தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு! கவலையோ, மகிழ்ச்சியோ இல்லை!- த.தே.கூட்டமைப்பு

இராணுவப் பதவிகளில் பாரிய மாற்றங்கள்! 16ம் திகதி முதல் அமுல்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 01:57.43 AM GMT ]
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்கவின் வழிகாட்டலில் இலங்கை இராணுவத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
இந்த மாற்றங்கள் கடந்த திங்கட்கிழமை(16) முதல் அமுலுக்கு வருகின்றன.
இதன்படி இராணுவ சுயாதீனப்படையின் அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் லலித் தலுகல இராணுவ தலைமையக அபிவிருத்தி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமையகத்தின் கட்டளையதிகாரியாக இருந்த லால் பெரேரா  கிழக்கு மாகாண தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்
மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா தலைமையகத்தின் கட்டளையதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சன்ன பி குணதிலக்க இலங்கை இராணுவத்தின் சுயாதீனப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தலைமையக மத்திய கட்டளையதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்
வன்னி கட்டளையதிகாரியாக இருந்த பொனிபொஸ் பெரேராää தலைமையக அதிகாரி அலுவலகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போது இராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த யாழ்ப்பாண கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
மேஜர் ஜெனரல் ஜே வலகம கிழக்கின் தலைமையக கட்டளைய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாண தலைமையக அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், இராணுவ தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்
வன்னிக்கான கட்டளை தளபதியாக அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார்
இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் ரபுக்பொத்த
இலங்கையின் இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் ரபுக்பொத்த நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 23ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கவின் பணிப்பில் சேவை அவசியம் கருதி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத்தின் முக்கிய பதவிகளில் பொன்சேகா ஆதரவாளர்கள்!
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததால், பழிவாங்கப்பட்டு, மீண்டும் அண்மையில் இராணுவத்தில் இணைக்கப்பட்ட மேஜர் ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களுக்கு இராணுவத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைய ஜனாதிபதி இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கான கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் இராணுவத் தளபதிக்கு அனுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno0D.html


ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு! கவலையோ, மகிழ்ச்சியோ இல்லை!- த.தே.கூட்டமைப்பு
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 11:19.31 PM GMT ] [ பி.பி.சி ]
ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள தீர்மானம், தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்டம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐநா மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் புதிய அரசு இந்த விஷயத்தில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்துவதாக உறுதியளித்து , விசாரணை அறிக்கையை வெளியிடுவதை ஒத்திவைக்கக் கோரியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு என்பது, இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் புதிய விஷயங்களை விசாரணைக் குழுவின் முன்னர் வைக்கவும் வழிவகுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே இந்த காலகட்டத்தில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலுடன் ஒத்துழைப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten