[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 02:05.00 PM GMT ]
பிரதான எதிர்க்கட்சிகள் பலமின்றிய கட்சிகளாக மாறியுள்ள எனவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நோக்கி ஒன்றிணைந்து வருகின்றனர்.
அரச வாகனங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என ஆளும் கட்சியினருக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
அதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்ட ரோசி சேனாநாயக்க, புத்திக பத்திரன, சுஜிவ சேனசிங்க ஆகியோர் இன்று எதனை செய்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் தனது இறுதி உரையை நிகழ்த்தும் போது, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேசையில் தாளம் போட்டுக்கொண்டு பாட்டு பாடிக் கொண்டிருந்தார்.
இதனிடையே மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் அதிகளவானோர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.
எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியினால் ஐந்து உறுப்பினர்களை கூட வெற்றிபெற செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
பொதுநலவாய மாநாட்டு விவகாரம்: கையெழுத்து வேட்டையில் பிரித்தானியத் தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 01:43.49 PM GMT ]
பொதுநலவாய உச்சிமாநாட்டு விவகாரம் மட்டுமல்ல அதற்கும் அப்பால், சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் ஓர் இறுக்கமான மாற்றம் அவசியம் என்பதனை வலியுறுத்தும் பொருட்டு இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு சிறிலங்கா விவகாரத்தினை தீவிரமாக கொண்டு செல்வதன் ஊடாக, பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதோடு, பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா தொடர்பில் இறுக்கமான நிலைப்பாட்டினை பிரித்தானியா எடுப்பதற்கு வழிகோலும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten