[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 04:18.06 PM GMT ]
பொரளையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் சில தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நுகேகொடையில் 18ம் திகதியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்.
மஹிந்த ராஜபக்சவை ஆட்சி பீடமேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்கின்றேன்.
கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என கட்சி அறிவித்துள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் கூட்டத்தில் பங்கேற்பது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு புறம்பானது.
கட்சியின் தீர்மானத்திற்கு புறம்பாக செயற்பட விரும்பவில்லை. எனினும் கூட்டத்தில் பங்கேற்கவே தனிப்பட்ட ரீதியில் விரும்புகின்றேன் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSaSUnozI.html
அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பே கோடிட்டுக் காட்டுகிறார்!- த.கலையரசன்.
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 03:31.50 PM GMT ]
இன்று வீரமுனை அறநெறி பாடசாலை மணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வானது அறநெறி பாடசாலையின் ஆலோசகரும் ஆசிரிய ஆலோசகருமாக எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார். அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு ரவிக்குருஜீ. கலையரசனின் பிரத்தியேக செயலாளர் பா.புவிராஜ். மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் அறநெறி பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மகாகணசபை உறுப்பினர் த.கலையரசன்
அம்பாறை மாவட்டமானது போராட்ட காலத்தில் பலகோணத்திலும் பல தியாகங்களை செய் மாவட்டம் அதே நேரம் இங்குள்ள தமிழ் மக்களை இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் இரண்டு இனங்களும் முன்னின்று செயற்பட்டு அதிலும் வெற்றி கண்ட வரலாறும் அவர்களுக்கு உண்டு.
அன்றும், இன்றும் ஒரு இனத்தின் இருப்பை அழிப்பதற்காக பல முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்ட்டு வருகின்றது குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே அம்பாறை நகர் அன்று தமிழர்களுடையதாகவே இருந்திருக்கின்றது என்பதற்கு பல சான்றுகள் இன்றும் இருக்கின்றது குறிப்பாக இந்து ஆலயம். மகா வித்தியாலயம் என்பன ஆனால் தற்போது என்ன நடந்திருக்கின்றது இங்கு வாழ்ந்த மக்கள் இருந்த இடமே இல்லாமல் அழிக்கப்பட்ட வரலாறுகளே நாம் இன்று கண்டு கொண்டிருக்கின்றோம்.
1956ம் ஆண்டு முந்நூற்றிற்கும் மேற்பட்ட தமிழர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள் அதே போன்றுதான் வீரமுனையிலும் 1990 ஏற்பட்டது அனால் ஏதோ இறைவனின் கருணையால் மீண்டும் இந்த மக்கள் இந்தப் பிரதேசத்தில் வந்து குடியமர்த்தப்பட்டு பல இன்னல்களுக்கும் மத்தியில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
அழிவுகளை சந்தித்து உரிமைக்காக போராடிய எமது மக்களுக்காக வேண்டி எதிர்வரும் காலங்களில் த.தே.கூட்டமைப்பானது பல வேலைத்திட்டங்களை செய்வதற்கு பல முயற்சிகளை செய்து வருகின்றது அதனொரு கட்டமாகவேதான் இன்று புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ் உறவுகள் இங்குள்ள தமிழ் உறவுகளுக்கு ஏதாவது செய்யவேண்டம் என்பதற்காக ஜேர்மனியில் இருக்கும் தாயக நண்பர்கள் செய் உதவிகள் மூலம் இந்த அப்பியாசக் கொப்பிகளை அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கும் செய்து வருகின்றோம்.
சம்மாந்துறை கிராமமானது முன்பு ஒரு காலத்தில் குரு நில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த பூமி இந்த இடத்தில் தமிழர்கள் முன்பு வாழ்ந்தார்களா? என்ற கேள்வியினை கேட்கும் நிலை இன்று உருவாகி இருக்கின்றது காரணம் இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள் அவர்களது தடயங்கள் மாத்திரமே இன்று மிஞ்சியிருக்கின்றது.
வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் தமிழர்கள் பரந்தளவில் பூர்வீக குடிகளாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருந்த போதும் அதனை கபளீகரம் செய்து தங்களது இடங்கள் என்று காட்டும் அளவிற்கு வேற்று இனத்தவர்களின் ஆதிக்கம் இருந்து வருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்கு எமது தமிழ்த் தலைமைகள் இராஜதந்திர முன்நகர்வுகளை செய்து கொண்டு வருகின்றார்கள் அதில் எமக்கு எதிர்காலத்தில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் அது வரைக்கும் நாம் பொறுத்திருந்து செயலாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.
தமிழ் இனம் வாழ்ந்தது என்பதற்கு ஆதாரமாக இருப்பது எமது கலை கலாசாரங்கள் அதனை பாதுகாப்பது நாம் அனைவரது பொறுப்பாகும். இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. இங்கே சிங்கள. முஸ்லிம் சகோததர்கள் திட்டமிட்ட செயற்பாடுகளை அரங்கேற்றியதன் காரணமாக பல கிராமங்கள் இருந்த இடமே இல்லாமல் போயிருக்கின்றன என்பது யாவருக்கும் தெரிந்த விடயம்.
காணிகளை கையாளக்கூடிய அதிகாரம் பிரதேச செயலகத்திற்கும் பிரதேச சபைக்குமே உள்ளது. ஆனால் இந்த நாட்டிலே காணிகளை கையாளக்கூடிய வல்லமை அரச படையினருக்கும், வனபரிபாலன இலாகாவிற்கும், தொல்பொருள் திணைக்களத்திற்குமே இருக்கின்றது.
இவ்வாறானவர்களை வைத்துக்கொண்டு எமது தமிழ் பிரதேசங்கள் பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்காக நாங்களும் பல வேலைத்திட்டங்களை முன்னகர்த்தி வருகின்றோம். அந்த வேலைத்திட்டங்கள் தற்போது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள் ஆனால் எத்தனை பேர் எந்தக் கிராமத்தில் அழிக்கப்பட்டார்கள் என்றால் எந்த உண்மையான தகவலும் பிரதேச செயலகங்களில் இல்லை. அவ்வாறு இருந்தாலும் உண்மைக்கு புறம்பான தகவல்களையே வைத்திருக்கின்றார்கள். இவ்வாறுதான் எம்மினத்தின் அழிவுகள் எம்மவர்களால் பேணப்படவில்லை ஆனால் இனிவரும் காலங்களில் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு ஆவணங்களாக பேணப்பட வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றார்கள். இனிவரும் காலங்களில் நாம் அடிமைகளாக வாழாமல் எங்களுக்கென்று உரிமையுடன் வாழ்வதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயற்பட்டு வெற்றியடைய வேண்டும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSaSUnozH.html
Geen opmerkingen:
Een reactie posten