தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 februari 2015

குடும்பத்தோடு அழிப்போம்: வடமாகாண சபை உறுப்பினர் விந்தனுக்கு இனந்தெரியாதோர் அச்சுறுத்தல்



12 லட்சம் ரூபா மாத வாடகையில் புதிய வீட்டை எடுத்த கோத்தபாய
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 01:32.25 PM GMT ]
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச தான் வசிப்பதற்காக புதிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளதுடன் அதன் மாத வாடகை 12 லட்சம் ரூபா என கூறப்படுகிறது.
கோத்தபாய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு அருகில் தனது புதிய வீட்டை தேர்ந்தெடுத்துள்ளார். கோட்டை தொகுதியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் அவர் அங்கு குடியேறியுள்ளதாக பேசப்படுகிறது.
கோத்தபாய அரசியலில் ஈடுபடுவது அவரது தனிப்பட்ட உரிமை. அவரது சொத்துக்கள் தொடர்பாகவே கேள்விகள் எழுந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய அரச அதிகாரி ஒருவர் எப்படி மாதம் 12 லட்சம் ரூபாவை வீட்டு வாடகையாக செலுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த பெருந்தொகை பணத்தை வாடகையாக செலுத்தும் அளவுக்கு எப்படி அவருக்கு சொத்துக்கள் கிடைத்தன என்பதும் பாரதூரமான பிரச்சினையாகும் என அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkw0.html

குடும்பத்தோடு அழிப்போம்: வடமாகாண சபை உறுப்பினர் விந்தனுக்கு இனந்தெரியாதோர் அச்சுறுத்தல்
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 12:24.26 PM GMT ]
வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் வீட்டிற்கு வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் தீவகத்திற்குள் நுழைந்தால் குடும்பத்தோடு அழிப்போம் என அச்சுறுத்தி விட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கருத்துத் தெரிவிக்கையில், 
நேற்றைய தினம் இரவு எனது வீட்டின் மீது சரமாரியாக கல்வீச்சு நடத்தப்பட்டது. இதன்போது வீசப்பட்ட கற்கள் வீட்டு கூரையின் மீதும்,
கதவுகள் ஜன்னல்கள் மீதும் வீழ்ந்தன.
பின்னர் சில நபர்கள் வீட்டின் கதவினை காலால் உதைத்தார்கள். பின்னர் என்னுடைய பெயரை கூறி வெளியே வா என கடும்தொனியில் கத்தினார்கள்.
இதனையடுத்து, நான் வெளிச்சத்தை போட்டுவிட்டு வெளியே வந்து மதிலால் எட்டிப் பார்த்தபோது வீட்டிலிருந்து 50 யார் தொலைவில் வெள்ளை நிற வாகனம் ஒன்று நின்றது. அதற்கருகில் சில நபர்கள் வாள் மற்றும் கம்பிகளுடன் நின்றிருந்தனர்.
அவர்கள் என்னைப் பார்த்து தீவகத்திற்குள் இனிமேல் நுழைந்தால் குடும்பத்தோடு அழிக்கப்படுவாய் என திட்டினார்கள்.
பின்னர் அவர்கள் சென்றுவிட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் நான் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருக்கிறேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkv2.html

Geen opmerkingen:

Een reactie posten