தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 februari 2015

ராஜபக்சவை விரட்டியது எரிக் சொல்ஹய்மா?– விமல் கேள்வி



புதிய அரசாங்கத்திடம் நீதி வேண்டி முன்னிலை சோசலிச கட்சி ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 09:33.14 AM GMT ]
முன்னிலை சோசலிச கட்சியினர் இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்தின் அருகில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தில் நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து அவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதே போன்று கண்டி மற்றும் பதுளை பிரதேசங்களிலும் முன்னிலை சோசலிச கட்சியினர் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
எப்படியிருப்பினும், அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரால் சந்திரத்தின தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdio2.html

புதிய குற்றச்சாட்டுக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மறுப்பு வெளியிட்டுள்ளார்!
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 09:54.40 AM GMT ]
அரசாங்கத்தினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.
மக்கள் மத்தியில் எனக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நாளுக்கு நாள் அரசாங்கம் என் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது.
அதி சொகுசு விமானம் ஒன்றை கொள்வனவு செய்து பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
விமான நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட விமானத்தில் சில ஆசனங்களை அகற்றி முக்கிய பிரபுக்கள் பயன்படுத்தக் கூடிய ஓர் தொகுதியை விமானத்தை விற்பனை செய்யும் நிறுவனம் இலவசமாக ஏற்படுத்திக்கொடுக்கத் திட்டமிட்டிருந்தது.
இந்த விசேட தொகுதிக்கான செலவு 15 மில்லியன் டொலர்கள் என்ற போதிலும் அதனை இலவசமாகவே குறித்த நிறுவனம் வழங்கவிருந்தது.
இந்த விடயத்தை அரசாங்கத் தரப்பினர் பிழையான வகையில் மக்கள் முன் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஜனாதிபதி செயலகம் 100,000 மில்லியன் ரூபா இந்த ஆண்டு செலவிற்காக ஒதுக்கியிருந்தது என்ற குற்றச்சாட்டிலும் உண்மையில்லை.
2015ம் ஆண்டுக்காக 9593 மில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இது ஜனாதிபதியின் பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமான நிதி அல்ல.
இதில் பல்வேறு கருமங்களை ஆற்ற வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.
ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 2750 மில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஜனாதிபதி மாளிகைகள் குறித்தும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.
சில மாளிகைகள் அந்நிய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. சில முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரினால் கட்டப்பட்டவை.
நான் இந்த ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்கவில்லை.
வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் நிராகரிக்கின்றேன்.
அனைத்து வாகனங்களையும் நாம் ஒப்படைத்துவிட்டே வெளியேறினோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdio5.html

ராஜபக்சவை விரட்டியது எரிக் சொல்ஹய்மா?– விமல் கேள்வி
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 10:06.01 AM GMT ]
சம்பந்தன், சம்பிக்க, அனுர குமார திஸ்ஸா நாயக்க போன்றோர் எரிக் சொல்ஹய்ம்க்கு தேவைப்பட்டதை செய்துள்ளார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாங்கள் வெற்றியடைந்துள்ளோம் என்றும், ராஜபக்சவை நாங்கள் துரத்தி விட்டோம் என்றும் எரிக் சொல்ஹய்ம் கூறுகிறார். அப்படி என்றால் ராஜபக்சவை விரட்டியது எரிக் சொல்ஹய்மா?.
சொல்ஹய்ம்க்கு தேவைபட்டுள்ளதே அனுர குமார திஸ்ஸா நாயக்கவுக்கும், சம்பந்தனுக்கும், சம்பிக்கவுக்கும் தேவைபட்டுள்ளது.
அப்படி என்றால் உண்மையில் அவ்வாறான ஒப்பந்தத்தை இவர்களே செய்துள்ளார்கள் என விமல் வீரவன்ச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdio6.html

Geen opmerkingen:

Een reactie posten