தகுதியற்ற பெண்களால் மாட்டிக்கொண்டார் நமால் ராஜபக்ஷ: நடந்தது என்ன ?
[ Feb 13, 2015 06:32:28 PM | வாசித்தோர் : 27365 ]
நாமல் ராஜபக்ஷவின் கடிதங்களுடன் வரும் தகுதியற்ற பெண்மாணவிகளுக்கு பல்கலைக்கழக அனுமதியை வழங்கிய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் செனிகா ஹிரிம்புரிகம பதவி விலகியுள்ளார்.
உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளரான அவர், நாமல் ராஜபக்ஷவின் நீலப்படையணி இயக்கத்துடன் இணைந்து செயற்பட்ட பல பெண்களுக்கு தகுதி இல்லாத போதும், அவரின் சிபாரிசின் பேரில் பல்கலைக்கழக அனுமதியை வழங்கி வந்தார்.
அத்துடன் கடந்த தேர்தலின் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிதியில் மகிந்தவுக்கு ஆதரவான தேர்தல் விளம்பரங்களை பிரசுரிந்திருந்தார். இந்தநிலையில் அவரை பதவி விலகுமாறு பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனை அடுத்தே அவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2277.htmlஎன்னிடம் 2 மணிக்கூடு தான் உள்ளது: போட்டோ ஷாப்பில் கிராஃபிக் செய்கிறார்கள்- நமால் !
[ Feb 14, 2015 05:53:59 PM | வாசித்தோர் : 6415 ]
சமீபத்தில் அதிர்வு இணையம் உட்பட , சில இணையங்கள் நமால் ராஜபக்ஷ அணிந்துள்ள பல்வேறு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் குறித்த செய்தியை வெளியிட்டு இருந்தது. சுமார் 10 க்கும் மேற்பட்ட அதி உச்ச விலைகொண்ட இந்த கைக்கடிகாரங்களை நமால் ராஜபக்ஷ , பல்வேறு நிகழ்ச்சிகளில் அணிந்துள்ளது புகைப்பட ஆதாரமாக வெளியாகியுள்ளது. நமால் ராஜபக்ஷவை தொடர்புகொண்ட , சிங்கள ஊடகம் ஒன்று இதுதொடர்பாக விசாரித்துள்ளது. அதற்கு பதிலளித்த நமால் , தம்மிடம் 2 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளது என்றும் , அது கூட தனக்கு பரிசாக வழங்கப்பட்டது தான் என்று சிறுபிள்ளை தனமாக பதில் கூறியுள்ளார். ஒரு நாட்டின் அதிபரின் மகனிடம் 2 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளது என்றால் எவர் நம்புவார்கள் ? சொல்லுங்கள் ..
சாதாரண மனிதர்களிடமே 2 க்கும் மேற்பட்ட கைக்கடிகாரங்கள் இருக்கும். இதேவேளை வெளியான புகைப்படங்களில் உண்மை இல்லையெனவும். அது கிராஃபிக்சில் செய்யப்பட்டுள்ள போலியான புகைப்படங்கள் என்றும் நமால் கூறியுள்ளார். குறித்த இந்த புகைப்படங்கள் அனைத்தும் , நிகழ்சிகள் நடைபெற்றவேளை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். இவை பத்திரிகைகளில் வெளியாகியும் உள்ளது. ஆனால் அவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பார்கும் வேளையில் தான் , நமால் எத்தனை விதமான மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை அணிந்துள்ளார் என்பது தெரிகிறது. இதனையும் அவர் போலி என்கிறார்.
http://www.athirvu.com/newsdetail/2282.html

Geen opmerkingen:
Een reactie posten