தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

இலங்கையை போன்று இந்தியா, சீனா போன்ற நாடுகளும் தமிழர்களை அழிக்க முயற்சி!: வி.சுப்பிரமணியம்

இலங்கை அரசாங்கமும், இந்தியா, சீனா போன்ற நாடுகளும் தமிழர்களை தொடர்ந்தும் அழித்துக் கொண்டிருப்பதாக வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித் து யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர் உரையாற்றுகையில்,
யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் கரையோர மக்களே. ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கரையோர மக்களுக்கு நின்மதி கிடைக்கவில்லை. கடந்த 4 வருடங்களில் அரசாங்கமும், மக்கள் பிரதி நிதிகளும் அந்த மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.
ஒரு நாள் தொழிலில் 2 கிலோ மீன் பிடிக்க முடியாத நிலையில் இன்று கரையோர மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்திய ரோலர்கள் ஒருபுறம், தென்னிலங்கை மீனவர்கள் மறுபுறம் என எங்கள் கடல் வளத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களே முதலில் இந்திய ரோலர்களை பிடித்தோம். ஆனால் அதில் வந்திருந்தவர்கள் மிகவும் அப்பாவிகள்.
அதன் பின்னர் இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தினோம். ஆனால் அங்கு எமக்கு கூறப்பட்ட பதில் இரண்டு நாட்டு அரசாங்கங்களுமே இந்த விடயத்தை பேசித் தீர்க்கவேண்டும் என்று. எனவே எங்கள் கடல் வளம் அழிக்கப்படுவது இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியாமல் இல்லை.
அவர்கள் தெரிந்து கொண்டே அனுமதிக்கிறார்கள். ஏனென்றால் அழிவது தமிழன்தானே. இதுபோதாதென்று இலங்கை கொடிகளுடன் 150அடி நீளமான படகுகள் கடலில் தொழில் செய்வதை இந்தியா அவதானித்து விட்டது. அதன் பின்னர் முன்னரிலும் பார்க்க அதிகளவான ரோலர்கள் எமது பகுதிக்குள் வருகின்றன.
இந்த நிலையில் கரையோர மக்கள் யாருக்கு எதிராகப் போராடுவது? சீனாவுக்கு எதிராக போரா ட முடியுமா? இந்தியாவுக்கு எதிராக போராட முடியுமா? இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராடத்தான் முடியுமா? இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு மீனவனும் தன்னுடைய வயற்றுப் பிழைப்பை, குடும்பத்தைப் பார்க்க வேண்டும். 
எனவே கரையோர மக்களின் இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அதற்காகவே நாங்கள் தேர்தலில் இறங்கியிருக்கின்றோம். அதற்காக நாங்கள் போராடுவோம் என்றார்.
 http://www.tamilwin.net/show-RUmryIRZMVgxy.html#sthash.cXocfuOM.dpuf

Geen opmerkingen:

Een reactie posten