[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 08:39.17 AM GMT ]
இவர்கள் மூவரும் ராகம, மஹவ மற்றும் தெஹிவளையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் பொதுமகன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த மூவருக்கும் மரணத்தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டிருந்த மூவரும் கடந்த 10 வருடங்களாக சிறை படுத்தப்பட்டிருந்தார்கள் இந்தநிலையில் குறித்த மூவரையும் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைக்கு சென்றார் மஹிந்த ராஜபக்ச
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 09:33.22 AM GMT ]
சிறையில் மஹிந்த திஸ்ஸவுடன் சில நிமிடங்கள் உரையாடிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரும், 13ஆவது திருத்தத்தின் ஊடாக வடக்கு,கிழக்கு அதிகாரங்கள் வழங்குவோம், தமிழர்கள் எதிர்பார்க்கும் அனைத்து காரியங்களையும் செய்துகொடுப்போம் என உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கும் போலியான ஆவணமொன்றை ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது திஸ்ஸ வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பான விசாரணையில் திஸ்ஸ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdio3.html
மீண்டும் தமிழ் பிரிவினை வாதம் தலைதூக்க இடமளிக்ககூடாது: இந்தியாவிற்கு எச்சரித்த கோத்தபாய
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 09:48.32 AM GMT ]
இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் தமது அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது இவ்வாறு தமிழ்ப் பிரிவினைவாதம் தலைதூக்க இடமளிக்கவில்லை. தமிழ்ப் பிரிவினைவாதம் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த ஒன்றாகும்.
எனினும் தமிழ்ப் பிரிவினைவாதம் என்பது இலங்கையை விடவும் தமிழகத்தில் நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. 1980ம் ஆண்டில் தமிழ் ஆயுததாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி இந்தியா பாரிய வரலாற்று தவறிழைத்துவிட்டது.
இந்தியா மீண்டும் ஒரு தடவை பிழையானவர்களுக்கு பிழையான சமிக்ஞைகளை கொடுத்துவிடக் கூடாது. தமிழகத்தின் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்திருந்தது.
இந்தியாவுடன் இலங்கை எந்தக் காலத்திலும் சிறந்த உறவுகளையே பேணி வந்தது. சீனாவுடன் இலங்கை பேணி வரும் உறவுகளை இந்தியா தவறாக விளங்கிக்கொண்டுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இராணுவ விரிவாக்கமே தவிர மயப்படுத்தலல்ல: கோத்தாபாய
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை இராணுவம் விரிவாக்கப்பட்டதே தவிர இராணுவமயப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவர் அண்மையில் இந்திய இணையத்தள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
3 தசாப்தகால யுத்தத்தை வெற்றி கொள்ளும் நோக்கிலேயே நாம் இலங்கை இராணுவத்தை விரிவாக்கினோம். தமிழீழ விடுதலை புலிகள் உலகின் மிக கொடிய பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவு ஒரு முறை அடையாளப்படுத்தியிருந்தது, இந்த பயங்கரவாத அமைப்பை தரை, கடல், வான் வழி தாக்குதல்கள் மூலமாகவே இல்லாதொழிக்க நேரிட்டது.
அத்துடன் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் நிலப்பரப்புக்களை பாதுகாக்க பாரியளவு ஆளணி வளம் தேவைப்பட்ட நிலையிலேயே தான் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தோம். எனினும் யுத்தத்தை வெற்றி கொண்டதன் பின்னர் நாம் இராணுவத்தை அதிகரிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான அமைப்புக்கள் வட, கிழக்கில் ஆயுதம் ஏந்துவதற்கு நாம் ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கவில்லை.
எங்களுக்கு தேவைப்பட்டிருந்தால் புலிகளுக்கு எதிரான தரப்பினர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான தரப்பினரையும் ஆயுதம் ஏந்தி வட, கிழக்கில் வாழ்வதற்கு அனுமதித்திருக்கலாம்.
மேலும் புனர்வாழிவளிக்கப்பட்ட 11 ஆயிரம் முன்னாள் போராளிகள் இவ்வாறு ஆயுதங்களை ஏந்தியிருப்பதாக சர்வதேச உலகத்திற்கு சித்தரித்து காட்டிவிட்டு புலி எதிராளிகள் ஆயுதம் ஏந்துவதற்கு அனுமதி வழங்கியிருக்க முடியும்.
புலிகளுக்கு எதிரானவர்கள் தொடர்ந்தும் ஆயுதங்கள் ஏந்துவதற்கு அனுமதியளித்திருந்தால் வட, கிழக்கு மாகாணங்களின் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாற்றமடைந்திருக்கும்.
ஆனால் அது அவ்வாறு இடம்பெறவில்லை, நாமே இந்நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து ஆயுதக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து முழு நாட்டிற்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தோம்.
எங்களின் அரசாங்கத்தின் வெற்றியின் காரணமாகவே இன்று மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்ததே தவிர தமிழ்மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களது அரசாங்கம் 2005ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் சுதந்திரமும் நியாயமும் காணப்பட்டது.
எனினும் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளது. அதனாலேயே எமது அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எமது அரசாங்கத்தின் இராணுவத் தளபதியாக கடமையாயற்றியவருக்கு வடக்கு கிழக்கு மக்கள் பெருமளவில் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
நான் பணியாற்றிய அரசாங்கம் ஜனநாயக ரீதியான அரசாங்கம், நாட்டில் நடைபெற்ற சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தல்களை எமது அரசாங்கமே நடத்தியது. இதேவேளை யுத்தம் நிறைவு பெற்ற காலப்பகுதியில் நள்ளிரவுகளில் தேடுதல்கள் நடத்தப்படவில்லை, தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்டல் மற்றும் கண்காணிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வெறும் கற்பனை கதைகளே எனவும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.
கடந்த கால அரசாங்கத்தில் நான் பதவி வகித்த காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் எச்சந்தர்ப்பத்திலும் பழிவாங்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை.
நாட்டின் அனைத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடனும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமூகமான நல்லுறவினையே பேணி வந்தமையினாலேயே பெரும் எண்ணிக்கையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டனர்.
அத்துடன் கடந்த கால அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தத மங்கள சமரவீர போன்றவர்கள் கூட அரசாங்கத்தில் இணைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டன.
இதேவேளை 1980ம் ஆண்டு முதல் இலங்கையில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் யுத்தத்தை வெற்றி கொள்ள சீனாவிடமிருந்தே ஆயுதங்களை கொள்வனவு செய்தன, அதனையே எமது அரசாங்கம் முன்னெடுத்தது.
2006ம் ஆண்டில் இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பமான போது தமிழக அழுத்தங்கள் காரணமாக இந்தியாவினால் எமக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முடியவில்லை.
இந்தியா ஆயுதங்களை வழங்கியிருந்தால் இந்தியாவிடமிருந்தே நிச்சயமாக ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டிருப்போம் என இந்திய பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங்கிற்கு நான் ஒருமுறை டெல்லியில் வைத்து இது குறித்து விளக்கியிருந்தேன்.
எனது விளக்கத்தை அவரும் ஏற்றுக்கொண்டார். யார் விரும்பி வழங்குகின்றார்களோ அவர்களிடம் ஆயுதங்களை பெற்றுக்கொள்வதில் தவறு இருப்பதாக நாங்கள் அப்போது காணவில்லை.
இதனால் யுத்த நிறைவின் போதும் அதன் பின்னரும் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் இறுதி சில ஆண்டுகளாக இந்தியா இலங்கை தொடர்பில் தப்பான அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொண்டதுடன், சீனாவுடன் இலங்கை பேணி வரும் உறவினை இந்தியா பிழையாக விளங்கிக்கொண்டது.
சீனாவுடன் நாம் சிறந்த உறவுகளைப் பேணி வந்ததினால் கடந்த சில ஆண்டுகளில் சலுகை அடிப்படையில் சில அபிவிருத்தித் திட்டங்களை சீனா எமக்கு வழங்கியிருந்தது.
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பிழையாக விளங்கிக்கொண்டு இலங்கை சீனாவின் பக்கம் சாய்வதாக இந்தியா கருதிவிட்டது. .
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdio4.html
Geen opmerkingen:
Een reactie posten