[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 06:00.01 AM GMT ]
நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவர்கள் மோதுண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.
குறித்த பிரதேசத்திற்குற்பட்ட ரயில் பாதையை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 17 வயதுடைய செங்கலடி பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 15 வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரயில்வே கடவைகளை பாதுகாக்க நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர்
நாடுமுழுவதும் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஆயிரத்து 200 ரயில் பாதை கடவைகள் காணப்படுகின்றன எனவே அவற்றின் பாதுகாப்பினை உறுதி செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் ரயிலினால் ஏற்படுகின்ற அனர்த்தங்களை தவிர்க்க எதிர்பார்ப்பதாகவும் ரயில்வே போக்குவரத்து அமைச்சர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாத இறுதியில் சீனா செல்லும் மங்கள சமரவீர
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 06:08.39 AM GMT ]
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மங்கள சமரவீர சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சீன உதவி வெளிவிகார அமைச்சர் லியூ ஜியாங் சோவு உள்ளிட்ட பிரதிநிதிகள் மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்திருந்ததுடன் இதன் போது இந்த அழைப்புகளை விடுத்தனர் எனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளார்.
தங்காலையில் 10 வருடங்களுக்கு பின்னர் கூட்டம் நடத்திய ஜே.வி.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 06:17.37 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதியின் சொந்த ஊரான தங்காலையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனவரி 8 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை மாற்ற ஜே.வி.பி பாரிய பங்களிப்பை வழங்கியது.
எதிர்காலத்தில் நாட்டில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து நாடு முழுவதும் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாந்தோட்டையில் காணப்பட்ட நிலைமை என்ன?. இந்த மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட இடமளிக்கப்படவில்லை.
தங்காலை நகரில் வேறு எவருக்கும் கூட்டங்களை நடத்த இடமளிக்கப்படவில்லை, ஒட்டு கேட்கப்படும் என்று தொலைபேசியில் இருந்து மற்றைய தொலைபேசிக்கு பேசவும் மக்கள் பயந்தனர், ஊடகவியலாளர் எழுத பயந்தனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjpy.html
கசினோவுக்கு வரி அறவிடுவது நல்லது: நாமல் ராஜபக்ச
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 06:18.11 AM GMT ]
கசினோ சூதாட்ட விளையாட்டு அறவிடும் அதே தொகை வரி விளையாட்டு தொலைக்காட்சி அலைவரிகளுக்கும் அறிவிடப்படுகிறது.
கசினோவுக்கும் விளையாட்டுக்கும் இருந்து தொடர்பு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் நிவாரணங்களை கூடாது என்று கூறவில்லை. இது ஒரு புறம் நிவாரணங்களை வழங்கி மறுபுறம் சுரண்டும் வரவு செலவுத் திட்டமாக மாறியுள்ளது.
கசினோ சூதாட்டத்திற்கு வரி அறவிட வேண்டும் என நாங்கள் கூறமாட்டோம். நாங்கள் அது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். வரியை மேலும் அதிகரிக்க வேண்டும்.
கசினோவுக்கு அறவிடும் அதே வரியை விளையாட்டு அலைவரிசைகளுக்கும் அறவிடுவதைதான் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அப்படியானால், கசினோவுக்கும் விளையாட்டு தொலைக்காட்சிகளுக்கு இருக்கும் தொடர்பு என்ன? எனவும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
பொன்சேகாவின் எம்.பி பதவியுடன் ஜயந்த கெட்டகொட தலைமறைவு!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 06:59.46 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ஜனநாயகக் கட்சியில் இருந்த போது ஊடக செயலாளராக கயான் விதானகே பணியாற்றினார்.
இந்த நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கெட்டகொட மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார்.
எவ்வாறாயினும் எந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விட்டுக்கொடுக்க தயார் என கெட்டகொட ஊடகங்களிடம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய தயார் என பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் தலைமறைவாகியுள்ளதாக கயான் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில் மாபெரும் போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 06:54.56 AM GMT ]
இந்த போராட்டம் எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறும் என்று காணாமல் போனோரை தேடியறியும் குழு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசியல் கைதிகளின் உறவினர்கள் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjp2.html
Geen opmerkingen:
Een reactie posten