தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 augustus 2013

போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்! கொழும்பில் நவி பிள்ளை இடித்துரைப்பு !

இலங்கையின் இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நம்பகமான குற்றச்சாட்டுக்குள் குறித்து ,போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தனது ஏழு நாள் பயணத்தின் முடிவில் இன்று (31-08-2013)  சனிக்கிழமை தலைநகர் கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டிலேயே இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறிலங்காவில் எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த உண்மை கண்டறியும் தனது பயணத்தின் போது, தன்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சிறிலங்காவின் காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் அச்சுறுத்தலை  எதிர்கொண்டமை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், இதுபோன்ற கண்காணிப்பும், அச்சுறுத்தல்களையும் நோக்கும் போது, சிறிலங்கா மோசமான நிலையில் உள்ளது போல் தோன்றுகிறது எனவும் நவிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நவி பிள்ளையை சந்தித்த இரு தமிழ் பாதிரியார்கள் ஒருசிலரால் விசாரிக்கப்பட்டமை தொடர்பில் ஐ.நா ஆணையாளரின் கவனத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டு வந்திருந்தது.
இதேவேளை “உங்கள் பிள்ளைகளை அனுப்பின இடத்துக்கே உங்களையும் அனுப்புவதா” என முள்ளிவாய்க்கால் பகுதியில் ஐ.நா ஆணையாளிரிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த பொதுமக்களை சிறிலங்கா படையினர் அச்சுறுத்தியமை தொடர்பில் ,அம்மக்களுக்கு பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா ஆணையளரின் உடனடிக் கவனத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றிருந்தது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் தனது கோபத்தினை வெளிப்படுத்திய ஐ.நா ஆணையாளர் “இதுபோன்று நடந்து கொள்வதற்கு, என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது” சிறிலங்காவின் போக்குக்கு கண்டித்துள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு கட்டமைப்புகளினால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது என்பது, சிறிலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் என தெரிவித்த ஐ.நா ஆணையாளர் அதிகரித்துச் செல்லும் இந்நிலை தனக்கு மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில், நிலைகொண்டுள்ள உள்ள சிறிலங்கா படைக்கட்டமைப்பினை , சிறிலங்கா அரசுத் தலைவர் குறைக்க வேண்டும் எனவும் ஐ.நா ஆணையாளர் நவிப்பிள்ளை அவர்கள் இடித்துரைத்துள்ளார்.
 See more at: http://www.tamilwin.net/show-RUmryIQVMWmpy.html#sthash.ekggmAAD.dpuf

Geen opmerkingen:

Een reactie posten