள்ளங்களை இடிக்க வந்ததாகவும் அவ்வாறு இடிக்கப்பட்டதில்,  ஒரு வள்ளத்தின் இயந்திரம் சேதமடைந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.
மேலும் இந்த அத்து மீறல்கள் தொடர்பில் கடற்படைக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டபோதும் அவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என
ஒதுங்கிவிட்ட நிலையில், கடற்படையின் படகுகளுக்கு அண்மையில் நின்றே இந்திய இழுவை படகுகள் நேற்றைய தினம் தொழில் செய்ததாக குடாநாட்டு மீனவர்கள் குற்றம்சாட்டுக்கின்றனர்.
இந்நிலையில் விரைவில் தாம் இந்திய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கும் தீர்வு கிடைக்காவிட்டால் இந்திய
இழுவை படகுகளை பிடித்து குடாநாட்டுக்கு கொண்டு வருவோம் எனவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் இந்திய துணை தூதுவர் தட்சணாமூர்த்தியுடன் தொடர்பு கொண்டு  கேட்டபோது,
இழப்புக்களை சந்தித்த மீனவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்படுமென தெரிவித்ததாக சுகிர்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkv6.html

Geen opmerkingen:

Een reactie posten