இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் 11மணிவரையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றிருந்தது.
யாழ்.பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய குறித்த ஆர்ப்பாட்டம் யாழ்.மாவட்டச் செயலகம் வரையில் வழிநடையாக வந்து மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் “எங்களுடைய பிள்ளைகளை படையினர் அழைத்துச் சென்றனர். பிள்ளைகள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த நபர்கள் கடத்திச் சென்றார்கள்.
பின்னர் எங்கள் பிள்ளைகளை காணவில்லை. அங்கே இருக்கின்றார்கள், இங்கே இருக்கின்றார்கள். என கூறுகின்றார்கள். ஆனால் இது வரையில் பதில் எவையும் கிடைக்கவில்லை.
ஜனாதிபதியே நீங்கள் மனிதாபிமானம் உள்ளவர் என்றால், அமைதியான மனிதர் என்றால் எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் என மாவட்டச் செயலத்திற்கு முன்பாக மக்கள் நிலத்தில் வீழ்ந்து கண்ணீர்மல்க கதறியழுது தங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் என உருக்கமான கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் யாழ்.மாவட்டச் செயலருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் மற்றும் தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjxy.html
Geen opmerkingen:
Een reactie posten