[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 01:45.55 PM GMT ]
அரசியலில் அனாதைகளாக மாறியுள்ள சிலரை இணைத்து கொண்டு மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசியல் முன்னணியை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையிலேயே விமல் வீரவன்ஸ உள்ளிட்ட அணி இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது..
இது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில், புதிய அரசியல் முன்னணிக்கு பதிலாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட முயற்சிக்க வேண்டும் என உதய கம்மன்பில மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சியும் தோல்வியடையும் பட்சத்தில் புதிய கூட்டணி ஒன்றில் போட்டியிடுவது அல்லது சில காலம் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவது என்ற இரண்டில் ஒன்றை நிச்சயமாக செய்தாக வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஏதோ ஒரு வகையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கினால், அதனை தினேஷ் குணவர்தன தலைமையில் ஏற்படுத்துவது எனவும் இவர்கள் தீர்மானித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkw1.html
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆரம்பக் கட்டக் கலந்துரையாடல்
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 01:46.40 PM GMT ]
இக்கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கச்சதீவு திருவிழாவை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மற்றும் அந்தந்த துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
யாத்திரீகர்களின் உணவு, சுகாதாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் யாழ் குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரை படகு போக்குவரத்தில் ஈடுபடவுள்ள தனியார் படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அதற்கான அனுமதிகளை வழங்குமாறும், ஒவ்வொரு படகுகளிலும் உயிர்காப்பு அங்கிகளை பயன்படுத்துமாறும் தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினரிற்கு அரசாங்க அதிபர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
மேலும் இக்காலப்பகுதியில் ஒருவருக்கான படகுச்சேவை கட்டணமாக ஒரு வழிப் பயணத்திற்கு ரூ 225 அறவிடப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் யாழ் நகரிலிருந்து குறிகட்டுவான் வரை எதிர்வரும் 28ம் திகதி காலை 6 மணியிலிருந்து நண்பகல் 2 மணிவரை தனியார் மற்றும் அரச பேருந்துகள் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடவுள்ளன.
மேலும் அந்தோனியார் ஆலய பூசை வழிபாடுகள் 01.03.2015 அன்று காலை 6 மணியளவில் இடம்பெற உள்ளதால் அன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து கச்சதீவிலிருந்து பக்தர்கள் மீள திரும்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவிலிருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால் அவர்களின் வசதிகளுக்காக இந்திய நாணயங்களை இலங்கை நாணயமாக மாற்றக்கூடிய ஏற்பாடுகளுடன் கச்சதீவில் ஒரு உற்சவகால கிளையினை இலங்கை வங்கி அமைப்பதற்கும் கலந்துரையாடப்பட்டது.
பொது மக்களின் பாதுகாப்பிற்கென நூற்றிற்கும் மேற்பட்ட இலங்கை பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தபடவுள்ளனரென பொலிஸ் திணைக்களத்தினர் நேற்றைய தின கலந்துரையாடலின் போது தெரிவித்தனர்.
மேலும் கச்சதீவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிப்பதற்காக வழங்கப்படும் நீரானது சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே வழங்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவுறுத்திய அரசாங்க அதிபர், இம்முறை கச்சதீவு பெருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து 3500ற்கு மேற்பட்ட யாத்திரீகர்களும் இலங்கையிலிருந்து 3500ற்கு மேற்பட்டவர்களுமாக மொத்தம் 7000ற்கு மேற்பட்ட யாத்திரீகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkw2.html
Geen opmerkingen:
Een reactie posten