தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

நவநீதம்பிள்ளையின் வருகையினை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம்

அரசு இராணுவ ஆட்சியை விரிவுப்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 09:54.17 AM GMT ]
அரசாங்கம் நாட்டில் இராணுவ ஆட்சியை விரிவுப்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் பாடசாலை கட்டமைப்பும் கல்வி கட்டமைப்பும் இராணுவமயப்படுத்தப்படும் என கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் இராணுவத்திற்கு மக்கள் மத்தியில் மரியாதை இருந்தது. அரசாங்கம் தனது இருப்புக்காக இராணுவத்தை பயன்படுத்தி வருவதால், இராணுவத்தின் பெயர் கெட்டுவிட்டது.
அதேபோல் அரச சேவையை விரிவுப்படுத்தியதாக அரசாங்கம் கூறுகிறது. அரச ஊழியர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட்டுள்ளதா என நான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறேன்.
அரசாங்கத்தின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப அரச ஊழியர்கள் பணியாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் கீழ் மட்ட வறிய நபர்களாக மாறியுள்ளனர் என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgo1.html#sthash.zRiTJnsm.dpuf

நவநீதம்பிள்ளையின் வருகையினை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 09:15.06 AM GMT ]
ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்ள இருக்கும் நிலையில் அவர் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது வருகையின் போது கிளிநொச்சி மாவட்ட அன்னையர் முன்னணியும் காணாமற் போனோர் சங்கமும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் முன்பாக மேற்கொள்ள உள்ளனர்.
இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரையும் அணிதிரளுமாறு கிளிநொச்சி மாவட்ட அன்னையர் முன்னணி மற்றும் காணாமற் போனோர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhx7.html#sthash.kg2CA9pX.dpuf

Geen opmerkingen:

Een reactie posten