தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

லண்டனில் ரகசியப் புலனாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது !

கடந்த வியாழன் அன்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், அதற்கு அருகாமையில் உள்ள விடுதி ஒன்றில் இரகசியக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாக அறியப்படுகிறது. இலங்கைப் புலனாய்வுத் துறையின் தலைவர்களில் ஒருவரான கபில ஹேந்த விதாரணவினால் லண்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிலரே இவ்வாறு ரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இதற்கு சில தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிலர் இதனைப் புறக்கணித்துள்ள நிலையில், மேலும் சில தமிழர்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள் என்றும் அறியப்படுகிறது. குறிப்பாக காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு இலங்கையில் நடைபெற்று முடிவுறும்வரை, அதற்கு பாதகமாக லண்டனில் செயல்படுவோரின் திட்டங்களை முறியடிப்பது தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளதாக ரகசியத் தகவல்கள் கசிந்துள்ளது. 

இலங்கையில் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றும், அதற்கு முதலில் இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் தேவை எனவும் லண்டனில் உள்ள சில தமிழர்களின் மண்டைகளைக் கழுவியுள்ளார்கள் இப் புலனாய்வுப் பிரிவினர். எனவே நடக்கவிருக்கும் காமன்வெலத் மாநாட்டிற்கு பாதகமாகச் செயல்படவேண்டாம் எனவும், மற்றும் அவ்வாறு செயல்படுபவர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் விரிவாக ஆரயப்பட்டுள்ளது. இதற்கமைவாக இனி வருங்காலங்களில் சில தமிழ் அமைப்புகள், மற்றும் ஊடகங்கள் மீது சேறுபூசும் நடவடிக்கையும் ஆரம்பமாகவுள்ளது. தமிழ் தேசியம் பால் செயல்படும் இதுபோன்ற சக்திகளை அடக்கவே இந்த இரகசியக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இது தொடர்பாக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் தாம் இதில் கலந்துகொள்ளவில்லை என்று, லண்டனில் உள்ள முக்கிய புள்ளியும் மற்றும் ஒரு செயல்பாட்டாளர் ஒருவருமாக இருவர் அதிர்வுக்கு இத் தகவலை வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.

Geen opmerkingen:

Een reactie posten