தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 augustus 2013

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்!- நவிபிள்ளை - திருமலை - மூதூர் கொலைகள்: சட்டமா அதிபரிடம் நவிபிள்ளை விசாரணை

18வது சட்ட திருத்தத்திற்கு ஆதரவளித்தது முஸ்லிம் காங்கிரஸ் செய்த மிகப் பெரிய பாவம்!- ரவூப் ஹக்கீம்
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 12:00.14 AM GMT ]
18வது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவளித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து மிகப் பெரிய ஒரு பாவத்திற்கு உடந்தையாக இருந்திருக்கின்றோம் என அக்கட்சியின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வட மேல் மாகாணசபையில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு  நடைபெற்ற பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றி இன்று நாலாபுறமும் பலவிதமான விமர்சன கருத்துக்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார மேடையொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசுடனான உறவு சம்பந்தமாக ஏளனமான சில வார்த்தைப் பிரயோகங்கள் செய்யப்பட்டதாக கேள்விப்பட்டேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அரசுக்கும் இருக்கின்ற  உறவு சம்பந்தமான உண்மை நிலைமை என்ன என்பது மிகத் தெளிவாக தெரிந்த விடயம்.
நான் இன்று இந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருக்கின்றேன் என்பது மிகவும் சங்கடத்திற்கிடமான விடயமாகப் பலராலும் பார்க்கப்படுகின்றது.
இன்று பாதுகாப்பு அமைச்சு இரண்டு கூறுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவோடு பொலிஸ் திணைக்களம் சட்டமும் ஒழுங்கும் என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
இவையெல்லாம் அடுத்து வருகின்ற சர்வதேச கண்காணிப்பு சம்பந்தமான விடயங்களில் இந்த அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய நிலையிலே இப்படியான சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த அரசாங்கத்தின் உள்ளேயிருந்து விமர்சிக்கின்ற, அதனுடைய போக்கை கண்டிக்கின்ற ஒரு பாத்திரத்தை நாங்கள் செய்துகொண்டு வருகின்றோம். அது இந்த அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கடியை மிகவும் பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அமைச்சரவையில் இருக்கின்ற எல்லா அமைச்சர்களுக்கும் தெளிவாகத் தெரியும்.
சில அமைச்சர்களுக்கு எங்களையும் அரசாங்கம் பழிவாங்குகின்றது என்று காட்ட வேண்டும். உண்மையிலேயே அரசில் பழிவாங்கப்படுகின்ற ஒரு அமைச்சர் இருப்பாரென்றால் அது என்னைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது.
ஆனால் இன்று வேறு சில அமைச்சர்கள் இந்த அரசாங்கம் எங்களையும் பழிவாங்குகின்றது எனக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது.
வடக்கிலே அரசாங்கத்தோடு இணைந்து கேட்க வேண்டும் என நான் வற்புறுத்தப்பட்டேன். எனினும் போட்டியிட முடியாது என மிக நேர்மையாகவும் பக்குவமாக ஜனாதிபதிக்கு தைரியமாக நான் சொல்லியிருக்கின்றேன்.
இந்த அமைச்சுப் பதவியைத் தந்துவிட்டு நீங்கள் வட மாகாண சபைத் தேர்தலில் தனியாகக் கேட்கலாம் என்று ஜனாதிபதி சொன்னார். ஆனால் அவரால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை விலக்குவதற்கு முடியாமலிருக்கின்றது.
ஏனெனில் பலமான அந்தஸ்த்தில் ஜனாதிபதி இருப்பதற்கு நாங்கள் பெரிய பரோபகாரத்தைச் செய்திருகின்றோம்.
இங்கிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து மிகப் பெரிய ஒரு பாவத்திற்கு உடந்தையாக இருந்திருக்கின்றோம். அது இந்த 18ஆவது சட்ட திருத்தத்திற்கு ஆதரவளித்ததாகும்.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் ஆயுட்காலம் முழுக்க ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிடலாம். இல்லையென்றால் இன்னும் இரண்டு வருடத்தில் அவர் நிரந்தரமாக ஓய்வு எடுக்க வேண்டும்.
இப்போதிருந்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் தலைமைப் போட்டி ஆரம்பித்திருக்கின்றது.  அந்தப் போட்டியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக மூன்றாகத் துண்டாடப்பட்டிருக்கலாம். ஆனால் அவை எதுவும் நடக்காமல் மிகப் பலம் வாய்ந்த ஒரு ஜனாதிபதியாக இந்த நாட்டு ஜனாதிபதி இருக்கின்றார் என்றால் அதற்கு நாங்கள் துணை போகியிருக்கின்றோம் என்ற ஒரு விடயமிருக்கின்றது.

ஜனாதிபதியோடு ஆகக் கூடுதலாக முரண்படுகின்ற ஒரு அமைச்சர் இருப்பாராயிருந்தால் அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தான் என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். 

 இன்று இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் மாகாண சபையின் அதிகாரங்களை பறிப்பதற்கு எடுத்த நடவடிக்கையின் போது அதைத் தடுப்பதற்காக நான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட நிலையிலும் அவசர அவசரமாக நாடு திரும்பினேன். நான் தான் அந்த அமைச்சரவைப் பத்திரத்தைக் காரசாரமான முறையிலே அமைச்சரவையில் ஜனாதிபதியோடு வாதிட்டு அதைச் செய்ய முடியாது எனச் சொன்னோம்.
இந்த மாகாண சபை முறையில் உயிர் நாடியாக இருப்பது சட்டமியற்றும் அதிகாரம். அந்த சட்டமியற்றும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்ற மாகாண சபை அதிகாரம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் சட்டமியற்ற முடியாது.
சட்டமியற்ற வேண்டுமென்றால் அந்த மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுத்தான் இயற்ற வேண்டும்.

இல்லையென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று இயற்ற வேண்டும். இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொடுப்பதில் எங்களுக்கொரு பேரம் பேசும் சக்தி இருக்கின்றது. எங்களிடம் எட்டு ஆசனங்கள் இருக்கின்றது. நாங்கள் இல்லாமல் அதனை அடைய முடியாது என்கின்ற நிலை இருக்கின்றது. 
எனவே அரசாங்கம் நெருக்கடிக்குள்ளே போய்விட்டது. அதனை கிடப்பிலே போடவேண்டிய நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுவிட்டது. இதைக் கொண்டுவந்த ஜீ.எல். பீரிஸ் ஆப்பிழுத்த குரங்கு மாதிரி இருந்தார்.
இது ஜீ. எல். பீரிஸுக்கு உரிய விடயமல்ல. உண்மையிலேயே இந்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டியவன் நான். ஆனால் எனக்கும் இது தெரியாது. இரவோடிரவாக இச்சட்டமூலத்தை கொண்டுவந்துவிட்டார்கள் எனக் கேள்விப்பட்ட உடனேயே நான் வெளிநாட்டுப் பயணம் போக வேண்டிய நிலையிலும் நாடு திரும்பி அமைச்சரவையிலே நான் நிகழ்த்திய போராட்டத்தின் விளைவாகத்தான் இன்று அரசாங்கம் இவ்விடயத்திலே பின்வாங்கியிருக்கின்றது.

இல்லையென்றால் இதோடு சேர்ந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு நாங்கள் செய்துவிடலாம். ஏனென்றால் வடக்கிலே தேர்தல் நடத்த முன்னர் இந்த விடயத்தைச் செய்ய வேண்டும் என்று ஒரு முயற்சி நடந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் பார்த்துக்கிட்டு எங்கள் அமைச்சர்கள் எல்லாம் சிலர் வாயே திறக்காமல் இருந்தார்கள். என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVfv7.html#sthash.hwI5diji.dpuf

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்!- நவிபிள்ளை - திருமலை - மூதூர் கொலைகள்: சட்டமா அதிபரிடம் நவிபிள்ளை விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 27 ஓகஸ்ட் 2013, 12:17.09 AM GMT ]
இலங்கை வந்துள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், சட்டமா அதிபர் பாலித ஃபெர்னாண்டோ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது உட்பட சிறுபான்மை சமூகத்தினர் எதிராக நடந்துள்ள சம்பவங்கள் குறித்து தன்னிடம் விசாரித்ததாக நவநீதம்பிள்ளையை சந்தித்த பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தன்னிடம் விசாரித்ததாக ஹக்கீம் கூறினார்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என நவநீதம் பிள்ளை தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை நீதித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் முழுமையாக நீங்கிவிட்டதாக அரசாங்கம் கருதாத நிலையில், இச்சட்டத்தை தற்போது முற்றாக நீக்கும் முனைப்பில் அரசாங்கம் இல்லை என்பதை ஐநா ஆணையாளரிடம் தான் தெரிவித்ததாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
திருமலை - மூதூர் கொலைகள்: சட்டமா அதிபரிடம் நவிபிள்ளை விசாரணை
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள்  மற்றும் மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டு பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சட்டமா அதிபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோவை நேற்று திங்கட்கிழமை சந்தித்த போதே மேற்கண்ட விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
2006ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொல்லப்பட்ட தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் 5 மாணவர்களின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடர்பில் அவர் கேட்டபோது, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டதாக சட்டமா அதிபர் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2006ம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்களை சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 12  பேரையும்  குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பட்டினிக்கு எதிரான நடவடிக்கை எனும் பிரெஞ்சு நிறுவனத்தை சேர்ந்த 17 தொண்டு சேவையாளர்கள் கொலை தொடர்பான விசாரணைகள் இன்னும் நடைபெறுவதாகவும் சட்டமா அதிபர்
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVfwy.html#sthash.d6P5VOJr.dpuf

Geen opmerkingen:

Een reactie posten