தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 februari 2015

இலங்கைக்கு ஒரு வருடம் அவகாசம் வழங்கும் அமெரிக்கா - ஐ.நாவிடம் உள்நாட்டு விசாரணைகளை இலங்கை எதிர்பார்ப்பு

புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் 163 வாக்குகளால் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 12:34.38 PM GMT ]
இலங்கை புதிய தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
வாக்கெடுப்பின்போது வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் செலுத்தப்பட்டன. சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்.
கடந்த வாரத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக விவாதங்களும் இடம்பெற்றன.
இதேவேளை புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அதில் பங்கேற்கவில்லை.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, வை.ஜி பத்மஸ்ரீ, டியு குணசேகர. உட்பட்ட 11 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இலங்கைக்கு ஒரு வருடம் அவகாசம் வழங்கும் அமெரிக்கா - ஐ.நாவிடம் உள்நாட்டு விசாரணைகளை இலங்கை எதிர்பார்ப்பு
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 12:37.50 PM GMT ]
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் சம்பந்தமான விடயங்களை நிறைவேற்ற இலங்கைக்கு ஒரு வருடம் காலஅவகாசத்தை வழங்க அமெரிக்க முனைப்பகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த யோசனைகள் குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க ஒரு வருட காலம் அவசியம் என அரசாங்கம் அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் கோரியுள்ளது.
இலங்கையின் கோரிக்கையை அவர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதற்கு அமெரிக்க நிர்வாகிகளும் இணங்கியிருப்பதாக அமெரிக்க அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான யோசனையை விவாதிப்பதும் ஒத்தவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு விசாரணைகளுக்கு அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் ஆதரவை இலங்கை எதிர்பார்க்கிறது
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைகளை விசாரிக்க உள்நாட்டில் தீர்ப்பாயம் ஒன்றை நிறுவ இலங்கையின் புதிய அரசாங்கம் முனைப்பை மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில் சர்வதேச விசாரணையை கோரி நிற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவின் அரசியல் மற்றும் தார்மீக ஆதரவை அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் அமெரிக்கா செல்லவுள்ள வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளார்.
மங்கள சமரவீர நியூயோர்க்கில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு விசாரணையின்போது சர்வதேசத்தின் உதவியுடன் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் போது மங்கள சமரவீர மனித உரிமைகள் கண்காணிப்ப அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணை அறிக்கை. ஏதிர்வரும் மார்ச்சில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை ஒத்திவைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkv5.html


Geen opmerkingen:

Een reactie posten